இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க ஒரு மாசம் வர கேஸ் ரெண்டு மாசம் கூட தாராளமாக வரும்!

stove-gas-cylinder
- Advertisement -

எரிவாயு சிலிண்டர் விற்கும் விலைக்கு அதை மிச்சப்படுத்துவதில் தான் நம்முடைய கவனமும் இருக்க வேண்டும். பெரிதாக எதுவும் செய்யாமல் இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே நம்முடைய கியாஸ் 30 நாட்கள் மட்டும் அல்லாமல் 45 நாள் முதல் 60 நாட்கள் கூட கூடுதலாக உழைக்கும். நாம் கடைப்பிடிக்க வேண்டியது என்ன? என்கிற இந்த எளிய வீட்டு குறிப்பு தகவல்களை இந்த பதிவில் இனி தொடர்ந்து காண்போம் வாருங்கள்.

டிப் 1:
முதலில் எரிவாயுவை மிச்சப்படுத்த கேஸ் சிலிண்டரை ஆன் செய்வதற்கு முன்பு சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கியாசை ஆன் செய்யுங்கள். பாத்திரத்தின் அடி பாகத்திற்குள் மட்டுமே நெருப்பு எரிய வேண்டும். அதற்கு மேலே சென்று நெருப்பு எரியுமாறு வைக்கக் கூடாது. இதனால் அதிக அளவு கேஸ் வீணாகிறது.

- Advertisement -

டிப் 2:
கேஸ் சிலிண்டரில் நாம் நாள் ஒன்றுக்கு இரண்டிலிருந்து நான்கு முறையாவது பாலை வைத்து சூடு படுத்துகிறோம். பாலை அடுப்பில் வைத்த பின்பு ஒரு சுத்தமான குழி கரண்டி ஒன்றை போட்டு வையுங்கள். இதனால் பால் ஆனது கொதித்தால் பொங்கி வழிந்து காஸ் வீணாகாமல் தடுக்கலாம்.

டிப் 3:
காய்கறிகளை சமைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு பிரிட்ஜில் இருந்து எடுத்து வைத்து விட வேண்டும். இல்லை என்றால் பிரஷ் ஆன காய்கறிகளை அன்றன்றைக்கு பயன்படுத்தி பாருங்கள். இதனால் உணவு சீக்கிரம் சமைக்கப்படும், கேஸ் வீணாவது தடுக்கப்படலாம். காய்கறிகள் மட்டுமல்ல பிரிட்ஜில் இருந்து எடுக்கக்கூடிய எந்த ஒரு பொருளையும் உடனே அடுப்பில் வைக்காதீர்கள்.

- Advertisement -

டிப் 4:
ஆட்டுக்கறி மற்றும் பருப்பு வகைகளை வேக வைக்கும் பொழுது பொதுவாக அதிக விசில் விட வேண்டி இருக்கும் ஆனால் நீங்கள் வேக வைக்கும் போது ஒரு சிறு கொட்டாங்குச்சி துண்டு ஒன்றை கழுவி விட்டு பின்பு குக்கருக்குள் போட்டு விடுங்கள். குறைவான விசில்களிலேயே சீக்கிரம் இவைகள் வெந்து வந்துவிடும். இதனால் அதிகளவு கியாஸ் மிச்சப்படும்.

டிப் 5:
கேஸ் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் பொழுது ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க கூடாது. அருகில் இருக்கும் ஃபேனையும் ஆப் செய்து விடுங்கள். இதனால் நெருப்பு அலை பாய்ந்து கேஸ் வீணாவது தடுக்கப்படும். உணவுப் பொருட்களும் சீக்கிரம் தயாராகும்.

- Advertisement -

டிப் 6:
சமைக்கும் முன்பு சமைக்க வேண்டிய எல்லா பொருட்களையும் தயாராக அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் அதை தேடுவதில் நேரத்தை வீணாக்க தேவையில்லை! இதனால் கியாசும் வீணாவதை தடுக்கலாம்.

டிப் 7:
சமைக்கும் பாத்திரத்தின் அடி பாகமானது தட்டையாக பறந்து விரிந்து இருந்தால் அதிக அளவு கியாஸ் வீணாகாது. அதுவே குழியாக ஸ்டாண்டுக்கு உள்ளே போகுமாறு இருந்தால் கண்டிப்பாக நிறைய கேஸ் வீணாகும் எனவே பாத்திரத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.

டிப் 8:
அரிசி, பருப்பு, தானியங்கள், பயறு எதுவாகினும் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை நன்கு ஊற வைத்து பிறகு சமைக்க பாருங்கள். குறைந்த நேரம் ஊற வைத்தால் அதிகம் கேஸ் செலவாகும். அதிக நேரம் ஊற வைத்தால் குறைந்த கேஸ் செலவாகும்.

டிப் 9:
பாத்திரத்தை பயன்படுத்தும் முன்பு ஒரு முறை கழுவி தான் அடுப்பில் வைப்பது வழக்கமாக இருக்க வேணும். அப்படி தண்ணீரால் கழுவி உடனே வைத்தால் அந்த தண்ணீர் வற்றுவதற்கு நேரம் எடுக்கும். நன்கு துடைத்துவிட்டு பிறகு பாத்திரத்தை பயன்படுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே:
புதுசா வாங்கின இரும்பு சட்டியை ஒரு முறை மட்டும் இப்படி பழக்கி வச்சுக்கிட்டா போதும். இனி காலத்துக்கு இரும்பு சட்டியில் சமைக்கும் போது ஒட்டவும் ஒட்டாது, துருவும் பிடிக்காது.

டிப் 10:
அடுப்பின் நெருப்பு ப்ளூ கலரில் எரிய வேண்டும். அப்படி இல்லை என்றால் கேஸ் பர்னரை சிரமம் பார்க்காமல் மாதம் ஒரு முறையாவது அதன் ஓட்டைகளில் பின் அல்லது கம்பி போன்ற ஏதாவது ஒன்றை விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -