- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வழிபாடு

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வழிபாடு

- Advertisement -

மிகவும் சிறப்பு மிகுந்த நவராத்திரியாக திகழக்கூடியது தான் இந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரி. வெற்றிகரமாக ஒன்பது நாட்களும் அம்பிகையை நாம் வழிபாடு செய்து விட்டோம். ஒன்பது நாட்கள் நிறைவடைந்த பிறகு வரக்கூடிய சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி நாளன்று நாம் செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டு முறைகளால் நாம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து விதமான முயற்சிகளும் நமக்கு வெற்றிகளை தரும். அப்படிப்பட்ட வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விஜயதசமி வழிபாடு

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அம்மனை நினைத்து கொலு வைத்திருப்பவர்களும் சரி, அகண்ட தீபம் வைத்திருப்பவர்களும் சரி, கலசம் வைத்திருப்பவர்களும் சரி, அம்மனின் படத்தை மட்டும் வைத்து வழிபாடு செய்பவர்களும் சரி வழிபாட்டை மேற்கொண்டு ஒன்பது நாட்களும் நிறைவு செய்து விட்டோம். இந்த ஒன்பது நாட்கள் நிறைவடைந்த பிறகு வரக்கூடிய சரஸ்வதி பூஜை அன்று நாம் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய நமக்கு உதவி செய்யக்கூடிய ஆயுதங்களை வைத்து நன்றிகளை தெரிவிக்க வேண்டும். அம்மன் அசுரனை வதம் செய்வதற்காக உபயோகப்படுத்திய ஆயுதங்கள் அனைத்தையும் சாந்தப்படுத்துவதற்காக தான் இந்த ஆயுத பூஜை என்கின்ற சரஸ்வதி பூஜையை செய்தார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் நாமும் நாம் உபயோகப்படுத்தக்கூடிய ஆயுதங்களை குளிர்விக்கும் வகையில் இந்த சரஸ்வதி பூஜையை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

சரஸ்வதி பூஜையை அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அல்லது 9:15 இல் இருந்து 10:15 மணிக்குள் அல்லது 10:45-ல் இருந்து 11:45க்குள் அல்லது மாலை 5.30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் செய்யலாம். தங்களுடைய வசதிக்கேற்ப இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து வழிப்பாட்டை செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றிகள் உண்டாவதோடு வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றமும் ஏற்படும். எப்பொழுதும் போல் வீட்டு பூஜை அறையில் அனைத்து சுவாமி படங்களுக்கும் மலர்களை சாற்றி தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

நெய்வேத்தியமாக அவல் பொரி கடலை, சுண்டல், கலவை சாதம், இனிப்புகள், பழ வகைகள் போன்றவற்றை வைத்து அம்மனின் மந்திரங்கள் தங்களுக்கு எது தெரியுமோ அவை அனைத்தையும் கூறலாம். லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது பல மடங்கு பலனைத் தரும். துர்க்கை அம்மனுக்குரிய மந்திரத்தை 11 முறையும், மகாலட்சுமிக்குரிய மந்திரத்தை 11 முறையும், சரஸ்வதி தேவிக்குரிய மந்திரத்தை 11 முறையும் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அன்றைய தினம் வீட்டிற்கு அழைத்த சுமங்கலி பெண்களுக்கு நெய்வேத்தியமாக வைத்த பொருட்களை பிரசாதமாக தந்து அதனுடன் மாங்கல்ய செட்டையும் கொடுத்து வழி அனுப்ப வேண்டும்.

- Advertisement -

விஜயதசமி வழிபாட்டை அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை 7:45 மணியிலிருந்து 8:45 மணிக்குள்ளும் பகல் 12:30 மணியிலிருந்து 1.30 மணிக்குள்ளும் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். தீயவற்றை அழித்து நல்லவை வெற்றி பெற்ற கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் தான் விஜயதசமி என்பது கொண்டாடப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் 9 நல்லெண்ணெய் தீபங்களை வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு ஏற்றி வைத்து தங்களுக்கு தெரிந்த சரஸ்வதி தேவியின் மந்திரத்தை கூறி வழிபாட்டை செய்ய வேண்டும். அன்றைய தினம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு தெரியாத ஏதாவது ஒரு நல்ல காரியத்தை கற்றுக் கொள்வதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: தொழில் முடக்கம் நீங்கி முன்னேற்றம் உண்டாக

தீயவற்றை அழித்து வெற்றியைப் பெற்ற நாளாக திகழ்வதுதான் நவராத்திரி நாட்கள். இந்த நாட்களில் நாமும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பொழுது நம்மிடமும் நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலகி நம்முடைய நற்குணங்கள் மேலோங்கி அனைத்து விதமான நன்மைகளையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்