இன்று முருகனை இப்படி வணங்கினால் 4448 வியாதிகள் நீங்கும் தெரியுமா ?

lord-muruga1

இன்று(டிசம்பர் 24,2017 ) முருகனுக்கு உரிய சஷ்டி என்பது நாம் அறிந்ததே. ஆனால் மாதா மாதம் வரும் சஷ்டியை போல அல்லாமல் மார்கழி மாதத்தில் வரும் இந்த சஷ்டிக்கு விஷேஷம் அதிகம். இன்று விரதம் இருந்து முருகன் கோயிலிற்கு சென்று 36 முறை வளம் வருவது சிறந்தது. அதோடு முருகனுக்கு அர்ச்சனை செய்து திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை படிப்பதன் மூலம் ஒருவருக்கு 4448 வியாதிகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

Lord Murugan

முருகப் பெருமானை இந்த நன் நாளில் வழிபடுவோருக்கு எதிரிகள் தொல்லை அகலும், கடன் தொல்லை விலகும், தோஷங்கள் நீங்கும், முன் ஜென்ம பாவங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

குழந்தை பெரு இல்லாதவர்கள் மாதா மாதம் சஷ்டி விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் நிச்சயம் குழந்தை பெரு பெறலாம். இதைத் தான் நம் முன்னோர்கள் ‘சட்டியில் (சஷ்டியில்) இருந்தால் அகப்பையில் (கருப்பையில்) வரும்’ என்று கூறியுள்ளனர்.

இதையும் படிக்கலாமே:
அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம்

ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டியில் இருந்தே பலர் விரதத்தை தொடங்குவது வழக்கம். ஆனால் முருகனை நினைத்து விரதம் இருக்க நினைப்பவர்கள் எந்த சஷ்டியில் இருந்து வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். ஆகையால் பல அற்புத பலன்களை பெற இன்று முதலே உங்கள் சஷ்டி விரதத்தை தொடங்கலாம்.