நடராஜர் சிலையின் விஞ்ஞான ரகசியத்தை கண்டு வியந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Natarajar-and-Einsten-1

“ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு” தெரிந்த நபர் ஒருவர் இருந்தார். ஆங்கில வழி கல்வி கற்ற அவர் எப்போதும் இந்து மதத்தையும் இந்தியாவைப் பற்றியும் தூற்றி பேசுவார். திடீரென்று ஒரு நாள் “பகவத் கீதையை” புகழ்ந்து பேச ஆரம்பித்ததை கண்டு அங்கிருப்போர்கள் அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர். அப்போது ராமகிருஷ்ணர் “ஏதாவது ஒரு ஐரோப்பியனோ அல்லது அமெரிக்கனோ பகவத் கீதையை புகழ்ந்து கூறியிருப்பான். அதனால் தான் இவனும் கீதையை புகழ்கிறான்” என்று கூறினார். இந்த வகையான மனிதர்கள் இன்றும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் உண்மையிலேயே இந்து மதத்தின் தத்துவத்தை உணர்ந்து அதைப் பாராட்டிய ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Einsten

தன்னுடைய “சார்பு தத்துவக்” கோட்பாட்டிற்காக “நோபல் பரிசு” பெற்றவர் இயற்பியல் விஞ்ஞானி “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்”. பொதுவாக பெரும்பாலான விஞ்ஞானிகள் மனித வாழ்க்கையை விஞ்ஞானப் பூர்வமாக அணுகும் தன்மைகொண்டவர்களாக இருப்பதால், அவர்களில் பெகும்பாலானோர் இறை மறுப்பு கொள்கை உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் எல்லாவற்றிலும் சற்று வித்தியாசமானவராக இருந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தான் ஒரு அறிவியல் விஞ்ஞானியாக இருந்து மிகப்பெரும் சாதனையை புரிந்திருந்தாலும் “மதம், தத்துவம், இறைவன்” போன்ற விஷயங்களில் தனி ஆர்வமும், தேடலும் கொண்டிருந்தார்.

பிறப்பால் “யூத” மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஐன்ஸ்டீன் “கீழை நாட்டு” மதங்களிலும், தத்துவங்களிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார். அதிலும் இந்து மதம் சம்பந்தமான பல நூல்களை அவர் அடிக்கடி படித்து வந்தார்.”பகவத் கீதை” நூலை மிகவும் விரும்பி படித்து அதில் கூறப்பட்டுள்ள தத்துவங்களின் உண்மையை உணர்ந்து சிலாகித்தார்.

Chithambaram natarajar

அந்த வகையில் அவர் இந்து மதக் கடவுளான சிவபெருமானின் “நடராஜர்” உருவத்தின் மீது தனி ஆர்வம் கொண்டார். அந்த உருவத்தை குறித்து அவர் மேலும் ஆராய்ந்த போது மனிதனின் கண்களால் காணமுடியாத, அதே நேரத்தில் உண்மையாக இருக்கும் “அணுவின் இயக்கத்தை” அந்த “நடராஜர் சிலையின்” வடிவில் உருவாக்கிய அக்கால இந்துக்களின் விஞ்ஞான அறிவைக் கண்டு வியந்தார். அதனால் ஒரு சிறிய அளவிலான நடராஜர் சிலையை எப்போதும் தனது படிக்கும் அறை மேஜையின் மீது வைத்திருந்தார். மேலும் “இந்த உலகம் ஆன்மிகத்திலும், விஞ்ஞானத்திலும் இந்தியாவிற்கு கடன் பட்டிருக்கிறது” என்று இந்தியாவின் புகழை பறைசாற்றினார்.

இதையும் படிக்கலாமே:
மனிதர்களை போல பானகம் அருந்தும் நரசிம்மர். ஆச்சர்யத்தில் உறைந்த பக்தர்கள்

English Overview:
Albert Einstein was shocked by seeing the science in Natarajar statue. He used to keep one Natarajar statue in his study room. He admired by seeing that statue.