நாளை கந்த சஷ்டி விரதத்தின் மூலம் முருகப்பெருமானின் அருளை பரிபூரணமாக பெற, இந்த ஒரு விஷயத்தை மறக்காமல் செய்யுங்கள்.

murugan
- Advertisement -

கந்த சஷ்டி விரதத்தில் ஆறு நாட்கள் முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் கூட, நாளை இறுதி நாளான ஆறாவது நாள், ஒரு நாள் மட்டும் விரதத்தை மேற்கொள்ளலாம். அப்படி நாளைய தினம் விரதத்தை மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள் என்னென்ன என்பதை பற்றியும், முக்கியமாக நாளை விரதத்துடன் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நல்ல விஷயத்தை பற்றியும், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைக்கு செல்பவர்கள் கூட விரதத்தை தாராளமாக மேற்கொள்ளலாம். எந்த பிரச்சனையும் இல்லை.

அதிகாலை வேளையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது முருகன் கோவிலில் இருந்தால் அங்கு சென்று முருகப்பெருமானை வணங்கி விரதத்தை தொடங்கலாம். அப்படி இல்லை என்றால் வீட்டிலேயே முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பு ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு உங்களுடைய விரதத்தை தொடங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

விரதம் இருப்பது என்பது அவரவருடைய உடல் சூழ்நிலையை பொறுத்தது. வெறும் தண்ணீரை மட்டும் பருகி விட்டு நாளைய தினம் முழுவதும் எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருக்க முடியும் என்பவர்கள் தாராளமாக இருக்கலாம். (தண்ணீர் கட்டாயம் தாராளமாக குடிக்க வேண்டும்.) அப்படி இல்லை உடல்நிலை சரியில்லாதவர்கள் பால் பழம் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். அது உங்களுடைய சௌகரியம்.

நாளைய தினம் திருச்செந்தூரில் சூரசம்காரம் 4 மணி அளவில் நடைபெறுகின்றது. சூரசம்ஹாரம் நடந்து முடிந்த பிறகு விரதம் இருப்பவர்கள் ஒரு முறை தலைக்கு குளித்து விட வேண்டும். அதன்பின்பு மாலை நேரத்தில் வீட்டில் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்துவிட்டு, அரிசி மாவால் ஸ்டார் கோலம் போட்டுவிட்டு அதில் ஆறு மண் அகல் விளக்குகளை, ஆறு முனையில் வைத்து நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து, முருகப்பெருமானுக்கு சர்க்கரை பொங்கல் நிவேதனமாக வைத்து முருகப்பெருமானை பூஜை செய்து அந்த சர்க்கரை பொங்கல் நிவேதனத்தை சாப்பிட்டு, உங்களுடைய விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நாளைய தினம் இந்த விரதத்தோடு நாம் இன்னொரு விஷயத்தை சேர்த்து கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றோமே. அது எந்த விஷயமாக இருக்கும். மௌன விரதம் தாங்க அது. உங்களால் முடிந்தால் நாளை ஒரு நாள் இந்த சஷ்டி விரதத்தோடு சேர்த்து மௌன விரதம் இருந்து பாருங்கள். அது உங்களுக்கு பலவிதமான பலனை கைமேல் கொடுக்கும். (மௌன விரதத்தின் போது கந்த சஷ்டி கவசம் படிக்கலாம் தவறு கிடையாது.)

ஒரு நாள் பேசாமல் இருந்து விட்டால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கலாம். ஆனால் நாளை முருகப்பெருமானுக்கு உரிய இந்த சஷ்டி தினத்தில் மௌன விரதம் இருந்தால் அன்றைய நாளில் உங்களுக்கு ஏற்படக்கூடிய மனநிறைவை உங்களால் உணர முடியும். மன அழுத்தம், மன பாரம், குறைந்து எல்லா கஷ்டங்களும் சரியானது போல ஒரு உணர்வை பெறுவீர்கள். நடக்காத நல்ல காரியங்கள் எல்லாம் அடுத்தடுத்து நடக்க தொடங்கிவிடும். (முடிந்தால் நாளைய தினம் கோவிலில் வந்து விரதத்தை நிறைவு செய்பவர்களுக்கு, உங்களால் முடிந்த அன்னதானத்தை வழங்கலாம்.)

அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த விரதம் தான் இந்த மௌன விரதம். நாளை ஒருநாள் இந்த சஷ்டி விரதத்தோடு சேர்த்து, இந்த மௌனவி விரதத்தையும் இருந்து தான் பாருங்களேன். உங்களால் சஷ்டி திதி என்று எதுவும் சாப்பிடாமல் விரதத்தை மேற்கொள்ள முடியவில்லை என்றாலும், நன்றாக சாப்பிட்டுவிட்டு, வெறும் இந்த மௌன விரதத்தை மட்டும் இருக்க முடியும் என்பவர்கள், முருகப்பெருமானை மனதார நினைத்து மௌன விரதம் இருந்தால் உங்களுக்கான அருள் ஆசியை அந்த முருகப்பெருமான் நிச்சயம் வழங்குவார் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -