சனி பகவான் வக்கிர பெயர்ச்சி பரிகாரம்

sanibagavan1
- Advertisement -

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு கர்ம வினையின்படி நல்லது கெட்டதையும், இன்பத் துன்பங்களையும் தவறாமல் கொடுக்கக்கூடிய, நீதிமான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை காலம் வரை பயணம் செய்வார். வருடத்திற்கு ஒருமுறை நான்கு மாதம் வக்கிரகதியில் சனி பகவான் பயணம் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்று (29-06-2024) சனி வக்கிரப் பெயர்ச்சியானது நிகழவிருகின்றது. இந்த சனி வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலனை கொடுக்கவில்லையா. கவலையே படாதீங்க. பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை பின்பற்றினால், சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறையும். அது என்னென்ன பரிகாரம் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

சனி வக்கிர பெயர்ச்சி பரிகாரம்

ஈசன் பட்டம் பெற்ற சனீஸ்வரரை சமாளிக்க அந்த ஈசனால் மட்டும்தான் முடியும். வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு அடிக்கடி சென்று சிவனை தரிசனம் செய்து வழிபாடு செய்யுங்கள். சிவன் கோவிலில் இருக்கும் நவகிரகத்தில் இருக்கும் சனிபகவானுக்கு கடுகு எண்ணெய் கொண்டு தீபம் போடுவது சனி வக்கிரத்தை குறைக்கும். அல்லது எள் தீபமும் ஏற்றலாம்.

அடுத்தபடியாக உங்க வீட்டு பக்கத்தில் அனுமன் கோவில் இருக்கிறதா. சனிக்கிழமை தோறும் ஹனுமன் கோவிலுக்கு சென்று ஜெய் ஸ்ரீ ராம் மந்திரத்தை சொல்லி அனுமனை 3 முறை வலம் வந்தால் சனி பகவான் உங்களுக்கு தொல்லை கொடுக்க மாட்டார்.

- Advertisement -

ஒரு சனிக்கிழமை வெண்கல கிண்ணத்தில் நல்லெண்ணையை நிரப்பி அதில் உங்கள் முகத்தை பார்த்து, அப்படியே கிண்ணத்தோடு அந்த எண்ணெயை ஒரு பிராமணருக்கு தானம் கொடுப்பது சிறப்பு.

குதிரை பயன்படுத்தி, நன்றாக தேய்ந்த லாடம் கிடைத்தால், அதை வாங்கி அந்த இரும்பிலிருந்து மோதிரம் செய்து, அதை வலது கையின் நடுவிரவில் அணிந்து கொண்டாலும் சனி வக்கிரம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சனிக்கிழமை என்றால் எள் சேர்த்த சாதத்தை காக்கைக்கு வைக்கவும் உங்களால் முடிந்த எள் சாதத்தை அன்னதானம் செய்யலாம். முடிந்தால் காக்கைக்கு தினமும் சாதத்தில் சேர்த்து வைப்பது சனிபகவானால் வரக்கூடிய பிரச்சினைகளை குறைக்கும்.

மேல் சொன்ன பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் அடையலாம். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, கண்களை மூடிக்கொண்டு ஊனமுற்றவர்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு தான தர்ம காரியங்கள் செய்யுங்கள். பிரதிபலன் பார்க்காமல் நீங்கள் செய்யும் இந்த உதவி, உங்களுக்கு சனிபகவான் வரக்கூடிய பிரச்சனைகளை குறைக்கும் என்று சொல்கிறது ஆன்மீகம்.

இதையும் படிக்கலாமே: 29-06-2024 சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்.

இதை நீங்கள் ஆன்மீக ரீதியாக செய்ய வேண்டாம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மையோடு செய்தாலும், இதன் மூலம் உங்களுக்கு நல்ல பலனே கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -