சனிக்கிழமை இந்த 3 பொருட்கள் வாங்குவதை அறவே தவிர்த்து விடுங்கள். குடும்பத்திற்கு நல்லது அல்ல.

sanibagavan
- Advertisement -

சாத்திர சம்பிரதாயங்களில் சொல்லி வைத்திருக்கும் சில விஷயங்களை, நமக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அதை நாம் பின்பற்றுவது நல்லது. பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி என்று சொல்லுவார்கள். நீங்கள் என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று ஏடாகூடமான வேலைகளை செய்தால், குடும்பத்திலும் ஏடாகூடமான பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அந்த வரிசையில் தப்பி தவரியும் கூட சனிக்கிழமை அன்று வாங்கக்கூடாத மூன்று பொருட்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒருவேளை ஏதோ ஒரு சூழ்நிலை இந்த மூன்று பொருட்களில் ஏதாவது ஒன்றை வாங்க வேண்டிய கட்டாயமாகிவிட்டது. அதன் மூலம் குடும்பத்திற்கு தோஷம் ஏற்படாமல் இருக்க என்ன பரிகாரம் செய்வது என்பதும் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் படித்து பலன் பெறலாம்.

சனிக்கிழமை கட்டாயம் வாங்க கூடாதா 3 பொருட்கள் என்னென்ன:
பெரும்பாலும் இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் தெரியாதவர்களுக்காக இந்த பதிவு. துடைப்பம், வீடு துடைக்கும் மாப், வீடு சுத்தம் செய்யும் ஒட்டடை குச்சி, குப்பை கூடை, முறம் இவைகளை சனிக்கிழமை வாங்காதீர்கள். இந்த பொருட்கள் எல்லாம் பழைசாகிவிட்டால் சனிக்கிழமை அன்று இவைகளை குப்பையில் தூக்கி போடவும் கூடாது. எண்ணெய் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் சனிக்கிழமை வாங்காதீர்கள். இரும்பு சம்மந்தப்பட்ட எந்த விஷயத்தையும் சனிக்கிழமை வாங்காதீர்கள். தலைக்கு தேய்க்கும் எண்ணெய் சமைக்கும் எண்ணெய் எந்த எண்ணெயாக இருந்தாலும் சனிக்கிழமை வாங்குவதை அறவே தவிர்த்து விடுவது நல்லது. கத்திரிக்கோல், ஊசி, அருவாமனை, சமையலுக்கு தேவையான தோசை கல் இப்படி கூட எதையுமே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமை வாங்க கூடாது.

- Advertisement -

ஒரு உதாரணத்திற்கு வீடு கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இரும்பு சம்பந்தப்பட்ட பொருள் சனிக்கிழமை லாரியில் வந்துவிட்டது. காசு கொடுத்து அதை இறக்கி தானே ஆக வேண்டும். வேறு வழியே கிடையாது. இந்த நேரத்தில் என்ன செய்வது. அந்த இரும்பு கம்பியோடு சேர்த்து இன்னும் சில பொருட்களையும் கூடுதலாக வாங்கிக் கொள்ளுங்கள். செங்கல் மணல் மறச்சாமான்கள் இப்படி ஒட்டுமொத்தமாக வாங்கும் போது அது நமக்கு பிரச்சனையை கொடுக்காது.

அதேபோல சனிக்கிழமை அன்று உங்கள் கையால் எண்ணெயை அடுத்தவர்களுக்கு கொடுக்கவும் கூடாது. இன்னொருவர் வீட்டில் இருந்து எண்ணெயை உங்களுடைய வீட்டிற்கு கொண்டு வரவும் கூடாது. நேரமும் காலமும் சூழ்நிலையும் உங்களை சனிக்கிழமை இரும்பு பொருள் வாங்க வைத்து விட்டது. துடைப்பம் முறம் எண்ணெய் போன்ற பொருட்களையும் வாங்க வைத்து விட்டது. இதை வீட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பு என்ன பரிகாரம் செய்வது.

- Advertisement -

இந்த பொருட்கள் கூடவே ஒரு சின்ன எலுமிச்சம் பழத்தை வாங்கி வீட்டிற்குள் கொண்டு வாருங்கள். எந்த தோஷமாக இருந்தாலும் அதை நிவர்த்தி ஆகிவிடும். பிறகு இரண்டு மூன்று நாட்கள் கழித்து அந்த எலுமிச்சம் பழத்தை குப்பை தொட்டியில் தூக்கி போட்டு விட வேண்டும். அதற்காக வேணும்னே இரும்பு பொருள்களை, சனிக்கிழமை வாங்கி, எலுமிச்சம் பழத்தை வாங்கினால் அது தவறு. எதிர்பாராத சூழ்நிலையில் தவறு நடந்து விட்டால் இந்த பரிகாரத்தை பின்பற்றலாம்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் இப்படி போட்டு வைத்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி, யாராலும் வெல்ல முடியாத ஆளுமையுடன் செல்வாக்குடனும், மதிப்புடனும் வாழ வைக்கும் அற்புத திலகம்.

சில பேருக்கு சனி பெருக்கும் என்று சொல்லுவார்கள். சில பேருக்கு சனி சருக்கும் என்று சொல்லுவார்கள். எதுவாக இருந்தாலும் நாம் இந்த தவறை செய்ய வேண்டாமே. முன்னோர்கள் சொல்லி வைத்திருந்தால் அதற்கு பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். குடும்பத்தில் நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மேல் சொன்னா ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -