- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்குக் வித் கோமாளி ஸ்பெஷல் சர்க்கரை வள்ளிக்கிழங்கு வத்த குழம்பு எப்படி வைப்பது? நாவில் எச்சில்...

குக் வித் கோமாளி ஸ்பெஷல் சர்க்கரை வள்ளிக்கிழங்கு வத்த குழம்பு எப்படி வைப்பது? நாவில் எச்சில் ஊற வைக்கும் இந்த ரெசிபியை உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா?

- Advertisement -

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தானே நாம் எல்லோரும் சாப்பிடுவோம். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து ஒரு சூப்பரான காரசாரமான வத்த குழம்பு ரெசிபியை தான் இன்னைக்கு தெரிஞ்சுக்க போறோம். இதுவரைக்கும் நீங்கள் கேள்விப்படாத ஒரு ரெசிபியாக இருக்கப்போகிறது. இந்த ரெசிபியை குக் வித் கோமாளி என்று சொல்லப்படும் பிரபல்யமான ஒரு நிகழ்ச்சியில் அம்மு அபிராமி அவர்கள் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான இந்த ரெசிபியை உங்களுக்கு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா? நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்த்து விடலாமா.

முதலில் 250 கிராம் அளவு உள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு சிறிய எலுமிச்சம்பழ அளவு உள்ள புளியை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து கரைத்து புளிக்கரைசல் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் வர மல்லி – 2 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், துவரம் பருப்பு – 1 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு முதலில் பொன்னிறமாக வறுக்க வேண்டும். எல்லா பொருட்களும் முக்கால் பாகம் வழிபட்டு வந்த பிறகு, இறுதியாக வர மிளகாய் – 4, கறிவேப்பிலை – 1 கொத்து சேர்த்து வறுத்து இதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றிக் கொள்ளுங்கள். இது நன்றாக ஆறிய பின்பு பொடி செய்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக குழம்பை தாளித்த அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 3 – டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம்  – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 2 சேர்த்து தாளித்து, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல் சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள்.

- Advertisement -

வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கி வைத்திருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை கடாயில் கொட்டி நன்றாக வதக்கி விட்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு தேவையான அளவு உப்பு தூளைத் தூவி, ஒரு மூடி போட்டு நல்லெண்ணெயில் கிழங்கை பாதி அளவு வேக வைத்து விடுங்கள். கிழங்கு பாதி அளவு வெந்ததும், மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை கடாயில் போட்டு, கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, இந்த மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு தூளைத் தூவி கொதிக்கவிட்டு, உப்பு காரம் சரி பார்த்துக் கொள்ளுங்கள். (இந்த குழம்பு கொதிக்க கொதிக்க கெட்டியாக தொடங்கும்.)

அதன் பின்பு இந்த குழம்பை மூடி புளியின் பச்சை வாடை போகும் வரை, எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை மிதமான தீயில் கொதிக்க வையுங்கள். இடையிடையே கரண்டியை வைத்து கலந்து கொடுங்கள். இறுதியாக ஒரு சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து கலந்துவிட்டு சுவைத்துப் பாருங்கள். அருமையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு வத்த குழம்பு தயார். இந்த குழம்பை சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்