தேய்பிறை சஷ்டி அன்று செய்யக்கூடாத செயல்கள்

murugan gold
- Advertisement -

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதி வரும். அந்த திதிக்கேட்ப நாம் சில தெய்வங்களை வழிபடுவோம். அதேபோல் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் சிறப்பான தெய்வமாக இருக்கும். அந்த தெய்வத்தையும் ஒரு சிலர் வழிபடுவார்கள். இப்படி கிழமையும் திதியும் தனித்தனியாக இருக்கும் பட்சத்திலோ அல்லது இரண்டும் சேர்ந்து வரும்பொழுது நமக்கு அபரிவிதமான பலன்கள் ஏற்படும்.

அந்த பலன்களை நாம் முழுமையாக பெறுவதற்கு சில வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் சில செயல்களை செய்யக்கூடாது என்றும் கூறப்படுகிறது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல ஒரு நாளைக்கு இந்த செயலை செய்ய வேண்டும் இந்த செயலை செய்யக்கூடாது என்று இருக்கிறது. அப்படி வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சஷ்டி திதி என்று என்னென்ன காரியங்களை செய்தால் நமக்கு கஷ்டங்கள் உண்டாகும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

சஷ்டி வழிபாடு

பொதுவாக சஷ்டி திதி என்பது முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. சஷ்டி விரதம் என்றாலே குழந்தை வரம் வேண்டி இருக்கக்கூடிய விரதமாக கருதப்பட்டாலும் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பலரும் சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். இதில் தேய்பிறை சஷ்டி அன்று விரதம் இருக்கும் பொழுது தங்களுடைய கஷ்டங்கள் தீரும் என்றும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் செல்வங்கள் உயரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சஷ்டி ஆனது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. பொதுவாக வியாழக்கிழமை என்பது குருபகவானுக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது. தந்தைக்கு குருவாக இருந்தவர்தான் முருகப்பெருமான். அதனால் வியாழக்கிழமையோடு வரக்கூடிய சஷ்டி திதி என்பது முருகனுக்கு மிகவும் விசேஷமான திதியாக கருதப்படுகிறது. மேலும் வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்குரிய கிழமையாகும் கருதப்படுவதால் இந்த சஷ்டி ஆனது மிகவும் விஷேஷகரமானதாக திகழப்போகிறது.

- Advertisement -

இந்த சஷ்டி திதி அன்று நாம் சில செயல்களை செய்தால் நமக்கு கஷ்டங்கள் ஏற்படும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். எக்காரணம் கொண்டும் வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை சஷ்டி அன்று வீட்டில் அசைவம் சமைக்கக்கூடாது. வெளியில் சென்று சாப்பிடலாம் என்றும் நினைக்காதீர்கள். அசைவத்தை முற்றிலும் தவிர்ப்பது மிக மிக நல்லது.

அடுத்ததாக யாரிடமிருந்தும் எந்தவித பொருளையும் கடனாக வாங்காதீர்கள். அது பணமாக இருந்தாலும் சரி நகையாக இருந்தாலும் சரி பொருளாக இருந்தாலும் சரி யாரிடம் இருந்தும் திருப்பித் தருகிறேன் என்று கூறி வாங்காதீர்கள். இலவசமாகவும் வாங்காதீர்கள். வாங்குவதாக இருந்தால் அதற்குரிய தொகையை கொடுத்துவிட்டு பிறகு வாங்குங்கள்.

- Advertisement -

அதேபோல் தங்களிடம் இருக்கும் நகையை அடமானம் வைத்து பணம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த நாளில் செய்ய வேண்டாம். பொதுவாக வியாழக்கிழமை தங்கத்தை அடமானம் வைக்க கூடாது என்று கூறுவார்கள். காரணம் தங்கம் என்பது குருவின் அம்சத்தை பெற்றதாக திகழ்வதால் தான். அதோடு சேர்த்து இந்த சஷ்டி திதியும் வருவதால் அன்றைய தினத்தில் நாம் தங்கத்தை அடமானம் வைத்தோம் என்றால் அதை நம்மால் திருப்ப முடியாத சூழ்நிலை உண்டாகும். கடன் வாங்கினோம் என்றால் அந்த கடனை அடைக்க முடியாத நிலை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: ஆசைகள் நிறைவேற சுக்கிர தீப வழிபாடு

குரு குபேரர் முருகர் என்று மூவருக்கும் உகந்த தினமான வியாழக்கிழமை சேர்ந்து வரக்கூடிய சஷ்டி திதி அன்று மேற்சொன்ன இந்த மூன்று செயல்களையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -