அனுமன் வாயில் வைக்கும் தேங்காய் இரண்டு துண்டாகிறது – எங்க தெரியுமா ?

Hanuman-1
- Advertisement -

குஜராத் மாநிலத்தில் உள்ள சாரங்ப்பூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ஒரு அற்புதமான அனுமன் கோவில். கடந்த சில வருடங்களாக இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம் அங்கு உள்ள விசித்திரமான அனுமன் சிலையே.

அங்கு செல்லும் பக்தர்கள் ஒரு முழு தேங்காயை எடுத்து அனுமன் சிலையின் வாயில் வைக்கின்றனர். அடுத்த கணமே அந்த தேங்காய் இழுக்கப்பட்டு இரண்டு துண்டுகளாக உடைந்து அதில் ஒரு துண்டு மட்டும் பக்தர்களுக்கு பிரசாதமாக அனுமன் கை வழியாக வெளியில் வந்து விழுகிறது. இதை கண்டு பக்தர்கள் பலர் பரவசம் அடைகின்றனர்.

- Advertisement -

இதன் உண்மை நிலையை அறிய கோவில் நிர்வாத்திடம் இது குறித்து விசாரிக்கையில் அவர்கள் இதற்கான காரணத்தை தெரிவித்தனர். இந்த கோவிலில் பலர் தேங்காய் உடைப்பதால் அதை சுத்தம் செய்ய தினமும் நிறைய ஆட்கள் தேவை படுகின்றனர். அதோடு அதற்கான செலவும் அதிகம் ஆகிறது. கோவிலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசித்தோம்.

பிறகு அதற்கான ஒரு வழியை கண்டறிந்தோம். அதன்படி அனுமன் சிலைக்குள் தேங்காய் உடைக்கும் கருவியை பொருத்தினோம். ஆகையால் தேங்காயை அனுமனின் வாயில் வைத்ததும் அந்த கருவு தேங்காயை இரு துண்டுகளாக உடைத்து விடும். பின் அதில் ஒரு துண்டு அனுமனின் கை வழியாக பக்தர்களிடம் வந்து சேரும். இதன் மூலம் கோவில் தூய்மையாக உள்ளது என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
3 கோடி ரூபாயில் எமதர்மனுக்கு கோவில் கட்டிய கிராம மக்கள்

அனுமன் வாயில் வைக்கும் தேங்காய் இரு துண்டுகளாக உடைகிறது என்ற செய்தி  ஆரம்பத்தில் இங்கு காட்டுத்தீ போல பரவியது. அதனை அடுத்து அதை சோதனை செய்ய பலரும் இங்கு வர துவங்கினர். ஆனால் இதன் உண்மை நோக்கம் இந்த கோவிலை தூய்மையாக வைத்துக்கொள்வதே என்று தெரிவித்தனர்.

- Advertisement -