- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்

பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்

- Advertisement -

கலியுகத்தில் பக்தர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம் மந்திரத்தை பற்றி தான் இன்று நாம், இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பாம்பன் சுவாமிகளுக்கு முருகப் பெருமானே நேரில் வந்து காட்சி அளித்துள்ளார். கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் கந்த கடவுள் தான் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி.

‘முருகா என்னை கூட நீ கவனித்துக் கொள்ள வேண்டாம். எனக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் பரவாயில்லை. என்னை நம்பி நான் எழுதிய சாஸ்திர பந்தத்தை படிக்கும் பக்தர்களுக்கு நீ நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்’. என்று பாம்பன் சுவாமி அவர்கள், முருகரிடம் வரம் வாங்கி இருப்பதாகவும் சாஸ்திரங்கள் சொல்கிறது. ஆகவே முருகப்பெருமானை நினைத்து பாம்பன் சுவாமிகள் எழுதிய இந்த வரிகளை நீங்கள் தினமும் படித்தால் உங்களை பிடித்த கஷ்டம் அன்றோடு நீங்கும்.

- Advertisement -

செய்யும் தொழிலில் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் வருகிறதா. தொழில் செய்யும் இடத்தில் இந்த சஸ்திர பந்தத்தை வாங்கி வைத்து தினமும் இந்த பாடலை 27 முறை படியுங்கள். நீங்கள் தொழிலில் கொடிகட்டி பறக்க தொடங்கி விடுவீர்கள். லாபம் ஓஹோ என கொட்ட தொடங்கிவிடும். செய்யும் வேலையில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா வருமானம் சரியாக வரவில்லையா.

எப்போது பார்த்தாலும் வேலையில் பிரச்சனை வருகிறதா நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு சஸ்திர பந்தத்தை வையுங்கள். தினமும் காலையில் வேலையை செய்ய தொடங்குவதற்கு முன்பு ஒருமுறையாவது இந்த சாஸ்திர மந்திரத்தை படித்துவிட்டு வேலையை செய்யத் தொடங்குங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

- Advertisement -

வீட்டிலேயே பூஜையறையில் சஸ்திர பந்தத்தை வாங்கி வைத்து தினமும் இந்த பாடலை பாராயணம் செய்யலாம். வீடு சுபிட்சம் அடையும். எல்லா பூஜை பொருட்கள் விற்கக்கூடிய கடைகளிலும் சஸ்திர பந்தம் கிடைக்கும். வேல் போலவே இந்த சஸ்திர பந்தம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாங்கி இதை பணப்பெட்டியிலும் வைக்கலாம் அல்லது தினமும் உங்களுடைய பாக்கெட்டில் வைத்து கொண்டாலும் தவறு கிடையாது. அது உங்களுடைய விருப்பம்.

சஸ்திர பந்தமே எங்களிடம் இல்லை நாங்கள் இந்த பாடலை படிக்கலாமா என்றால், தாராளமாக படிக்கலாம். தவறு ஒன்றும் கிடையாது. உங்க வீட்டு பூஜை அறையில் இருக்கும் முருகப்பெருமானின் திரு உருவப்படத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த பாடல் வரிகளை படியுங்கள். படிக்கத் தெரியவில்லையா? கையில் இருக்கும் கைபேசியில் இந்த பாடலை டைப் செய்தாலே போதும் இந்த பாடல் வந்துவிடும் நான்கு முறை ஒலிக்க விட்டு காதால் கேளுங்கள். ஐந்தாவது முறை தானாக உங்களுடைய வாய் பாட தொடங்கிவிடும். அதை முருகப் பெருமான் பார்த்துக் கொள்வார். வெற்றி மேல் வெற்றியை குவிக்கும் சஸ்திர பந்த வரிகள் உங்களுக்காக இதோ இந்த பதிவில்.

- Advertisement -

சஸ்திர பந்தம் பாடல்

வால வேதாந்த பாவா
சம்போ கத்து அன்பா
மாலைபூ ணேமதிற மால் வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந்தா வேலவா.

செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணிக்கு முன்பாக இந்த பாடலை பாடுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. அதேபோல செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணிக்கு பிறகு இந்த பாடலை பாடுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. இதேபோல கிருத்திகை நட்சத்திரம், சஷ்டி திதி, இது போன்ற முருகனுக்கு உகந்த நட்சத்திரங்கள் வரும்போது இந்த பாடலை வீட்டில் பாடலாம். தினமும் படித்தாலும் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: பணம் சேர பணப்பெட்டி ரகசியம்

சஸ்திர பத்திரத்தை நீங்கள் பாடத் தொடங்கி விட்டால் உங்கள் கஷ்டம் அன்றோடு முடிந்தது என்று நீங்களே உங்கள் தலையெழுத்தை மாற்றி எழுதிக் கொள்ளலாம். இதை விட சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இந்த பாடலை படிக்க தொடங்குங்கள் வாழ்க்கையில் வரும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். முருக பக்தர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.

சற்று முன்