உணவு உண்ணும் பொழுது மூச்சு வாங்குவது எதனால்? சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீங்க பிரச்சனை உங்களுக்கு தான்!

eating-breathing
- Advertisement -

மூச்சு வாங்குதல் என்பது சாதாரண பிரச்சனை அல்ல! ஆனால் அது இந்த காலகட்டத்தில் எல்லோருக்கும் இருப்பதால் பெரிதாக நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். நம்முடனே இருப்பதால் அதற்கு பழகியும் வருகிறோம். நாளடைவில் இதன் தீவிரம் அதிகமாகும் போது தான் பிரச்சனையின் வீரியத்தை உணர முடிகிறது. சாப்பிடும் பொழுது மூச்சு வாங்குகிறது என்றால் அது எதனால்? என்கிற ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை தான் இந்த பதிவில் இனி பார்க்க இருக்கிறோம்.

உணவு உண்ணும் பொழுது மூச்சு வாங்குதல் பிரச்சனை சிலருக்கு இருப்பது உண்டு. இந்த சமயத்தில் இதயமானது வேகமாக துடிப்பது போல தோன்றும். சிலருக்கு குமட்டல், மார்பு வலி போன்ற தொந்தரவுகளும் உண்டாகும். இந்த அறிகுறிகள் எல்லாம் இல்லாமலும் மூச்சு வாங்குதல் இருக்கக்கூடும். இப்படியான பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? தீர்வு என்ன?

- Advertisement -

பொதுவாக நம் முன்னோர்கள் சாப்பிடும் பொழுது உணவை மென்று நன்கு கூழாக்கி பின்னர் தான் முழுங்க வேண்டும் என்று கூறுவார்கள். சாப்பிடும் உணவு சாப்பிடும் பொழுதே பாதி அளவிற்கு ஜீரணம் ஆகி விட வேண்டும். அதன் பிறகு தான் உணவை உள்ளுக்கு தள்ள வேண்டும். இப்படி செய்தால் அஜீரணக் கோளாறுகள், ஜீரண பிரச்சனை ஏற்படுவது குறையும் என்பதால் அவ்வாறு கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் உண்ணும் பொழுது உணவை வேக வேகமாக சாப்பிடக்கூடாது என்றும் கூறப்படுவது உண்டு. வேகமாக சாப்பிடும் பொழுது உணவுடன் சேர்ந்து காற்றையும் விழுங்குகிறோம். இதனால் காற்று வயிற்றுக்குள் சென்று மூச்சுக் குழாயை விரிய முடியாமல் செய்து விடுகிறது.

இன்றைய அவசர சூழலில் உணவினை மென்று மெதுவாக உண்ண முடியாமல் அவசர அவசரமாக சாப்பிடுவதால் தான் சாப்பிடும் பொழுது மூச்சு வாங்குதல் பிரச்சனை தோன்றுகிறது. உணவினை பிரித்து சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மூன்று வேளை சாப்பிடும் உணவை ஐந்து வேளையாக சிறுக சிறுக பிரித்து உணவு உண்பதால் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண முடியும் என்கின்றனர். அதுபோல அல்லாமல் ஒரே சமயத்தில் வயிறு முழுவதுமாக நிரம்ப சாப்பிட்டால் மூச்சு வாங்கும் பிரச்சனை உண்டாகிறது. அது மட்டுமல்லாமல் இத்தகையவர்களுக்கு நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சனைகளும் வரும்.

- Advertisement -

ஆசிட், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவு உட்கொண்டால் வயிறு உப்புசம், கேஸ் பிரச்சனை வரக்கூடும். அதுபோல அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு ஒபிசிட்டி காரணமாக நுரையீரல் விரிவடைவதில் சிக்கல் உண்டாகி மூச்சு விடுவதில் சிரமம் இயல்பாகவே இருக்கும். சில வகை உணவுகளில் அமிலம் அதிகம் இருக்கும். இந்த அமில உணவுகளை சாப்பிடும் பொழுது வயிற்று வலி, வரட்டு இருமல், விழுங்குவதில் சிரமம், மூச்சு வாங்குதல் போன்ற பிரச்சனைகளும் கூடவே சேர்ந்து தோன்றி விடுகிறது. இது தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை அணுகுவது தான் நல்லது.

மேலும் நுரையீரல் மற்றும் மூச்சு குழாய் போன்ற இடங்களில் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சாப்பிடும் பொழுது மூச்சு வாங்குவது உண்டாகும். உணவு உட்கொள்ளும் பொழுது உணவுக் குழாய் விரியும், அதற்கு அருகே இருக்கும் உணவு குழாய் அளவு சுருங்கும். இதில் பிரச்சனைகள் இருந்தால் சிக்கல் வரக்கூடும். இதயத்துடிப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். வழக்கத்திற்கு மாறாக இருக்கக்கூடிய இதயத்துடிப்பு சாதாரணமானது என்றாலும், சாப்பிட உடன் இதுபோல இதயத்துடிப்பில் மாற்றங்கள் அதிகம் தென்பட்டால் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சில குறிப்பிட்ட உணவு வகைகள் சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். மூச்சு பிரச்சனை, செரிமான பிரச்சனை, சரும பிரச்சனைகளை கூட உண்டாக்கக்கூடிய இத்தகைய அலர்ஜியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
சாப்பிடும் போது இந்த தவறை மட்டும் இனி செய்யாதீங்க! உங்க வயிறு வீங்கிக் கொண்டே போகும் தெரியுமா?

புதிதாக தொடர்ந்து சில வகை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் இந்தப் பிரச்சனை வரும். தலைவலியா? உடனே ஒரு மாத்திரையை போட வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதீத மன அழுத்தம் கொண்டவர்கள், பதட்டத்துடன் இருப்பவர்கள், பயத்துடன் இருப்பவர்கள் கூட உணவு சாப்பிடும் பொழுது மூச்சுத் திணறலை உணர முடியும். சாப்பிடும் பொழுது இத்தகைய பிரச்சினைகள் உள்ளவர்கள் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் மேற்கொண்டாலே இதிலிருந்து எளிதாக நிவாரணம் காணலாம்.

ஒரு மனிதன் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் ஆவது தண்ணீர் கண்டிப்பாக குடித்தாக வேண்டும். அப்படி குறைந்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் தீவிரமடையும். சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு தூங்க செல்ல வேண்டும். மேற்கூறிய பிரச்சனைக்குரிய உணவு வகைகளை தவிர்த்து, சரியான முறையில் உணவு உட்கொண்டு, உடற்பயிற்சி மேற்கொண்டாலே மூச்சு வாங்குதல் பிரச்சனை குறையும்.

- Advertisement -