முகத்தில் இருக்கும் சருமத்துளைகள் மூடி முகம் பட்டுப்போல் மென்மையாக மாற வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே என்ன செய்யலாம்? என்று நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

pores-veppilai-egg-aleo
- Advertisement -

எல்லோருக்கும் தான் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்க தான் செய்யும். சிலருக்கு முகத்தில் தெரியும் கரும் புள்ளிகளும், முகச் சுருக்கங்களும், முகப் பருக்களும் முகத்தை சீர்குலைத்து கொண்டிருக்கும். இவைகள் நாளடைவில் நீங்கினாலும் அதன் வடுக்களாக முகத்தில் இருக்கும் துளைகள் அகன்று போய் குழியாக முகம் முழுவதும் புள்ளிகளாக தோன்ற ஆரம்பித்து விடும். இத்தகைய முகத்துளைகளை இறுக செய்து முகத்தை மென்மையாக மாற்ற வீட்டில் இருக்கும் இந்த சில பொருட்களை வைத்து என்ன செய்யலாம்? என்பதை நீங்களும் அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

face

நம் சருமம் மிகவும் மென்மையானது. எனவே அடிக்கடி முகத்தை கைகளால் தொட்டு கொண்டே இருக்கக் கூடாது. முகத்தை துடைக்கும் பொழுது அழுத்தம் கொடுத்து துடைக்கக் கூடாது. லேசாக ஒற்றி எடுக்க வேண்டும். சிறிதளவு வேப்பிலைச் சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை கலந்து இயற்கையாக முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் காய விடவும். நன்கு காய்ந்ததும் ஐஸ் கட்டி ஒன்றை எடுத்து முகத்திற்கு க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டி க்ளாக் வைஸ், முன்னும் பின்னுமாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஈரத் துணியைக் கொண்டு முகத்தை லேசாக துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஐஸ் கட்டியை சுத்தமான காட்டன் துணியில் சுற்றிக் கொண்டுசரும துளை முகத்திற்கு 10 நிமிடம் ஒத்தடம் கொடுத்து எடுங்கள். ஐஸ் கட்டி ஒத்தடம் முகத்தில் இருக்கும் திறந்த துளைகளை வெகு விரைவாக இறுகச் செய்யும். அதன் பிறகு அரை மூடி எலுமிச்சை பழச் சாற்றுடன் கொஞ்சம் வெள்ளரிக்காய் சாற்றை கலந்து சருமத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே காய விடுங்கள். வெள்ளரிக்காய் சருமத்திற்கு குளிர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கும் இது போன்ற திறந்த துளைகளை இறுக உதவிடும் என்பதால் நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்.

face-wash

எப்பொழுதும் எலுமிச்சைச்சாறு முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது அதனுடன் ஏதாவது ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்த வேண்டும். வெறும் எலுமிச்சைச்சாறு பயன்படுத்தினால் முகத்தில் எரிச்சல் போன்ற உணர்வை ஏற்படுத்தும். இது போன்ற எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் உடனே முகத்தை கழுவி விடுங்கள். வெள்ளிரிக்காய்க்கு பதிலாக பப்பாளி துண்டுகளை நன்கு மைய அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து நன்கு காய்ந்த பின் கழுவினால் நல்ல பலன் தெரியும்.

- Advertisement -

இதே போல சருமத் துளைகள் இறுக முட்டையின் வெள்ளைக் கருவையும் பயன்படுத்தலாம். அரைத்த ஓட்ஸ் மாவுடன் கொஞ்சமாக முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் நன்கு உலர்ந்த பின் முகம் இறுகி விடும். அதன் பிறகு முகத்தை சுத்தமான துணியினால் துடைத்து எடுத்தால் போதும், முகத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணெய் பிசுக்குகள், அழுக்குகள் நீங்கி சரும துளைகள் விரைவாக அடைபட்டு விடும்.

open-pores

மேற்கண்ட இந்த குறிப்புகளில் எது உங்களுக்கு சுலபமாக இருக்குமோ அதனை தொடர்ந்து 4 வாரம் செய்து வந்தால் போதும், நல்ல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். மாற்றம் தெரிகிறது என்பதற்காக உடனே அதனை நிறுத்தி விடக்கூடாது. எந்த அளவிற்கு உங்களுக்கு முகம் இறுகி மென்மை தன்மை அடைய வேண்டுமோ! அது வரை நீங்கள் தொடர்ந்து இதனை முயற்சிக்கலாம். இதில் எந்த விதமான ரசாயன பொருளும் இல்லாததால் தாராளமாக எல்லோருமே முயற்சி செய்யலாம்.

- Advertisement -