இடுப்பில் அரைஞான் என்கிற கருப்பு கட்டுவது ஏன்? பெண்கள் அரைஞான் கயிறு கட்டலாமா? இதனால் வரும் ஆபத்துக்கள் என்னென்ன? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

araignaan-kayiru-thread
- Advertisement -

முந்தைய காலம் முதல் இந்த நவீன காலம் வரை, பல வீடுகளில் குழந்தை பிறந்த உடனேயே அரைஞாண் கயிறும் கட்டி விடுகிறார்கள். அந்தக் குழந்தை எவ்வளவு வளர்ந்து பெரியவர் ஆனாலும், அந்த அரைஞான் கயிறு கட்டும் பழக்கத்தை மட்டும் மாற்றிக் கொள்வதில்லை. உண்மையில் அரைஞான் கயிறு கட்டப்படுவது என்ன காரணத்திற்காக? என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நம் முன்னோர்கள் வழிகாட்டிய ஒவ்வொரு செயலுக்கும் மிகப் பெரிய அர்த்தம் இருப்பது, இதன் மூலமும் நம்மால் உணர முடியும். அதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

araignaan kayiru

அரைஞான் என்பதில் இருக்கும் அரை, பாதி உடலை குறிக்கும் இடுப்பையும், ஞான் என்பது கயிறையும், தொங்குதல் என்ற வார்த்தையையும் குறிக்கிறது. இதைத்தான் அரைஞாண் என்று கூறப்பட்டது. இந்த அரைஞான் கயிறு வெறும் மதசார்புக்காக கட்டப்பட்டவை அல்ல. இது மூடநம்பிக்கையை ஊக்குவிக்கிறது என்றும் கூறிவிட முடியாது. இதில் இருக்கும் மருத்துவ நன்மைகள் கருதியே இன்றும் மக்கள் இதனை தவறாமல் கடைபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரு மனிதன் உடலில் அரைஞான் கயிறு மட்டும் கட்டி இருந்தாலும், அவன் அம்மணமாக பார்க்க படமாட்டான் என்று புராணங்கள் கூறுகிறது. இதற்கு தக்க உதாரணமாக மகாபாரதத்தில் துரியோதனனை வீழ்த்த கிருஷ்ணன் செய்த திருவிளையாடலை எடுத்துக் கொள்ளலாம். தன் மகன் துரியோதனனை காப்பாற்ற காந்தாரி, தான் பெற்றுள்ள சக்தியை அவனுக்கு அளிக்க, தன் மகனை உடை ஏதும் இல்லாமல் வரவழைப்பாள்.

krishnar

ஆனால் இடையில் புகுந்து கிருஷ்ணன், ஈன்றெடுத்த தாயாக இருந்தாலும், அவர் முன் இப்படி முண்டமாக செல்வது தவறு என்று கூறி அரைஞான் கயிறு ஒன்றை கட்டி விடுவார். இதனால் காந்தாரியின் பார்வை சக்தி பாதியிலேயே நின்று விடும். அதனால் தான் துரியோதனன் குருசேத்திரப் போரில் இறுதியில் இடுப்புக்கு கீழ் உள்ள தொடை பிளந்து கொல்லப்படுகிறான். அத்தகைய சக்தி வாய்ந்த அரைஞாண் கயிறு மனிதனுடைய கடைசி காரியத்தில் மட்டுமே நீக்கி விடப்படுகிறது.

- Advertisement -

ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய இடுப்பில் அரைஞான் கயிறு கட்டிக் கொண்டிருக்க வேண்டும். இதனால் தான் அவர்களுக்கு ஏற்படும் குடலிறக்க நோய் வெகு சீக்கிரம் தாக்காமல் இருந்தது. ஆனால் இப்போது பலரும் அதனை அலட்சியம் செய்வதால் இந்நோய் அனைவருக்கும் இயல்பாக வந்துவிடுகிறது. அதிக உடல் எடையால் மற்றும் பளு அதிகம் இருக்கும் வேலைகளை செய்யும் நபர்களுக்கும் குடல் இறக்க நோய் அதிக அளவில் பாதிக்கச் செய்கிறது. ஹெர்னியா எனப்படும் இந்த நோய் பெண்களை விட ஆண்களுக்குத் தான் அதிகம் தாக்குகிறது. இதனால் பெண்களுக்கு அரைஞான் கயிறு கட்டாய படுத்தப்படவில்லை. ஆனால் உண்மையில் பெண்கள் அரைஞான் கயிறு கட்டுவது நன்மையே தரும்.

black-thread

நம் உடம்பில் ஏதாவது ஒரு சிறு பொருளாவது கருப்பு நிறத்தில் இருப்பது திருஷ்டியை நீக்கும் என்பார்கள். என்னேரமும் இதனை நாம் கடைபிடிப்பது சாத்தியமல்ல. அதனாலும் அரைஞான் கயிறு அணிந்து கொண்டிருப்பது திருஷ்டியை அண்ட விடாமல் செய்யும் என்று நம்பப்பட்டது. கருப்பு நிறம் என்பது தெய்வீக நிறமாக பார்க்கப்படுகிறது. துஷ்ட சக்திகளை அழிக்கும் நிறம், ‘கருப்பு நிறம்’ ஆகும். இதனால் தான் வெளியில் செல்லும் பொழுது கூட, சில பேருக்கு கையில் கரிகட்டையை கொடுத்து அனுப்புவார்கள். மருத்துவம் மற்றும் ஆன்மீகம் இரண்டிலும் அரைஞான் கயிறு கட்டுவது நன்மை தரும் என்று கூறுவதால் இதனை ஒதுக்கி விடாமல் இனிமேலும் அனைவரும் தவறாமல் கடைபிடிப்பது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே
சென்னையில் அரச மரத்தில் சுயம்புவாக தோன்றிய விநாயகர்! இவரை வணங்கினால் 6 வாரத்தில் நினைத்தது நினைத்தபடியே நடக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -