40 நாள் வர்ற காஸ் சிலிண்டர் 60 நாளுக்கு மேலே வரணுமா? அப்டின்னா இதெல்லாம் மறக்காம தெரிஞ்சி வெச்சிக்கோங்க!

stove-gas-cylinder
- Advertisement -

சிலிண்டர் விலை சரமாரியாக ஏறிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் கியாசை மிச்சப்படுத்துவது எப்படி? என்பதை தெரிந்து வைத்திருப்பது ரொம்பவே நல்லது. பொதுவாக பலருக்கும் 40 நாட்கள் வர கூடிய கேஸ் சிலிண்டர், சிறு சிறு விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம், 60 நாட்களுக்கு மேலே கூட வரும் என்கின்றனர் அனுபவமுள்ள இல்லத்தரசிகள் பலர்! அப்படியான பயனுள்ள கேஸ் சேமிப்பு பற்றிய வீட்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சமைக்க எரிவாயு பர்னரின் மூலம் நமக்கு கிடைக்கிறது எனவே பர்னரை முதலில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பர்னர் அழுக்கு பிடித்திருந்தால் உள்ளே எரிவாயு நிறையவே வீணாகிக் கொண்டிருக்கும். எனவே வாரம் ஒரு முறை பர்னரை நன்கு வினிகர் அல்லது புளி தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் செய்யுங்கள்.

- Advertisement -

அடுப்பின் மீது பரவலாக இருக்கக்கூடிய வகையில் அடிப்பகுதி கனமாகவும், தட்டையாகவும் இருக்கக்கூடிய வகையிலான பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் கேஸ் மிச்சம் ஆகும். இதனால் நெருப்பு பரவலாக படுவதால் சீக்கிரமே சூடாகி உள்ளே இருக்கும் பொருளும் சீக்கிரம் வெந்துவிடும். சமைக்கும் பொருட்களை தேவையான சமயங்களில் மூடி வைத்து சமைப்பதும் சீக்கிரம் வேக வழி வகுக்கும் இதனால் கேஸ் மிச்சமாகும்.

பருப்பு வகைகள் எதுவாக இருந்தாலும் அரை மணி நேரம் நன்கு ஊற வைத்து பின்னர் சமைக்க வேண்டும். அதுபோல கடினமான கடலை வகைகள் முந்தைய நாள் இரவே ஊற வைத்து மறுநாள் சமைப்பது தான் கியாஸை மிச்சப்படுத்தும். அப்படி ஊற வைக்க மறந்தவர்கள் அதை வாணலியில் ஒரு முறை நன்கு வறுத்து பின்னர் ஊற வையுங்கள், பின் சமைத்தால் சீக்கிரம் வேகும். பருப்பு வகைகள், அசைவு கறி உணவுகள் தயாரிக்கும் பொழுது சீக்கிரம் வேக ஒரு சிறு துண்டு அளவிற்கு கொட்டாங்குச்சியை உள்ளே போட்டு வேக வையுங்கள். ரொம்பவும் அருமையாக பஞ்சு போல சுலபமாக வெந்துவிடும்.

- Advertisement -

சமையல் செய்யும் பொழுது பாத்திரத்தை அடுப்பில் வைப்பதற்கு முன்னர் ஒரு முறை கழுவுவது பலருக்கு வழக்கமாக இருக்கும். அதில் தவறில்லை, ஆனால் கழுய பாத்திரத்தை துடைத்துவிட்டு பின்னர் வையுங்கள். ஈரத்துடன் வைத்தால் அந்த ஈரம் வற்றுவதற்கே சிறிதளவு காஸ் வீணாகிவிடும். அது போல பிரிட்ஜில் இருந்து எடுக்கும் உணவுகளை உடனே சமைக்க கூடாது. அதில் இருக்கும் குளிர்ச்சி தன்மை நீங்குவதற்கு நிறைய கேஸ் வீணாகும். அரை மணி நேரத்திற்கு பின்பு சமைத்து பாருங்கள் கேஸ் மிச்சமாகும். சமைக்கும் பொருட்களின் அளவுக்கு ஏற்ப பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். பெரிய பாத்திரங்களை பயன்படுத்தினால், காஸ் நிறையவே வீணாகிறது.

இதையும் படிக்கலாமே:
ரொம்ப நாள் பயன்படுத்திய வெள்ளை துணி பழுப்பு நிறம் ஆகிவிட்டதா? கை வலிக்காமல் பழைய வெள்ளை சட்டை, பழைய வேட்டி, பழைய டர்க்கி டவல் இவைகளை புதுசு போல மாற்ற இதோ இந்த 2 பொருள் போதுமே.

சமைக்க ஆரம்பிப்பதற்கு முன் தேவையான எல்லா பொருட்களையும் அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். சமைக்கும் பொழுது அவசரமாக பொருட்களை தேடுவதில் கூட கேஸ் நிறைய வீணாகிறது. அடிக்கடி சுடு தண்ணீர் வைப்பவர்களுக்கு கண்டிப்பாக கேஸ் வீணாகும், எனவே இண்டக்ஷன் அல்லது ஹாட் வாட்டர் கெட்டில் போன்றவற்றை அவ்வப்போது பயன்படுத்தலாம். குறிப்பாக கேஸ் அடுப்பை சமைத்து முடித்த பின்னர் கீழே ரெகுலேட்டரை ஆஃப் செய்ய வேண்டும். அப்போது தான் லேசாக கேஸ் கசிவதிலிருந்து பெருமளவு கியாஸை மிச்சப்படுத்த முடியும். இப்படி சிறு சிறு விஷயங்களை சற்று சிரமம் பார்க்காமல் நீங்கள் கையாளும் பொழுது உங்களுடைய கேஸ் 40 நாட்களில் இருந்து 60 நாட்களுக்கும் மேலே கண்டிப்பாக வரும்.

- Advertisement -