சனிக்கிழமையில் இந்தப் பொருட்களை வாங்கினால் குடும்பத்தில் சண்டையும், கடனும் ஏற்படுமாம்! ஏன் அப்படி நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

sani-el-ellu

ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம் தருவதாக அமையும். அதே போல ஒவ்வொரு பொருட்களையும் குறிப்பிட்ட கிழமைகளில் வாங்கும் பொழுது துரதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். எந்த பொருளை? எந்த கிழமையில் வாங்க வேண்டும்? என்கிறது சாஸ்திரம். அந்த வகையில் சனிக்கிழமையில் இந்த பொருட்களை வாங்கும் பொழுது உங்களுடைய குடும்பத்தில் வீண் சண்டைகளும், சச்சரவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அது போல தீராத கடன் தொல்லையும் ஏற்படுமாம்! அப்படி சனிக்கிழமையில் நாம் எந்த பொருட்களை வாங்க கூடாது? ஏன் வாங்க கூடாது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக் கூடாது என்பது நியதி. இரும்பு என்பது சனிபகவானுடைய ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்கவே கூடாது. அப்படி வாங்கினால் குடும்பத்தில் தேவையில்லாத சச்சரவுகள் ஏற்படும். காரணமே இல்லாத சண்டைகளும் உருவாகும். ஆனால் இரும்பு பொருளை நாம் வாங்க கூடாதே தவிர அவற்றை தானமாக மற்றவர்களுக்கு சனிக்கிழமையில் வழங்கினால் கடன் தீரும் என்பதும் உண்மை. தீராத கடன் தீர சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம். கோவில்களுக்கு இரும்பு பொருட்களை வாங்கிக் கொடுப்பதை சனிக்கிழமையில் செய்வது உத்தமம்.

சனிக்கிழமையில் எண்ணெய் கடைக்குச் சென்று வாங்கக்கூடாது. சனி நீராடினால் தோஷங்கள் விலகும். அதாவது சனிக் கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்குமாம். ஆனால் எண்ணெய் வாங்க சனிக்கிழமை உகந்தது அல்ல. எந்த எண்ணெயாக இருந்தாலும் நீங்கள் சனிக்கிழமைகளில் வாங்கும் பொழுது அடிக்கடி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

salt

108 பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அதில் உப்பு முதன்மையானது. உப்பை எப்பொழுதும் வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது சிறந்த பலன்களை கொடுக்கும். தவறியும் சனிக்கிழமையில் வாங்குவதை நிறுத்தி விடுங்கள். சனிக்கிழமையில் உப்பு வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நஷ்டங்களை சந்திப்பீர்கள். வெள்ளிக்கிழமைகளில் உப்பை வாங்கி பூஜை அறையில் வைத்து விட்டு பின் ஜாடியில் கொட்டி அதில் 5 ரூபாய் நாணயத்தை போட வேண்டும். இப்படி செய்ய வீட்டில் செல்வம் செழிக்கும்.

லக்ஷ்மி தேவி துடைப்பம் போன்ற பொருட்களிலும் வாசம் செய்கிறாள். வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை எப்பொழுதும் சனிக்கிழமையில் வாங்கக்கூடாது. துடைப்பம், மாப், ஒட்டடை குச்சி போன்ற சுத்தம் செய்யக் கூடிய பொருட்களை தவறியும் சனிக்கிழமையில் வாங்குவதை தவிர்க்கவும். சனி பகவானுக்கு உரிய எள் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது என்கிற நியதியும் உண்டு. எள் எண்ணெய் கொண்டு கோவில் சனி பகவானுக்கு தீபம் ஏற்றினால் சகல செல்வாக்கும் அதிகரிக்கும்.

rice-flour

சமையலுக்கு தேவைப்படும் மாவு போன்ற பொருட்களையும் சனிக்கிழமைகளில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வெள்ளிக்கிழமையில் மசாலா பொருட்களை வாங்குவதை மற்றும் அரைப்பதை தவிர்ப்பார்கள். அதே போல சனிக்கிழமையில் மாவு சார்ந்த பொருட்களை காசு கொடுத்து வாங்க கூடாது அப்படி வாங்கினால் எதிர்பார்க்கும் காரியங்கள் எதிர்பார்த்தபடி நிறைவேறாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. நினைத்த காரியங்களில் இடையூறுகள் ஏற்படும். கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் தீராத துன்பமும் குடும்பத்தில் பிரச்சனைகளும் உண்டாகும்.