திருமண வாழ்க்கை சிறக்க, சகல பாக்கியங்கள் பெற இம்மந்திரம் துதியுங்கள்

saraswathi

வாழ்க்கை மிகவும் அற்புதமான ஒரு வரமாகும். அதிலும் மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை பல விதமான இன்பங்களை அனுபவிப்பதற்கான ஒரு அருளாசியாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு இத்தகைய இன்பங்கள் கிடைத்தாலும் அவற்றை அனுபவிப்பதற்கு நீண்ட ஆயுள் இருப்பதில்லை. ஒரு மனிதனுக்கு கல்வி, ஞானத்தோடு நீண்ட ஆயுள் மற்றும் இதர வரங்களை அருளும் தெய்வமாக சரஸ்வதி தேவி இருக்கிறாள். அவளுக்குரிய மந்திரம் இதோ

Goddess Saraswathi

சரஸ்வதி தேவி மந்திரம்

ஓம்கார பூர்விகே தேவி வீணாபுஸ்தக தாரிணி
வேதமாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே.
பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச ப்ரியவாதினி

அவைதவ்யம் ஸௌபாக்யம் தேஹித்வம் மம
ஸுவ்ருதே புத்ரான் பௌத்ராம்ஸ்ச ஸௌக்யம்
ஸௌமங்கல்யம் ச தேஹிமே

Goddess Saraswathi

வீணையை கையில் இந்திய படி வீற்றிருக்கும் ஞானக்கடவுளான சரஸ்வதி தேவியை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 9 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை, மாலை வேளைகளில் சரஸ்வதி, அம்பாள் படத்திற்கு தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வந்தால் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகள் எப்போதும் ஒற்றுமையாக நீண்ட ஆயுள் மற்றும் சகல பாக்கியங்களை பெற்று வாழ்வார்கள்.

- Advertisement -

saraswathi 2

தனது பெயருக்கு முன் ஓங்காரத்தை உடையவளும், வீணை, புத்தகம் இவைகளை தரித்துக்கொண்டு இருப்பவளும், வேதங்களுக்குத் தாயுமான காயத்ரி எனும் சாவித்ரி தேவியே உனக்கு நமஸ்காரம். கணவன் என்னிடத்தில் அன்பு குறையாது இருத்தல் வேண்டும். தீர்க்க சுமங்கலி வரத்தை தாயே எனக்கு அருள வேண்டும். பக்தர்களை ரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவளும் ஆன தேவியே! நான் சௌபாக்யத்துடன் வாழ தாங்கள் அருள வேண்டும் என்பதே மேற்கண்ட மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

இதையும் படிக்கலாமே:
மனோபலம் உண்டாக மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Saraswati devi mantra in Tamil. It is also called as Saraswati mantra in Tamil or Saraswati sloka in Tamil or Neenda ayul pera manthiram in Tamil or Saraswathi devi manthiram in Tamil.