ஆப்பிள் போல பளபளப்பான கன்னங்கள் பெற இந்த பழம் இவ்வளவு செய்யுமா? ஆச்சரியமா இருக்கே!

sapota-cheeks
- Advertisement -

எல்லோருக்கும் கண்ணங்கள் புசுபுசுவென்று இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கன்னங்கள் ஒட்டிப் போய் சப்பையாக இருக்கும் முகங்களுக்கு சப்போட்டா நல்ல ஒரு தீர்வை கொடுக்கும். சப்போட்டா பழம் அதிக சத்துக்களைக் கொண்டுள்ளது. இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் இதை அழகு குறிப்புகளுக்கும் பயன்படுத்தலாம். சப்போட்டா பழம் அழகிற்கு வீட்டில் எவ்வாறு உபயோகப்படுத்தலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பழ வகைகளில் வித்தியாசமான சுவை கொண்டுள்ள இந்த சப்போட்டா பழம் பெரும்பாலானோரால் விரும்பப்படுகிறது. ஒல்லியான தேகம் கொண்டவர்களுக்கு ரொம்பவே பயன் தரக்கூடிய இந்த சப்போட்டாவின் விதை மற்றும் தோலை நீக்கி உள்ளிருக்கும் சதைப்பற்றை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 4 டீஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பசும்பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதினை முகத்தில் பூசிக் கொண்டு பத்து நிமிடம் உலர விடுங்கள்.

- Advertisement -

பின்னர் முகத்தைக் கழுவினால் பளபளப்பான ஆரோக்கியமான தேகம் பிரகாசிக்கும். மேலும் ஒல்லியாக இருப்பவர்கள் முழங்கை மற்றும் புறங்கையில் பார்த்தால் நரம்பு புடைத்து அசிங்கமாக தோற்றம் தரும். அந்த இடங்களில் எல்லாம் இந்த விழுதில் 2 டீஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர் சேர்த்து நன்கு கலந்து பூசிக் கொண்டு உலர விட்டு கழுவினால் கொஞ்சம் பூசினாற் போல பொலிவுடன் காணப்படும்.

ஒட்டிய கன்னங்கள் முக அழகை எடுத்துக் கொண்டு இருந்தால், நீங்கள் கொஞ்சம் சப்போட்டா பழத்தினை கூழாக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீர், அரை ஸ்பூன் சந்தன பொடி சேர்த்து கிரீம் போல நன்கு ஸ்பூன் வைத்து கலந்து விடுங்கள். பின்னர் அதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் இடவலமாக மசாஜ் செய்வது போல பூசிக் கொள்ளுங்கள். இதை நீங்கள் பூசிக் கொள்ளும் பொழுதே சட்டென உலர ஆரம்பித்து விடும்.

- Advertisement -

எனவே தண்ணீரை தொட்டு தொட்டு சில முறை நன்கு தேய்த்து மசாஜ் செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்த பின்பு வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீர் கொண்டு கழுவினால் முகம் பளிச்சென்று புசுபுசுவென்று மாறும். வாயில் காற்றை நிரப்பிக் கொண்டு மெதுவாக காற்றை வெளியிட வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் செய்து பாருங்கள், உங்கள் ஒட்டிப் போன கன்னம் ஆப்பிள் போல புஸ்ஸென்று மாறும்.

முகத்தில் இருக்கும் முகப்பரு, கரும்புள்ளிகள் நீங்க கொஞ்சம் சப்போட்டா பழ விழுதுடன் ஒரு டீஸ்பூன் பால், ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதினை முகத்திற்கு பேக் போல போட்டு 20 நிமிடம் அப்படியே காய விட்டு விடுங்கள். நன்கு காய்ந்து, உலர்ந்த பின்பு முகத்தை அலம்பினால் முகம் பிரகாசமாக ஹீரோயின் முகம் போல பளிச்சென்று ஜொலிக்கும். சப்போட்டா பழத்தில் இருக்கும் வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் மட்டுமல்லாமல் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளன. எனவே சப்போட்டா பழம் உள்ளுக்கும், வெளியையும் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியது எனவே இதனை கண்டால் விட்டுவிடாமல் வாங்கி வந்து அனுபவியுங்கள்.

- Advertisement -