உங்கள் வீட்டு செடிகளுக்கு இனி தண்ணீர் ஊற்ற தேவையில்லை! இந்த சில விஷயங்களை செய்தாலே போதுமே!

planting-water
- Advertisement -

நம் வீட்டில் வளர்க்கும் செடி, கொடிகள் செழிப்பாக வளர தண்ணீர் என்பது அவசியமானதாக இருக்கிறது. எந்த அளவிற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறோமோ! அந்த அளவிற்கு செடிகளும் பசுமையாக பூத்துக் குலுங்கும். செடிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காவிட்டால் செடிகள் மடிந்து விடும் ஆபத்து உண்டு. செடிகளுக்கு சாதாரண தண்ணீர் இனி தேவையே இல்லை. நம் வீட்டில் நாம் சமைக்கும் சில பொருட்களை வைத்தே செடிகளுக்கு தேவையான தண்ணீரை தயார் செய்து விடலாம். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

rose-plant-spray

நான் வீட்டில் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மூலம் கிடைக்கும் சத்துக்கள் பெரும்பாலும் வீணடிக்க படுகின்றன. அவற்றை வீட்டில் வளர்க்கும் செடி, கொடிகளுக்கு கொடுத்தால் நல்லதொறு ஊட்டச்சத்து கிடைக்கும். ஆனால் அதை பெரும்பாலும் யாரும் செய்வதில்லை. கடையில் காசு கொடுத்து வாங்கும் ஊட்டச்சத்து மற்றும் உரம் நம் வீட்டிலேயே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மறுக்கிறோம்.

- Advertisement -

நாம் தினந்தோறும் சமைக்கும் அரிசி, பருப்பு, காய்கறிகள், முட்டை போன்ற அனைத்து வகைகளிலும் ஊட்டச்சத்து உள்ளது. உதாரணத்துக்கு நாம் அரிசியை கழுவும் பொழுது முதல் தண்ணீரை கீழே ஊற்றி விடுவது நல்லது. இரண்டாவது தண்ணீரில் அலசும் பொழுது அந்த தண்ணீரை வீணாக கீழே கொட்டாமல் தனியாக ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

rice-wash-water1

அதே போல துவரம் பருப்பு, பச்சை பருப்பு, கருப்பு உளுந்து போன்றவற்றை ஊற வைக்கும் பொழுது கட்டாயம் அந்த தண்ணீரை கீழே கொட்டி விடாமல் இந்த பாத்திரத்தில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி, பருப்பு மட்டும் அல்ல! காய்கறி கழிவுகள், பழ கழிவுகள் போன்றவற்றையும் வீணடிக்காமல் சேகரித்து வைப்பது நல்லது. காய்கறி நறுக்கும் பொழுது வீணடிக்கப்படும் கழிவுகளை, அந்த தண்ணீரில் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பழத் கழிவுகள், பழத் தோல்கள் ஆகியவற்றையும் அந்த தண்ணீருடன் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அது போல உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீர், மற்ற கிழங்கு வகைகளை வேக வைத்த தண்ணீர், முட்டையை அவிப்பதற்கு பயன்படுத்திய தண்ணீர் மிகுந்த சத்துகளை கொண்டுள்ளது. இவற்றை வீணடிக்காமல் மொத்தமாக சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் ஒரு நாளில் காலை முதல் மாலை வரை சமைக்கும் பொருட்களில் ஆர்கானிக் கழிவுகள் மற்றும் தண்ணீரை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு படுக்க செல்லும் முன் அவற்றை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகள், கீரைகள், பழங்கள், அரிசி, பருப்பு போன்ற அத்தனை பொருட்களையும் நாம் கழுவுவதற்கும், ஊற வைப்பதற்கும் பயன்படுத்துகிறோம். இந்த தண்ணீரை சேகரித்து வைத்தாலே நம் வீட்டுச் செடி, கொடிகளுக்கு தேவையான ஊட்டசத்து உள்ள தண்ணீர் தயாராகி இருக்கும்.

veggitable-waste

சாதாரண தண்ணீரை பயன்படுத்துவதை விட சத்து மிகுந்த இந்த தண்ணீரை பயன்படுத்தி வீட்டில் செடி, கொடிகளுக்கு தெளித்து வந்தால் எந்த ஒரு கெட்ட சக்தியும் வீட்டிற்குள் அணுகாது. இதுபோல் ஒவ்வொரு நாளும் சமையல் கழிவுகளை சேகரித்து ஒன்றாக வைத்து பின்னர் இரவில் அன்றைய நாளில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் நொதித்த பிறகு அந்த தண்ணீரை செடி கொடிகளுக்கு தெளித்தால் போதுமானது.

plant-spray

சாதாரண தண்ணீரை தவிர்த்து விட்டு, இது போன்று தண்ணீரை தினமும் தயார் செய்து பயன்படுத்தினால்! எல்லாவிதமான பூச்செடிகளும், நிறைய பூக்களை கொடுக்கும். காய்கறி செடிகளாக இருந்தால் நிறைய காய்கறிகளும் வழங்கும். சத்து மிகுந்த இந்த தண்ணீரை வீணாக சிங்கிள் கொட்டாமல் இனி செடிகளுக்கு பயன்படுத்துவது நல்ல ஒரு பலன் தருவதாக இருக்கும்.

- Advertisement -