மனிதர்களை போல பானகம் அருந்தும் நரசிம்மர். ஆச்சர்யத்தில் உறைந்த பக்தர்கள்

Narasimmar-Temple-1

“நம்பினோர் கெடுவதில்லை” என்பது நான்கு வேதங்களின் வாக்காகும். நன்மைக்கும் தீமைக்கும் ஆன போராட்ட காலங்களில் நல்லவர்களுக்கு தெய்வமே என்றும் துணையாக இருந்து வந்திருக்கிறது. அப்படி தனது நித்திய ஸ்வரூபத்தை உணர்ந்த தனது பக்தனான “பிரகலாதன்” கூறிய “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்ற சத்திய வாக்கை நிரூபிக்க, அத்தூணை பிளந்து கொண்டு வெளிய வந்து, அரக்க குல தலைவனான  “ஹிரண்யகசிபுவை” வதம் செய்த மஹாவிஷ்ணுவின் அவதாரம் “நரசிம்மஹ அவதாரம்” . அப்படிப்பட்ட நரசிம்மரின் ஒரு அதிசயமான கோவிலைப் பற்றி இங்கு காண்போம்.

Narasimmar

ஆந்திரா மாநிலம் விஜயவாடா நகருக்கு சற்று தொலைவில் இருக்கும் “மங்களகிரி” என்ற சிறிய மலைப்  பகுதியில் அமைந்துள்ளது இந்த “பானக்காலு நரசிம்மஹ ஸ்வாமி” கோவில். இந்த கோவில் மிகவும் பழமையானதாகும். விஜயநகர பேரரசு மன்னர்கள் அதிலும் குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர் இக்கோவிலுக்கு வருகை புரிந்ததையும், இக்கோவிலுக்கு அவர் செய்த திருப்பணிகளைப் பற்றியும் இக்கோவிலில் உள்ள கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன.

இக்கோவிலுக்கு 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வங்காள துறவியான “சைதன்ய மஹாபிரபுவும்”  வருகை தந்துள்ளார். அப்படி அவர் வருகை புரிந்த போது அவர் பாத சுவடுகள்  படிந்த ஓரிடத்தை  இன்றும் பூஜிக்கின்றனர். இக்கோவிலின் விசேஷமே  இக்கோவிலின் தெய்வமான நரசிம்ம ஸ்வாமியின் மூலவர் சிலை, பக்தர்கள் அளிக்கும் வெல்லத்தால் செய்த நீர் பானகத்தை அப்படியே அருந்துவது தான். ஹிரண்யகசிபுவை கொன்ற பின் உக்கிரம் தணியாத நரசிம்மருக்கு, வெல்ல பானகத்தை தந்து தேவர்கள் அவரது உக்கிரத்தை தணித்ததால், அன்றிலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக கூறுகிறார்கள் இந்த கோவில் ஸ்தல வரலாற்றை அறிந்தவர்கள்.

Nasimmar

இம்மலையிலேயே சுயம்புவாக அமைந்த நரசிம்ம ஸ்வாமியின் மூலவர் சிலையின் வாயில் வெல்லம், ஏலக்காய் போன்ற பொருட்கள் கலந்த பானகத்தை ஊற்றும் போது ஒரு மனிதன் நீர் அருந்துவது போன்ற சத்தம் ஏற்படுவதை இங்கு வருபவர்கள் அனைவரும் கேட்கமுடிகிறது. அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு பக்தரின் பானகத்தை முழுமையாக அருந்தாமல், மீதி புனைகதை அவர்களுக்கு பிரசாதமாக  வெளியே நரசிம்மர் துப்பிவிடும் ஆச்சர்யமும் இங்கு நடப்பதாக கூறப்படுகிறது. இது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு தெய்வீக நிகழ்வாகும்.

இதையும் படிக்கலாமே:
ஆங்கிலேயரால் சுடப்பட்ட அம்மன் சிலை. அன்று முதல் வளைந்தே இருக்கும் அம்மன் கழுத்து எங்கு உள்ளது தெரியுமா ?

English Overview:
Here we described about a miracle happening in Mangalagiri Paanakalu Narasimmar temple. There Lord Simmar statue is drinking sweet water like human.