நவகிரகங்களில் இருந்து சக்தி வெளிப்படுவது உண்மை தான் என நிரூபித்த விஞ்ஞானி

navagragham-1

“சூரிய” குடும்பத்தில் 9 கோள்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நவ கோள்களும் இந்த பூமியில் இருக்கும் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற உண்மையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரத நாட்டின் சித்தர்களும், வானியல் அறிஞர்களும் அறிந்தனர். ஆனால் இந்த உண்மை பற்றி கடந்த நூற்றாண்டில் தான் மேலை நாட்டு ஆய்வாளர்கள் அறிந்தனர். அதைப் பற்றி இங்கு சிறிது காண்போம்.

Navagragham

இந்த நவகிரகங்களும் கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக உண்டானது என்பது நமது நாட்டின் மெய்ஞ்ஞானிகளும் இன்றைய நவீன விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உண்மையாகும். ஆக இந்த நவகோள்கள் ஒவ்வொன்றும், ஓரு விதமான கதிர்வீச்சை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இந்த நவ கோள்களின் “கதிர்வீச்சு சக்தி” பல ஆயிரம், லட்சம் கிலோமீட்டர்கள் கடந்து, இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரின் மீதும் தனது ஆற்றலை செலுத்துகிறது. இது அந்த உயிரினத்தின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கிரகங்களை பற்றி 1920 ஆம் ஆண்டுகளில் “சிஜெவ்ஸ்கி” என்ற ரஷ்ய விஞ்ஞானி ஆராய்ந்து சில உண்மைகளைக் கண்டுபிடித்தார். அதன்படி சூரியனில் எந்த ஓரு வருடத்தில் வெடிப்பு ஏற்படுகிறதோ அந்த வருடங்களில் பூமியின் பல பகுதிகளில் மனிதர்களுக்கிடையே போர்கள் ஏற்படுகிறது எனவும், அது போல் “செவ்வாய் கிரகம்” ஓரு குறிப்பிட்ட அமைப்பில் வரும் வருடங்களில் உலகின் மிக சிறந்த “போர்வீரர்களும், தளபதிகளும்” பிறப்பதாக கண்டுபிடித்தார். சிஜெவ்ஸ்கியின் இந்த ஆய்வு முடிவு மறுக்க இயலாத படி இருந்தன.

navagragha-mandhiram

ஆனால் அப்போது “ரஷ்ய” அதிபராக இருந்த “ஸ்டாலின்” சிஜெவ்ஸ்கியின் இந்த ஆய்வு முடிவு தங்களின் “கம்யூனிச” கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதாக கூறி, சிஜெவ்ஸ்கியின் ஆய்வு முடிவுகளை மறைத்து, சிஜெவ்ஸ்கியை ரஷ்யாவின் “சைபீரியா” பகுதியில் சிறையில் அடைத்தார்.
1953 ஆம் ஆண்டு ஸ்டாலின் இறந்த பிறகு விடுதலை செய்யப்பட்ட சிஜெவ்ஸ்கி சில மாதங்களிலேயே இறந்து போனார். பிறகு அவருடைய ஆய்வுகளை பற்றி ஆராய்ந்த பிற மேலை நாட்டு விஞ்ஞானிகள் அவரது முடிவுகள் உண்மை என்று ஏற்றுக்கொண்டனர்.

- Advertisement -

Suriya puyal

நவகிரகங்களின் தாக்கம் மனிதர்களின் வாழ்வில் பிரதிபலிக்கிறது என்பதை தமிழர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து அதன் படி ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கினார். நவீன விஞ்ஞானமோ அதை சமீபத்தில் தான் கண்டறிந்துள்ளது. அறிவியலிலும் ஜோதிடத்திலும் மேலோங்கி இருந்த தமிழர்களின் அறிவாற்றல் மழுங்கடிக்கப்பட்டதா இல்லை எப்படி அந்த அறிவு தொடர்ச்சி அறுந்தது என்பதை இறைவன் மட்டுமே அறிவார்.

இதையும் படிக்கலாமே:
அம்மை என்று சிவனால் அழைக்கப்பட்ட ஒரே தமிழ் பெண் பற்றி தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிடம் சார்ந்த தகவல்கள், மந்திரங்கள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.