நீங்கள் விரைவில் சொந்த வீடு கட்ட, எதிரிகளை வெல்ல இம்மந்திரம் துதியுங்கள்

sarabeswarar

ஹிரண்யகசிபுவை அழிப்பதற்காக புரிவதற்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரத்தை எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்பும் உக்கிரம் தணியாமல் இருந்த நரசிம்மரின் செயலை கண்ட தேவர்கள் எங்கே நரசிம்மர் அத்தனை லோகங்களையும் அழித்து விடுவாரோ என்று பயந்து சிவபெருமானிடம் முறையிட்டனர். உடனே யாளி பறவையின் தலையும், சிங்கத்தின் உடலும் கொண்ட சரபேஸ்வரர் உருவம் எடுத்து நரசிம்மரை அரவணைத்து அவரின் உக்கிரத்தை தணித்தார். தீமைகள் அனைத்தையும் போக்க வல்லவர் ஸ்ரீ சரபேஸ்வரர். அவருக்குரிய சரபேஸ்வரர் மூல மந்திரம் இதோ உங்களை

sarabeswarar 2

சரபேஸ்வரர் மூல மந்திரம்

ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி
ஹாஸி, பிராணக்ர ஹாஸி

ஹூம் பட் ஸர்வ சத்துரு சம்ஹாரணாய
சரப ஸாலுவாய பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா.

sarabeswarar 4

உலகை காக்க சிவபெருமானை எடுத்த உருவம் தான் “சரபேஸ்வரர்”. ஸ்ரீ சரபேஸ்வரரை போற்றும் இந்த மூல மந்திரத்தை போற்றி துதிகளை தினமும் உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதிப்பது சிறப்பு. ஞாயிற்று கிழமையன்று உடல், மன சுத்தி செய்து கொண்டு, எத்தகைய புலால் உணவுகளையும் உண்ணாமல் அந்த தினத்தில் வரும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளான ராகு காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று சரபேஸ்வரர் சந்நிதி முன்போ அல்லது சிவபெருமான் சந்நிதி முன்போ விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, இந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். மந்திரிக மற்றும் துஷ்ட சக்தி பாதிப்புகளில் இருந்து விமோச்சனம் கிட்டும். நீங்கள் புது வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தாமதங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நடைபெற தொடங்கும். மனம் மற்றும் செயல்புரிவதில் இருக்கும் தயக்கங்கள் நீங்கி தெளிவு ஏற்படும்.

- Advertisement -

Sarabeswarar 5

சரபேஸ்வரர் வழிபாட்டிற்குரிய தினங்கள்

சரபேஸ்வரர் வழிபாட்டிற்கு வாரத்தின் அனைத்து தினங்களுமே ஏற்ற தினங்கள் தான் என்றாலும் சரபேஸ்வரர் சிவபெருமானின் அம்சம் என்பதால் பிரதோஷ தினங்களில் சரபேஸ்வரருக்கு பூஜைகள் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். அதிலும் ஞாயிற்றுக் கிழமை பிரதோஷ நேரத்தில் சரபேஸ்வரர் வழிபாடு செய்வது அற்புதமான பலன்களை தர வல்லதாக இருக்கிறது. சரபேஸ்வரர் சன்னதிகள் இருக்கும் கோயில்களுக்கு சென்று சரபேஸ்வரருக்கு அருகம் புல் மற்றும் வில்வம் சமர்ப்பித்து வழிபாடு செய்யலாம். அப்படி சரபேஸ்வரர் கோயில் அருகில் இல்லாதவர்கள் அல்லது அத்தகைய கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், பிரதோஷ நேரங்களில் வீட்டில் இருந்தபடியே உடல் மற்றும் மன சக்தியோடு சரபேஸ்வரர் மந்திரங்கள் துதித்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

sarabeswarar 1

சரபேஸ்வரர் வழிபாடு பயன்கள்

நரசிம்மரைப் போலவே சரபேஸ்வரரும் உக்கிர தெய்வமாக இருக்கிறார் எனவே இவரை வழிபடுவதின் பிரதான நோக்கமே எதிரிகள் மட்டும் துஷ்ட சக்திகள் தொல்லையை போக்குவதற்காக தான். என்றாலும் மேற்கூறிய சரபேஸ்வரர் மூல மந்திரம் துதித்து வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தீர்க்க முடியாத கடன் பிரச்சனை விரைவில் தீருவதற்கான வழிகள் உண்டாகும். திருமணத்தடை நீங்கி நல்ல முறையில் திருமணம் நடைபெறும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது சொந்த வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு விரைவில் செல்வ வளத்தை மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sarabeswarar moola mantra in Tamil. It is also called as Sarabeswarar mantras in Tamil or Moola mantras in Tamil or Sondha veedu katta manthiram in Tamil or Sarabeswarar manthiram in Tamil.