உங்களுக்கு பணவரவு அதிகரித்து விரைவில் செல்வந்தராக்கும் அற்புத மந்திரம் இதோ

kuberan

இன்றைய உலகில் காகிதத்தால் செய்யப்பட்ட பணம் தான் உலகத்தை ஆளுகிறது. இக்காலத்தில் இது இல்லாத மனிதன், அவன் துறவியாகவே இருந்தாலும் அவனை இந்த உலகம் மதிப்பதில்லை. அக்காலம் தொட்டு இந்த காலம் வரை செல்வத்திற்கு அதிபதியாக குபேரனை வணங்குகின்றனர் மக்கள். அந்த திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கே அவர் பத்மாவதி என்றழைக்கப்படும் லட்சுமி தேவியை மணம் புரிய மிகுந்த செல்வததை குபேரன் கடனாக வழங்கியதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட குபேரனை நாம் வழிபட்டு நன்மைகளை பெறுவதற்கான குபேர மூல மந்திரம் இதோ.

kuberan

குபேர மூல மந்திரம்

ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம

செல்வத்தின் அதிபதியான குபேர பகவானுக்குரிய ஆற்றல் மிகுந்த மூல மந்திரம் இது. சுக்கிர பகவான் மற்றும் மகாலட்சுமி அருள் நிறைந்த வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரை நேரமான காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள்ளாக உங்கள் பூஜையறையில் விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, சாம்பிராணி மற்றும் பத்திகள் கொளுத்தி, ஏதேனும் இனிப்பு நைவேத்தியம் வைத்து, குபேரனுக்குரிய வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து இந்த மூல மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிக்க வேண்டும். இதை ஒவ்வொரு வெள்ளியன்றும் செய்து வர உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படாது. பல வகைகளில் பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். இந்த மந்திரத்தை விடாமல் துதித்து வருபவர்கள் கூடிய விரைவில் செல்வந்தர்கள் ஆவார்கள்.

kuberan

குபேர வழிபாடு

- Advertisement -

அழகாபுரி நகரத்தின் அதிபதியாகவும், மிக பெரும் செல்வந்தனாகவும் குபேரன் இருக்கிறார். மனிதர்கள் அனைவரும் தங்களின் வாழ்வில் அதிக வருமானம் பெறவும், செல்வம் சேமிக்கவும் செல்வங்களின் அதிபதியான குபேரனின் அருள் தேவைப்படுகிறது. அந்த குபேரனை தினமும் அவருக்கு உரிய காயத்திரி மந்திரம் துதித்து வழிபட்டு வருவதால் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான செல்வங்கள் வசதிகள் அதிகரிக்கும். குபேர வழிபாடு செய்ய நினைப்பவர்கள் செப்புத் தகட்டில் செய்யப்பட்ட குபேர எந்திரத்தை வாங்கி வந்து வெள்ளிக்கிழமைகளில் குபேர எந்திரத்தின் நான்கு முனைகளிலும் மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, பூக்கள் சாற்றி, எந்திரத்திற்கு முன்பாக ஒரு தட்டில் சிறிது மஞ்சள் அட்சதை அரிசியை வைத்து தூபங்கள் கொளுத்தி, குபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும்.

kubera

குபேர வழிபாட்டிற்குரிய தினங்கள்

நம் வாழ்வில் பணத்தின் தேவை தினந்தோறும் இருக்கிறது. எனவே குபேர பகவானை தினமும் அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபடலாம். அப்படி தினந்தோறும் குபேரனை வழிபட முடியாதவர்கள் வாரங்களின் இறுதியில் வருகின்ற வெள்ளிக்கிழமை தினத்தில் மட்டும் குபேரனின் சிறிய அளவு படத்திற்கு பழம் மற்றும் இனிப்பு நைவேத்தியம் செய்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி குபேர காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் நன்மைகள் ஏற்படும். குபேரனின் அருளை முழுமையாகப் பெற நினைப்பவர்கள் ஒரு போதும் தங்களின் செல்வ வசதிகளை குறித்து கர்வம் கொள்ளக்கூடாது. மேலும் நம் மனதில் பேராசை, சுயநலம் போன்ற எண்ணங்கள் நிறைந்து இத்தகைய குபேர பூஜை செய்வதால் குபேரன் அருள் கிடைக்காமல் போய்விடும் நிலையும் ஏற்படும்.

kubera

குபேர வழிபாடு பயன்கள்

வாழ்க்கைக்கு மிக அத்தியாவசிய தேவையான பணம் அல்லது செல்வத்திற்கு அதிபதியாக குபேரன் இருக்கிறார். எனவே அவரின் அருள் நமக்கு பூரணமாக கிடைப்பதால் செல்வ வசதிகள் பெருகி மகிழ்வான வாழ்க்கை வாழலாம். பிறரிடம் கடன் வாங்கி வாழும் நிலை ஏற்படாமல் தடுக்கும். வாங்கிய கடனையும் விரைவில் திருப்பி செலுத்தக்கூடிய அமைப்பு உண்டாகும். வீண் பண விரயங்கள் ஏற்படாமல் காக்கும்.

இதையும் படிக்கலாமே:
சனி பகவான் மூல மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Kubera moola mantra in Tamil. It is also called as Kubera mantras in Tamil or Kuberan manthiram in Tamil or Selvam peruga manthiram in Tamil or Kuberan manthirangal in Tamil.