காகத்திற்கு வைக்கும் இந்த உணவுகளால் கூட உங்கள் முன்னேற்றம் தடைபடும் என்பது உங்களுக்கு தெரியுமா? காகத்திற்கு வைக்க வேண்டிய, கட்டாயமாக வைக்கவே கூடாத உணவுக்கள்.

crow
- Advertisement -

நம் பழங்காலம் தொட்டு இன்று வரை காகத்திற்கும் நமக்கும் ஆன தொடர்பு இருந்து கொண்டே தான். பறவைகளுக்கு உணவு வைப்பது என்பது இன்று நேற்று அல்ல நாம் பழங்காலம் தொட்டு செய்து வருகிறோம். அப்படி வைக்கும் உணவில் நாம் சிலவற்றை வைக்கவே கூடாது என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது. அப்படி எந்த மாதிரியான உணவுகளை நாம் காகத்திற்கு வைக்கக் கூடாது என்பதை பற்றிய தெரிந்து கொள்வதற்கான பதிவு தான் இது.

உலகில் எத்தனையோ ஜீவராசிகள் இருந்தாலும் இந்த காகத்திற்கு மட்டும் நாம் இவ்வளவு முக்கியத்துவம் வருகிறோம். முதலாவது இந்த காகங்களை இறந்த நம் மூதையர்களாக நினைத்து வணங்கி வருகிறோம். இன்னொன்று காகம் ஆனது சனீஸ்வரனின் வாகனம். அவரை வணங்கும் விதமாகவும், அவரை திருப்திப்படுத்தும் விதமாகவும் நாம் காகத்திற்கு சாதம் வைக்கும் முறையும் தொடர்ந்து வருகிறோம். இதனாலே தான் மற்ற ஜீவராசிகளை விட காகத்தை நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

- Advertisement -

இந்த காகத்தை வைத்து சாஸ்த்திரங்கள் நமக்கு நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறது. காகம் நம் வீட்டில் வந்து அமர்வது முதல் உணவு முதல் அவைகள் அமரும், பார்க்கும் என ஒவ்வொரு விஷயத்திற்கும் பல செய்திகள் உண்டு. நமக்கு வரும் நம்மை தீமைகளை முன்னுணர்ந்து அறிவிப்பது போல இன்னும் பல விஷயங்கள் காகத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த காகத்திற்கு தினமும் நாம் உணவு வைப்பது என்பது நம் குடும்பத்திற்கு அத்தனை நலன்களையும் கொடுக்கும். எந்த வீட்டில் தினமும் காகம் வந்து அமர்ந்து சாதம் உண்டு செல்கிறதோ, அந்த வீட்டில் எந்த தீங்கும் சீக்கிரத்தில் நடக்காது என்பது நம் முன்னோர்களின் வாக்கு.

- Advertisement -

இந்த காகத்திற்கு நாம் வைக்கும் உணவில் மீந்த பழைய, கெட்டு போன உணவுகளை கட்டாயமாக வைக்கவே கூடாது. ஏனெனில் காகமானது தெய்வம், நம் முன்னோர் இரண்டிற்கும் சமமான ஒரு பறவை. அந்த காகத்திற்கு நாம் வீட்டில் மீந்து போன பழைய சாதம், கெட்டுப் போனவை போன்றவைகளை வைக்கும் போது நம் குடும்பத்திற்கு நல்லது கிடையாது, நம் முன்னேற்றத்திற்கும் இது தடையாகும். பறவைகளுக்கு தானியங்களை உணவாக படைப்பது நமக்கு வீட்டில் நல்ல ஒரு சுபிட்சத்தை கொடுக்கும்.

நாம் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் பணத்தடை போன்றவற்றை நீக்கவும், அதே நேரத்தில் சனியின் உக்கிர பார்வை இருந்தால் எள்ளு சாதம் வைக்கும் பழக்கமும் நமக்கு உண்டு. இதில் கொஞ்சம் மாற்றம் செய்து காகத்திற்கு நாம் வைக்கும் ஒரு சாதம் நம் பல பிரச்சனைகளை தீர்த்து விடும் என்றால் அதையும் நாம் கொஞ்சம் செய்யலாம் தானே? அதற்கு நம் வீட்டில் எப்பொழுதும் தோசை மாவு இருக்கவே செய்கிறது. அதில் ஒரு சின்ன தோசை ஊற்றி கொஞ்சம் சர்க்கரை, எள் இரண்டையும் கலந்து ஊற்றி காகத்திற்கு வைத்தால் நல்லது. இந்த மாவில் சேர்ந்து இருக்கும் உளுந்து ராகு கிரகத்திற்குரியது, இதிலிருக்கும் சர்க்கரை சுக்கிரனுக்குரியது, எள் சனி பகவானுக்கு கூறியது, இந்த மூன்றையும் கலந்து நாம் வைக்கும் போது நம் முன்னேற்றத்திற்கு இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி நம் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

மனிதன் வாழ்வில் அதிக பிரச்சனைகளை சந்திப்பதே இந்த சனி திசையில் தான். அந்த பிரச்சனையை எளிதில் சரி செய்ய ஒரு சின்ன பரிகாரம் தான் இப்படி உணவு வைப்பது. நீங்களும் இது போல காகத்திற்கு சாதம் வைப்பது குறித்து தெரிந்து கொண்டு, இனி தினம் அதை பின்பற்றி பயன் அடையுங்கள்.

- Advertisement -