இந்துக்களின் காலக்கணிப்பு அட்டவணையில் மாதம் இருமுறை வரும் இந்த சஷ்டி நாளை “திதி ” என்று அழைக்கிறோம். சஷ்டி ஆனது சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையிலேயே சுழற்சி முறையில் கணிக்கப்பட்டு வரைபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தில் எந்தெந்த தேதிகளில் சஷ்டி வருகிறது என்பதை கீழே உள்ள அட்டவணையில் பார்ப்போம்.
Sashti dates 2020
Date | Day |
---|---|
30 January 2020 | Thursday |
29 February 2020 | Saturday |
30 March 2020 | Monday |
28 April 2020 | Tuesday |
28 May 2020 | Thursday |
26 June 2020 | Friday |
25 July 2020 | Saturday |
23 August 2020 | Sunday |
22 September 2020 | Tuesday |
21 October 2020 | Wednesday |
20 November 2020 | Friday |
19 December 2020 | Saturday |
Sashti 2019
Date | Day |
---|---|
12 January 2019 | Saturday |
11 February 2019 | Monday |
12 March 2019 | Tuesday |
11 April 2019 | Thursday |
10 May 2019 | Friday |
08 June 2019 | Saturday |
08 July 2019 | Monday |
06 August 2019 | Tuesday |
04 September 2019 | Wednesday |
04 October 2019 | Friday |
02 November 2019 | Saturday |
02 December 2019 | Monday |

சஷ்டி என்பது 15 நாட்களை சுழற்சியாக கொண்ட கணக்கில் 6 வது நாளாக வரும். “ஷட்” என்பது ஒரு வடமொழிச்சொல் அதன் அர்த்தம் “ஆறு”. எனவே சுழற்சி முறையில் அமாவாசை மற்றும் பூரணை நாட்களை அடுத்து வரும் ஆறாவது திதி சஷ்டி நாளாக கருதப்படுகிறது. மாதம் இருமுறை வரும் சஷ்டி திதி மாதத்தின் முதல் பாதியில் அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து பூரணை நாள் வரை இருக்கும் இந்த காலம் வளர்பிறை காலமாகும். மாதத்தின் அடுத்தபாதியில் பூரணை அடுத்த நாளில் இருந்து அமாவாசை முடிய வரை வரும் இந்த காலம் தேய்பிறை காலம்.
சஷ்டியின் பிரிவுகளுக்கான பெயர்கள் :
வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகியவைகளை வைத்து வரும் சஷ்டி திதி இரண்டு பெயர்களை கொண்டது. அதனை கீழே வகை படுத்தியுள்ளோம்.
வளர் பிறையில் வரும் சஷ்டி – சுக்கில பட்சம்
தேய்பிறையில் வரும் சஷ்டி – கிருஷ்ண பட்சம்
கடவுள் வழிபாட்டுக்கான சஷ்டி திதியில் வரும் விரதங்கள் :
கந்தசஷ்டி விரதம் :
இந்த கந்தசஷ்டி விரதத்தினை பெரும்பாலும் நீங்கள் அறிந்துதிருப்பீர்கள். அப்படி தெரியாமல் இருந்தால் இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். கந்தசஷ்டி என்ற நாள் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி நாளை கந்தசஷ்டி என்று அழைக்கிறோம். குறிப்பாக ஐப்பசியினை நாம் குறிப்பிடுவது இது முருகப்பெருமானுக்கு உடைய சிறப்பு நாள். முருகனுக்கு “கந்தன்” என்ற பெயரும் உண்டு. எனவே கந்தனுக்குபிடித்த இந்த மாதத்தில் வரும் சஷ்டி நாளை நாம் கந்தசஷ்டி என்று அழைக்கிறோம்.

மார்கழி மாத சஷ்டி :
மார்கழி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி நாளன்று விநாயகரை வணங்குதல் நல்லது. ஏனென்றால், விநாயகருக்கு உரிய சஷ்டி நாளாக இது கருதப்படுகிறது.
கபிலா சஷ்டி :
ஆவணி மாத தேய்பிறையில் வரும் சஷ்டி நாளானது கபிலா சஷ்டி என்றழைக்கப்படுகிறது. இந்த கபிலாஷ்டமி வரும் நாட்களில் நாம் நமக்கு பிடித்த எந்த கடவுளினையும் வழிபடலாம். அதுபோக பசுவிற்கு பூஜை செய்தல் மற்றும் பசுவிற்கு புற்கள் மூலம் உணவளித்தல் சிறந்த பலனை தரும்.
English Overview:
Here we have Sashti dates 2020 or Sashti 2020 dates. Kantha sashti 2020 date, Time and Viratham details are completely here in Tamil. Monthly sashti 2020, skanda sashti 2020 dates are clearly given above. It covers Sashti in January 2020, Sashti in February 2020, Sashti in March 2020, Sashti in April 2020, Sashti in May 2020, Sashti in June 2020, Sashti in July 2020, Sashti in August 2020, Sashti in September 2020, Sashti in October 2020, Sashti in November 2020 and Sashti in December 2020.