சாப்பிடும் சாப்பாட்டில் அடிக்கடி முடி விழுதா? இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்பட்டு விடும். சாப்பாட்டில் முடி வராமல் இருக்க என்னதான் செய்வது?

food
- Advertisement -

சாப்பாட்டில் முடி விழுவதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. கவன குறைவு ஒரு காரணம். கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலை இந்த முடியின் மூலம் நம்முடைய வயிற்றுக்குள் அனுப்ப முடியும்‌. நெகட்டிவ் எனர்ஜி ஒரு காரணம். கெட்ட சக்திகளை இந்த முடியின் மூலமாக கூட எதிராளிகள் நம் வீட்டிற்கு அனுப்புவார்கள். அலட்சியமாக நீங்கள் சமைத்தால் வீட்டை அசுத்தமாக வைத்திருந்தால், நிச்சயமாக சாப்பாட்டில் முடி இருக்கும்.

உங்களுக்கு கெட்ட நேரம், எதிரிகளின் சூழ்ச்சி காரணமாக முடியை சாப்பாட்டில் விழ வைக்கவும் முடியும். சாப்பாட்டில் முடிவிழ உங்களுடைய அலட்சியம் ஒரு காரணமாக இருந்தால் அதை நீங்கள் தான் திருத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் அடிக்கடி சாப்பாட்டில் முடி வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.

- Advertisement -

உங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சனை இருந்தால், எவ்வளவு கவனமாக இருந்தும் சாப்பாட்டில் முடி வருகிறது என்றால், நீங்கள் அதை தவிர்க்க என்ன செய்வது. இதற்கும் ஆன்மீகம் எளிமையான ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அடிக்கடி சாப்பாட்டில் முடி இருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்:
சமையலறையில் ஒரு சின்ன டப்பாவில் எப்போதும் இந்த மூன்று பொருட்களை போட்டு வைக்க வேண்டும். வேப்ப இலை, துளசி இலை, பச்சை கற்பூரம், கொஞ்சம் கொஞ்சமாக இந்த மூன்று பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு அதனுடைய வாசம் வெளியில் வரும்படி ஏதாவது ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

டப்பாவிலிருந்து வெளிவரக்கூடிய வாசம் உங்கள் சமையல் அறையில் இருக்கும் நெகடிவ் எனர்ஜியை முழுமையாக நீக்கிவிடும். ஏதாவது ஒரு நெகட்டிவ் எனர்ஜி உங்களுடைய சமையலறையில் தங்கி இருந்தால் உங்கள் குடும்பத்தை கெடுப்பதற்கு யாரேனும் சூழ்ச்சி செய்வதாக இருந்தாலும் கூட அந்த நெகட்டிவ் எனர்ஜியை அடித்து விரட்டி அடிக்கக்கூடிய தன்மை இந்த மூன்று பொருட்களுக்குமே உண்டு.

இந்த இலைகள் காய்ந்த பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை உள்ளே இருக்கும் பொருட்களை மாற்றினால் போதும். இந்த எளிமையான பரிகாரத்தை செய்தால் சமையலறை தூய்மை பெறும். அதாவது கண்ணுக்கு தெரியாத எதிர்மறை சக்திகள் இருந்து விடுபடும்.

- Advertisement -

நன்றாக கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நடு வீட்டிலேயே தலைமுடியை விரித்து போட்டு சீவுவது, சேவிங் செய்வது, முடி வெட்டுவது போன்ற வேலைகளை செய்யவே கூடாது. உங்களுடைய அலட்சியம் காரணமாக முடி சாப்பாட்டில் விழுந்தால் அதை மாற்றிக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் சாப்பாட்டில் அடிக்கடி முடி வருகிறது என்றால், மட்டும் கொஞ்சம் கவனம் எடுத்து மேல் சொன்ன பரிகாரத்தை செய்தால் போதும். என்றாவது ஒருநாள் சாப்பாட்டில் முடி இருந்தால் அதை வைத்து மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: வாரம் ஒரு முறை இந்த தண்ணீரை வீட்டில் தெளித்தால், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அது படிப்படியாக குறையும்.

சாப்பாட்டில் முடி இருந்து அது வயிற்றுக்குள் சென்று விட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீர்க்க முடியாத வயிறு உபாதைகள் ஏற்பட்டு விடும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் நமக்கு வரும். ஆகவே சமைக்கும் போது பெண்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -