சங்கடத்தை தரும் சனிபகவானை வழிபாடு செய்து அவரை நம்முடைய நண்பனாக மாற்றிக்கொண்டால், பிரச்சினையே கிடையாது. நமக்கு அவர் சங்கடங்களை கொடுக்கவே மாட்டார். அதற்காக சனி பகவானை வழிபாடு செய்து விட்டு, அடுத்தவர்களுக்கு சங்கடம் தரும் துரோகத்தை நாம் செய்யும் போது, சனி பகவான் அதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாவும் இருக்க மாட்டார்.
சனிபகவானை நீங்கள் வழிபாடு செய்து உங்களுடைய குடும்பத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தால், நீங்கள் நீதிமானாக நேர் வழியில் நடப்பவர்களாக மாறிவிட வேண்டும். அப்போது தான் உங்களுக்கு சனி பகவான் நல்லதை மட்டும் செய்வார். தவறு செய்பவர்களாக இருந்தால், நிச்சயமாக செய்த தவறுக்கு தண்டனை உண்டு.
சனி பகவானின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்றால் நிலை வாசலில், சனி பகவானையே நம் குடும்பத்திற்கு பாதுகாப்பாக நிற்க வைக்க வேண்டும் என்றால், என்ன வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
சங்கடம் தீர்க்கும் சனி பகவான் வழிபாடு
முதலில் இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் கட்டி பெருங்காயம். அதை கொஞ்சம் சுடுதண்ணீரில் போட்டு, கரைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக உங்களுக்கு பெருங்காய தண்ணீர் கிடைத்திருக்கும் அல்லவா. அந்த பெருங்காய தண்ணீரில் விளக்கு திரியை போட்டு 1 மணி நேரம் ஊற வைத்து விடவும்.
பிறகு அந்த திரிகளை எடுத்து காய வைத்து ஒரு டப்பாவில் போட்டு, ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். முன்கூட்டியே இந்த திரிகளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். சனிக்கிழமை தோறும் காலை அல்லது மாலை ஏதாவது ஒரு நேரம் உங்கள் சௌகரியம் போல, தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
காலை 6:00 மணிக்கு இந்த விளக்கை ஏற்றலாம். மாலை 6:00 மணிக்கு இந்த விளக்கை ஏற்றலாம். நிலை வாசல் படியில் இரண்டு பக்கமும், ஒவ்வொரு மண் அகல் விளக்குகளை வைத்து சுத்தமான மர செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஊற்றி, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் பெருங்காயத் திரியை அந்த எண்ணெயில் போட்டு குலதெய்வத்தையும், சனி பகவானையும் முழு மனதோடு நினைத்து, இந்த விளக்கை ஏற்றி வைக்கவும்.
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமை யில் இந்த பெருங்காயத் திரி போட்ட தீபத்தை ஏற்றி சனி பகவானை நினைத்து வழிபாடு செய்தால், உங்கள் வாழ்வில் தீராத துன்பங்கள் எல்லாம் தீரும். எதிரி தொல்லை விலகும். சனி பகவானால் வரக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். உங்கள் குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் வழிபாடு
இதே போல தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகள் நிலை வாசல் படியில் இந்த விளக்கை ஏற்றி வர நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்ல வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் வரும் சமயத்திலும், சனிக்கிழமை அன்று மறக்காமல் உங்கள் வீட்டில் இருப்பவர்களை நிலை வாசலில் இந்த விளக்கை ஏற்ற சொல்லலாம். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.