ஜாதகத்தில் உள்ள சனி தோஷம் நீங்க பரிகாரம்.

jathagam sani bhagavan
- Advertisement -

ஒருவருடைய ராசியில் சனி பகவானுடைய ஆதிக்கம் வந்து விட்டால் அவர் வாழ்க்கையில் படாத பாடு பட வேண்டும். ஆகையால் தான் சனிபகவானை கண்டாலே அனைவரும் அலறுகிறார்கள். இவர் நீதிமான் போல செயல்படுவார். ஒருவருடைய வாழ்க்கையில் அவர்கள் செய்யும் நன்மை தீமைக்கு ஏற்ப கொஞ்சமும் பாராபட்சம் பார்க்காமல் பலன்களை தருபவர் இந்த சனி பகவான் தான்.

இவர் எந்த அளவிற்கு நம்முடைய தீமைக்கு பலன் தருகிறாரோ, அதே அளவுக்கு நம்முடைய நல்ல செயல்களுக்கும் பலனை தருவார். அதனால் தான் கொடுத்தால் சனி போல் கொடுப்பார் இல்லை எடுத்தால் அவரைப் போல் எடுப்பார் இல்லை என்ற ஒரு பழமொழியும் வழக்கத்தில் உள்ளது. வெறும் பழமொழி மட்டும் அல்ல நடைமுறையிலும் சனி பகவான் ஆதிக்கம் ஆரம்பிக்கும் காலத்தில் ஒருவர் படும் இன்னல்களுக்கு பதிலாக அவர் விலகும் போது பல மடங்கு நன்மைகளையும் செய்து விட்டு செல்வார்.

- Advertisement -

அத்தகைய சனி பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் வந்து அமர்ந்து அவருடைய பாவத்திற்கேற்ற பலனை அளிக்கும் போது அதன் தாக்கத்திலிருந்து குறைய திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று தங்கி அவரை வழிபாடு செய்து வருவார்கள். இந்த வழிபாட்டு முறையும் எல்லோராலும் செய்ய முடியாது. அப்படியானவர்கள் இந்த முறையில் எளிமையாக வழிபாடு செய்யும் பொழுது திருநள்ளாறு சென்று வழிபட்டு பலனை அடையலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதை என்ன பரிகாரம் எப்படி செய்வது என்பதை எல்லாம் ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்

ஜாதகத்தில் சனியின் தாக்கம் குறைய

சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாம் காகத்தை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். காகத்தை வைத்து என்ன பரிகாரம் செய்வது என்று யோசிக்கலாம். சனிபகவானுடைய வாகனமாக விளங்குவது இந்த காகம். ஆகையால் தான் சனிக்கிழமையில் காகத்திற்கு எள் சாதம் வைப்பது சனீஸ்வர பகவானுக்கு செய்வதாக கருதப்படுகிறது .

- Advertisement -

இதற்கு நீங்கள் காக்கை கூடு கட்டி இருக்கும் மரத்தை தேர்வு செய்ய வேண்டும். இது மட்டும் தான் இந்த பரிகாரத்தில் நீங்கள் சிரமப்பட்டு செய்ய வேண்டிய காரியம். அந்த மரத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கொள்ளுங்கள். அடுத்து அந்த மரத்திற்கு கீழே ஏழு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அத்துடன் ஊதுபத்தியும் ஏற்றி மரத்திற்கு தீபாராதனை காட்டுவது போல காட்டி அங்கேயே சொருகி வைத்து விடுங்கள்.

இதை செய்த பிறகு அந்த மரத்தை ஏழு முறை சுற்றி வர வேண்டும். இப்படி சுற்றும் போது வலமிருந்து இடமாக தான் சுற்ற வேண்டும். அதன் பிறகு அந்த மரத்தை தொட்டு வணங்கி விடுங்கள். அதன் பிறகு அந்த மரத்தடியில் சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்து இருங்கள். இப்படி வணங்கி வரும் வேளையில் அந்த கூட்டில் இருக்கும் காகத்தின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதுவே சனி பகவான் நமக்கு நேரடியாக அருள் புரிந்ததாக அர்த்தம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை திருநள்ளாறு சென்று தங்கி வணங்க முடியாதவர்கள் அதாவது அவர்களுக்கு வசதி இல்லை அங்கு சென்று செய்ய என்பவர்கள் மட்டும் இது போல பரிகாரங்கள் செய்த அதற்கான பலனை ஊரளவிற்கு பெறலாம். ஒரு வேளை உங்களால் திருநள்ளாறு செல்ல முடியும் அந்த அளவிற்கு பொருளாதாரத்தில் பிரச்சனை இல்லை எனும் பட்சத்தில் கட்டாயமாக நீங்கள் அதையே மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: ராகு கேது பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சூட்சம பரிகாரம்

இந்த பரிகாரங்கள் செய்வது ஒரு புறம் இருந்தாலும் சனீஸ்வரன் ஆனவர் நம்முடைய பாவங்களுக்கான பலனாக தான் நமக்கு சோதனைகளை தருவார் ஆகையால் நாம் வாழும் இந்த வாழ்க்கையில் யாருக்கும் கெடுதல் செய்யாமல் நல்ல முறையில் வாழ்ந்தாலே நமக்கு எந்த கிரகத்தின் பாதிப்பும் பெருமளவு இருக்காது என்ற இந்த கருத்தையும் மனதில் கொண்டு இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருக்கும் நம்பிக்கையோடு செய்து பலன் அடையலாம்.

- Advertisement -