பெரிய பெரிய வேண்டுதல்கள், பெரிய பெரிய பிரார்த்தனைகள், பலிப்பதற்கு தான் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. அன்றாடம் உங்களுடைய சின்ன சின்ன ஆசைகள் நிறைவேற, தினம் தினம் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கவும், இறைவனை வழிபாடு செய்யலாம். அது எப்படி தெரியுமா.
உங்களுடைய மனதிற்கு சஞ்சலம் தரக்கூடிய சமயம் வரும்போது, சின்ன பிரச்சனை தான், பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை வந்திருக்கும். மனஸ்தாபம் வந்துவிடும். இந்த சண்டை சரியாகி விட்டால் மனது ரொம்ப ரொம்ப நிம்மதியாக இருக்கும். எனை அறியாமல் சண்டை போட்டு விட்டேன், என்று சண்டை போட்ட பிறகு நாம் சிந்திப்பது உண்டு.
தினம் தினம் சண்டை போடும் கணவர் இந்த ஒரு நாள் மட்டும் என்னிடம் சண்டை போடாமல் இருந்தால் சந்தோஷமாக இருக்கும். என்னுடைய பிள்ளை என் பேச்சை கேட்க வேண்டும். என் பிள்ளைக்கு இன்னைக்கு பள்ளிக்கூடத்தில் பேச்சுப்போட்டி இருக்கிறது. கட்டுரை போட்டி இருக்கிறது, அதில் அவன் ஜெயிக்க வேண்டும். இப்படி சின்ன சின்ன ஆசைகள் ஏராளம், அன்றாட வாழ்வில் வரும் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏராளம், நம்முடைய மனதில் இருக்கிறது.
எல்லா நல்ல விஷயங்கள் நடப்பதும் அந்த இறைவனின் கையில் தான் இருக்கிறது. சில பேர் எல்லாம் வீட்டில் அதிரசம் சுடுவதற்கு முன்பு கூட விநாயகர் பாதத்தில் ஒரு ரூபாய் வைப்பார்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துவிட்டு பலகாரங்கள் செய்ய துவங்குவார்கள். இப்படி தவங்கக்கூடிய காரியங்கள் மிக மிகச் சிறப்பாக நடந்து முடியும். நீங்கள் நன்றாக கவனித்தால் இதை கண்டுபிடிக்கலாம். நம்முடைய பாட்டி நம்முடைய அம்மா எல்லாம் இதை பின்பற்றி பார்த்திருப்போம். இதே போல ஒரு சில அன்றாட வழிபாட்டு முறைகளை பரிகாரங்களை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
சின்ன சின்ன வேண்டுதல்கள் பலிக்க
சின்ன சின்ன வேண்டுதல்கள் பலிக்க வேண்டுமா? வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு என்னென்ன பொருட்களை வாங்கிக் கொடுப்பது வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு கற்பூரம் வாங்கி கொடுப்பதாக வேண்டிக் கொள்ளலாம். 11 ரூபாய்க்கு கற்பூரம் வாங்கி உன் கோவிலில் ஏற்றுகின்றேன் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சின்ன சின்ன கஷ்டங்கள் சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம், காணாமல் போய்விடும்.
கற்பூரம் எரிந்து எப்படி காணாமல் போகிறது. கண்ணுக்கு தெரியாமல் காற்றோடு காற்றாக கரைந்து போகிறது. மிச்சம் சாம்பல் கூட இருக்காது. அது போல தான் உங்களுடைய கஷ்டங்களும் துன்பங்களும் பறந்து ஓடிவிடும். இன்றைய சூழ்நிலையில் நிறைய கோவில்களில் கற்பூரம் ஏற்றுவதற்கு அனுமதி கிடையாது. அனுமதி இருக்கும் கோவில்களில் கோவில் சன்னிதானத்திற்கு வெளிப்பகுதிகளில் கூட இந்த கற்பூரத்தை நீங்கள் வாங்கி ஏற்றலாம். தெரு முனையில் இருக்கும் பிள்ளையாருக்கு ஏற்றுங்கள். அரச மரத்தடி பிள்ளையாருக்கு கற்பூரம் ஏற்றுங்கள். நிச்சயம் உங்கள் கஷ்டங்கள் காணாமல் போகும்.
இது தை மாதம். அம்மன் வழிபாட்டிற்கு மிக மிக சிறப்பான மாதம். நிறைய பேருடைய குடும்பங்களில் இன்று சுப காரிய தடை இருக்கிறது. திருமண தடை இருக்கிறது. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு இருக்கிறது. ஒரே வீட்டில் வாழும் கணவன் மனைவி ரொம்ப நாட்களாக பேசிக்கொள்ளாமல் இருப்பார்கள். ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள மாட்டார்கள். கட்டாயத்திற்காக ஒரு வீட்டிலேயே வாழுவார்கள்.
பிரிந்து செல்வதை விட இது ரொம்ப ரொம்ப கொடுமை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் மாமியார் மருமகள் சண்டை, குடும்பத்தில் உறவுகளோடு ஒற்றுமை இல்லை என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இதுபோல உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் இது கொஞ்சம் பெரிய விஷயம். வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு 1 கிலோ குங்குமம் வாங்கி தருவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.
இரண்டு விளக்கு போட்டு அம்பாளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அடுத்த மாதத்திற்குள் இந்த பிரச்சனையை மட்டும் “கொஞ்சம் தீர்த்து வை அம்மா” என்னுடைய கணவரோடு நான் சேர்ந்து வாழ வேண்டும். என்னுடைய மனைவியோடு நான் சேர்ந்து வாழ வேண்டும், என்று கணவர் பிரார்த்தனை செய்துகொண்டு, இது நிறைவேறிவிட்டால் உன்னுடைய கோவிலுக்கு 1 கிலோ குங்குமம் வாங்கி தருகின்றேன் என்று சொல்லி அந்த குங்குமத்தை தானம் செய்யுங்கள்.
சாதாரண குங்குமமாக வாங்கி கொடுக்கக் கூடாது. இந்த குங்குமத்தை பெண்களுக்கு கொடுத்தால் அவர்களுடைய நெற்றியில் அலர்ஜியெல்லாம் வரக்கூடாது. நல்ல வாசம் நிறைந்த மீனாட்சியம்மன் குங்குமம், தாழம்பு குங்குமம் வாங்கி தானம் கொடுங்கள் விலை உயர்ந்த குங்குமமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது விலை உயர்ந்த குங்குமம் தான் கலப்படம் இல்லாமல் இருக்கிறது அதற்காகத்தான். சின்ன சின்ன பிரார்த்தனைகள் இருந்தால் 100 கிராம் குங்குமம், 200 கிராம் குங்குமம் கூட நீங்கள் அந்த அம்பாளுக்கு வாங்கிக் கொடுக்கலாம் அது உங்களுக்கு பெரிய அளவில் மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: வெற்றிக்கு மேல் வெற்றி பெற வழிபாடு
அதேபோல கோவில்களில் தூபம் போடுவார்கள். வாசம் நிறைந்த சாம்பிராணி வகையை ஏற்றுவார்கள். இதுபோல மனம் நிறைந்த பொருட்களை எல்லாம் நீங்கள் இந்த தை மாதத்தில் வாங்கி தானம் கொடுக்கலாம். சின்ன சின்ன விஷயத்திற்கு கூட சுவாமிக்கு ஒரு கற்பூரம் ஏற்றுவதாக வேண்டிக் கொண்டாலும் நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். எக்காரணத்திலும் எந்த சூழ்நிலையிலும் இறைவனை மறக்காதீங்க. இறைவனது பாதங்களை பற்றிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.