சனிபகவானால் ஏற்படும் சிஷ்ய யோகம் பலன்கள்

Sani Bagavan Astology

நவகிரகங்களில் மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் வாழும் கிரகமாக இப்போது வரை இந்த பூமியாகவே உள்ளது. இந்த பூமியின் மீது பிற கிரகங்கள் செலுத்தும் தாக்கத்திலிருந்து யாருமே விடுபட முடியாது. இந்த நவகிரகங்களில் பூமிக்கு மிகவும் தொலைவில் இருப்பதும், அதே நேரத்தில் மனிதர்களின் மீது மிகவும் சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவது சனிக்கிரகம் ஆகும். அந்த சனி கிரகத்தால் ஒருவரின் ஜாதகத்தில் ஏற்படும் “சஷ்ய யோகத்தை” பற்றி இங்கு காண்போம்.

சஷ்ய யோகம்

ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் அவரின் சொந்த ராசியான “மகரம், கும்பம்” ராசிகளில் இருந்தாலும், சனி பகவான் உச்சமடையும் ராசியான “துலாம்” ராசியிலிருந்தாலும் அவர்களுக்கு “சஷ்ய யோகம்” உண்டாகிறது. இதனை தெளிவாக கீழே உள்ள புகைப்படம் மூலம் காண்போம். இதை தெளிவாக அறிய ராசி கட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மகரம், கும்ப ராசி இருக்கும் கட்டத்திலோ அல்லது துலாம் ராசி இருக்கும் கட்டத்திலோ உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் இருந்தால் உங்களுக்கு சஷ்ய யோகம் உள்ளது என்பதை நீங்களே அறிந்துகொள்ளலாம்.

Rasi Kattam
ராசி கட்டம்

சஷ்ய யோகம் பயன்கள்

இந்த சஷ்ய யோகத்தில் பிறந்த நபர்கள் நல்ல உயரமானவர்களாகவும் உடல் வலிமை மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். எப்படிப்பட்ட துன்பங்களையும் தாங்கிக்கொள்ளும் மனோதிடம் கொண்டவர்களாக இருப்பர். அதே நேரத்தில் ஒரு விடயத்தில் வெற்றி பெற இறுதிவரை போராடும் உறுதியான மனநிலை பெற்றிருப்பார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். நியாய உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். நொறுக்கு தீனிகளை அதிகம் விரும்பி உண்பார்கள். எந்த ஒரு நிறுவனத்திலும் கீழ்மட்ட தொழிலாளியாக சேர்ந்தாலும் கூட, தங்களின் அர்பணிப்புணர்வுடன் கூடிய கடின உழைப்பால் சில வருடங்களிலேயே அந்த நிறுவனங்களில் உயர் பதவிகளை அலங்கரிப்பர்.

இந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்திருப்பதால், இரும்பு சம்பந்தமான தொழில்கள் மற்றும் கருப்பு நிறம் கொண்ட பொருட்கள் சம்பந்தமான தொழில் மற்றும் வியாபாரங்களில் மிகப் பெரிய அளவில் செல்வங்களை பெறுவார்கள். ஒரு சிலருக்கு கடல் கடந்தும் தங்களின் தொழில் நிறுவனங்களை தொடங்கும் யோகம் உண்டாகும். சிறந்த வாழ்க்கை துணை அமையும். பிறருக்கு தான தர்மங்களை வழங்குவதில் இவர்கள் அந்த மகாபாரத கொடை வள்ளல் கர்ணனை போன்றவர்கள். தன்னை நாடி வந்தவர்களை உபசரிப்பதில் சிறந்தவர்கள். மதம் மற்றும் ஆன்மீகத்தில் தீவிர பற்றும் ஈடுபாடும் கொண்டவர்கள். மதம் மற்றும் இறைவன் சம்பந்தமான ஆய்வுகள் செய்து அது குறித்து புத்தகங்கள் எழுதும் எழுத்தாளர்களாகவும், சொற்பொழிவாற்றும் பேச்சாளர்களாகவும் புகழ் பெறுவார்கள். ஒரு சிலர் ஆன்மீகவாதிகளாகவும்,மதகுருக்களாகவும் மாறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
வீடு மனை வாங்கும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா ? பார்ப்போம் வாருங்கள்.

English Overview:
Here we described Sasa Yogam or Sasha Yogam or Sashya Yogam benefits in Tamil. This yogam is based on Lord Sani.