- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎளிமையான சஷ்டி வழிபாடு

எளிமையான சஷ்டி வழிபாடு

- Advertisement -

மாதத்தில் 15 நாட்கள் வளர்பிறை திதியும் 15 நாட்கள் தேய்பிறை திதியும் வரும். அந்த திதிக்குரிய தெய்வத்தை அந்த தினத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு அந்த தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். அந்த வகையில் முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுவது சஷ்டி திதி. சஷ்டி திதி அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் வேண்டிய வரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சஷ்டி திதி அன்று முருகப்பெருமான எளிமையான முறையில் வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எளிமையான சஷ்டி வழிபாடு

வளர்பிறை சஷ்டி தேய்பிறை சஷ்டி என்று இரண்டு சஷ்டிகள் மாதத்தில் வரும். இந்த சஷ்டிகளில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். பொதுவாக சஷ்டி திதி அன்று வழிபாடு செய்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குழந்தை பாக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நாம் எந்த வரம் வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த வரத்தை முருகப்பெருமான் தருவார். இதற்காக விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இதில் எளிமையான முறையில் வழிபாடு செய்யும் ஒரு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டு முறைக்கு வேல் அல்லது ஓம் வேண்டும். இவை இரண்டில் எது இருக்கிறதோ அதை வைத்துக் கொண்டுதான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த சஷ்டி திதி நாளைய தினம் திங்கட்கிழமை வருகிறது. இந்த தினத்தில் காலையில் இராகு காலம், எமகண்டம் தவிர்த்து மீதம் இருக்கும் நேரத்தில் வீட்டில் அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்த வழிபாட்டை செய்யலாம் அல்லது வீட்டில் ஏதாவது ஒரு அமைதியான இடத்திலும் அமர்ந்து கொண்டு இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது வடக்கு பார்த்தவாறு தான் அமர்ந்து கொள்ள வேண்டும். கையில் வேல் அல்லது ஓம் வைத்திருக்க வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். பாராயணம் செய்யத் தெரியாது என்பவர்கள் கந்த சஷ்டி கவசத்தை அமைதியாக அமர்ந்து கேட்கலாம்.

- Advertisement -

வேல் அல்லது ஓம் இல்லை என்பவர்கள் கையில் முருகப்பெருமானின் அம்சம் பொருந்திய வேலை வைத்துக்கொண்டு இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யலாம். இந்த முறையில் நாம் நாளைய தினமான சஷ்டி தினத்தன்று முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:தொழில் நஷ்டத்தை தவிர்க்கும் பரிகாரம்

மிகவும் சக்தி வாய்ந்த அதே சமயம் எளிமையாக இந்த கந்த சஷ்டி கவசப் பாடலை சஷ்டி திதி அன்று பாராயணம் செய்பவர்களுக்கு முருகப் பெருமானின் அருளால் வேண்டியவரும் கிடைத்ததோடு குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்