அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம்

lord-Murugan

கந்தனை பூஜிக்கும் வேலையில் நாம் அவருக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக பல அற்புத பலன்களை பெறலாம். முருகனின் மந்திரத்தை ஜெபிக்கும் ஒருவருக்கு அறிவும் திறமையும் தைரியமும் பெருகும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருவரின் அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் காயத்ரி மந்திரம் இதோ.

murugan

முருகன் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்

Sivanmalai Murugan

பொது பொருள்:
தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.

kantha sasti kavasam lyrics

- Advertisement -

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும். அதோடு குரு பகவானின் அருளும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜெபிக்கலாம்.

முருகன் வழிபாடு

தமிழர்களின் கடவுளாக பாவிக்கப்படுவர் முருகப்பெருமான். அனைவரும் மிக எளிமையாக வழிபடக் கூடிய ஒரு தெய்வமாகவும் முருகப்பெருமான் திகழ்கிறார். பல சித்தர் பெருமக்களுக்கு முதலில் காட்சி தந்த தெய்வமாகவும் முருகப்பெருமான் திகழ்கிறார். முருகப்பெருமான் உருவமே சரவணபவ எனப்படும் தமிழ் மந்திர எழுத்துக்களின் முழு வடிவமாக இருக்கிறது. முருகன் தமிழகமெங்கும் பல்வேறு நிலைகளில் கோவில் கொண்டிருக்கிறார் என்றாலும் முருகனுக்குரிய சிறந்த தலங்களாக ஆறுபடை வீடுகள் எனப்படும் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருச்செந்தூர், திருத்தணி, பழனி ஆகிய ஆறு முருகன் கோயில்கள் பக்தர்கள் அனைவராலும் சென்று வழிபடக்கூடிய சிறப்பு பெற்ற முருகன் தலங்களாக இருக்கின்றன. தினந்தோறும் முருகனை வழிபட்டு வருபவர்கள் அவர்கள் விரும்பிய அனைத்தும் வாழ்வில் கிடைக்கப் பெறுவார்கள் என்பது உறுதி.

kantha sasti kavasam lyrics

முருகன் வழிபாட்டிற்குரிய தினங்கள்

தினந்தோறும் முருகப் பெருமானை வழிபடலாம் என்றாலும் அவரின் முழுமையான அருளைப் பெறுவதற்கு வழிபாடு செய்ய மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி தினங்கள் ஆகியவை சிறப்பான தினங்களாக இருக்கின்றன. ஐப்பசி மாதத்தில் வருகின்ற சஷ்டி திதியில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதாவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் விரதம் சஷ்டி விரதம். அதுபோல கார்த்திகை மாதம் முழுவதும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தர வல்லதாகும்.

kantha sasti kavasam lyrics

முருகன் வழிபாடு பலன்கள்

முருகப்பெருமானின் முறைப்படி வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். எதிரிகள் தொல்லைகளை நீக்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறார்கள். திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். வேலை தேடி அலைபவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்கள் சிறக்கும். லாபங்கள் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
தோஷங்களை நிவர்த்தி செய்யும் பிள்ளையார் மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Murugan gayatri mantra in Tamil. It is also called as Gayatri manthiram or Gayathiri manthiram in Tamil.