கிருஷ்ணன் தலையில் எப்பொழுதும் மயிலிறகு வைத்துக் கொள்ள காரணம் என்ன தெரியுமா? இது தெரிந்தால் இனி உங்கள் முகம் எந்த சூழலிலும் வாடவே செய்யாது!

krishna-peacock-feather

ஸ்ரீ கிருஷ்ணர் எப்பொழுதும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் நாட்டம் கொண்டவராக இருப்பார். ஸ்ரீ கிருஷ்ணர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் தனித்துவம் கொண்டதாக இருக்கும். மற்றவர்களை விட தான் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நிகர் அவர் ஒருவரே ஆவார். அத்தகைய ஸ்ரீ கிருஷ்ணர் தலையில் எப்பொழுதும் மயிலிறகு சூடிக் கொள்ள என்ன காரணம்? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை நோக்கி பயணிப்போம்.

peacock

மயில் என்பது மற்ற பறவைகளை காட்டிலும் வித்தியாசப்பட்டுள்ளது. தன் தோகையை விரித்து மயில் ஆடும் அழகு இவ்வுலகின் மிகச்சிறந்த காட்சியாக இருக்கின்றது. எங்குமே இல்லாத அளவிற்கு மயில் பரத கண்டம் முழுவதும் அதிக அளவிற்கு இருந்துள்ளது. கிருஷ்ணன் வசித்த பிருந்தாவனத்தில் எக்கச்சக்கமான மயில்கள் இருக்கும். இதனால் மயில் தோகைகளுக்கு அங்கு பஞ்சமே இல்லை. கிருஷ்ணரை காணும் போது மயில்களுக்கு மழையை நினைவுபடுத்தும், அவன் ஊதும் குழல் இசைக்கு மயில்கள் மேலும் அழகுடன் நடமாட உதவுமாம். இதனால் மயில்கள் விருப்பமுடன் கிருஷ்ணனுக்கு தான் தோகையை உதிர்க்கும். அதற்கு மரியாதை கொடுக்கும் விதமாக கிருஷ்ணரும் எப்போதும் தான் தலையில் அதனை சூடிக் கொண்டுள்ளார்.

கிருஷ்ணர் நடப்பது, நிற்பது அனைத்துமே வித்தியாசமாக இருக்கும். ஒயிலாக நிற்பதும், நடப்பதும் அவருடைய குணாதிசயங்களில் ஒன்றாகும். அதுபோல அவருக்கு கொடுக்கப்பட்ட கிரீடத்தில் எப்பொழுதும் மயில் தோகை இருக்கும், கையில் புல்லாங்குழல் ஏந்திக் கொண்டு தான் இருப்பார். அலங்கார பிரியனாக இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் எப்பொழுதும் பட்டு வேஷ்டியும், அழகிய பீதாம்பர மடிப்புகளும் கொண்டு நேர்த்தியாக உடை உடுத்துக் கொள்வது வழக்கம். அது போல அண்ணன் பலராமனும் கிருஷ்ணனின் உடல் இருக்கும் நீல நிறத்தில் பட்டு வேஷ்டியை எப்பொழுதும் உடுத்திக் கொள்வதை விரும்புகிறான்.

baby-krishna

குழந்தை பருவம் முதலே நேர்த்தியாக தன்னை காட்டிக் கொள்ள விருப்பமுள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கு எப்பொழுதும் சிரித்த படியே இருக்கத்தான் பிடிக்கும். எவ்வளவு கஷ்டங்கள், இடையூறுகள் ஏற்பட்டாலும் அவரை அங்குள்ள ஒருவரும் வட்டமாகவோ, சோர்வுடனோ ஒருநாளும் கண்டதில்லையாம். ஸ்ரீ கிருஷ்ணருக்கு வாழ்க்கையின் மீது அக்கறையும், நேசமும் அதிகம் இருந்தது. எவர் ஒருவருக்கு வாழ்க்கையின் மீது காதலும், அக்கறையும் அதிகமாக இருக்கிறதோ! அவர்களுக்கு வாழ்க்கையை ரசிக்கக்கூடிய பக்குவம் ஏற்படுகிறது.

- Advertisement -

இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டால் எப்பொழுதும் அழுது வடியும் சூழ்நிலை ஏற்படாது. எவ்வளவு கஷ்டங்கள் மனதில் இருந்தாலும் ஒருவர் சிரித்த முகத்துடன் வசீகரமாக பளிச்சென்று காட்சி அளிக்கும் பொழுது அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் அது தொற்றிக் கொள்ளும். அவர்களுடைய நட்பு வட்டமும் விரிவடைந்து கொண்டே செல்லும். ஸ்ரீ கிருஷ்ணர் இதைத்தான் எப்பொழுதும் விரும்புகிறார். எனவே அவர் எந்த சூழ்நிலையிலும் மக்கள் முன்னிலையில் தன்னை வாட்டமாக காட்டிக் கொள்ளவில்லை.

sri-krishna

அவருக்கும் துயரங்கள் இருக்கத்தான் செய்தது. ஆனால் அப்படி பிரச்சினைகள் அவருக்கு அதிகமாக இருக்கும் போது தனிமையை தேடி சென்று விடுவார். அவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரீ கிருஷ்ணருடைய அவதாரம் அசுரனை அழிக்க மட்டுமல்ல! உலக மக்களுக்கு பல வகைகளில் வாழ்க்கையை கற்றுக் கொள்வதற்கும் பயன்படுகிறது. உங்களை சுற்றி என்ன நடந்தாலும், எத்தகைய துன்பங்கள் வந்தாலும் முகத்தை வாட்டமாக வைத்துக் கொள்ளாதீர்கள்.

sri-krishna1

எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்து பாருங்கள், வாழ்க்கை இனிமையாக மாறும். கஷ்டம் என்பது எல்லோருக்குமே இருக்கும். அதை எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் நம்முடைய திறமை இருக்கிறது வாழ்க்கையை நேசிப்பவர்கள் வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும். இன்று இருப்பவர்கள் நாளை இருப்பதில்லை! இருக்கும் கொஞ்சம் காலத்தையும் அணு அணுவாக ரசித்து எப்போதும் மகிழ்ச்சியாக உங்களையும் வைத்துக் கொள்ளுங்கள், மற்றவர்களையும் வைத்திருக்க முயற்சி செய்து கொண்டே இருங்கள்.