கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல், உப்பு சீடை செய்வது எப்படி? இப்படி சீடை செய்தால் வெடிக்காமல் வரும்.

seedai
- Advertisement -

இன்னும் ஒரு சில நாட்களில் கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த உப்பு சீடையை நம்முடைய வீட்டிலேயே, நம் கையாலேயே எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேர் வீட்டில் உப்பு சீடையை செய்தால் அது எண்ணெயில் போட்டவுடன் வெடிக்கத் தொடங்கும். ஆனால் இந்த டிப்ஸை பின்பற்றி சீடை மாவு பிசைந்தால், சீடை வெடிக்காமல் வரும். தைரியமாக சீடை செய்யலாம். சரி வாங்க சீடை ரெசிபியை இப்பவே பார்த்திடலாம்.

seedai1

நைசாக இருக்கும் அரிசி மாவு – 1 கப், உளுந்து மாவு – 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், எள்ளு – 1 ஒரு ஸ்பூன், தேவையான அளவு உப்பு, பெருங்காயப் பொடி – 2 சிட்டிகை, சீடையை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய். சீடை செய்வதற்கு தேவையான பொருட்கள் இவை தான்.

- Advertisement -

உளுந்தம் பருப்பை கடாயில் போட்டு சிவக்க வறுத்து எடுத்து, அந்த உளுந்தை நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக கடையில் வாங்கிய அரிசி மாவாக இருந்தாலும், வீட்டில் அரைத்த அரிசி மாவாக இருந்தாலும், அதை ஒரு முறை கடாயில் போட்டு, 2 நிமிடங்கள்  சூடு செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

seedai2

முதல் குறிப்பு மிக மிக முக்கியமான குறிப்பு. இந்த அரிசி மாவு உளுந்து மாவு, இரண்டு மாவையும் சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவில் கட்டிகள் இருந்தால், கட்டாயமாக சீடை செய்யும்போது அது வெடிக்கத்தான் செய்யும்.

- Advertisement -

சலித்த மாவை ஒரு அகலமான பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். அரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயப்பொடி, எள்ளு பெருங்காயத் தூள் எல்லா பொருட்களையும் ஒன்றாக போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

seedai3

இப்போது சீடை செய்ய மாவு தயாராக உள்ளது. இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். மாவை லேசாக விரல்களாலே உருட்டுங்கள். ரொம்பவும் அழுத்தம் கொடுத்து மாவை உள்ளங்கைகளில் வைத்து உருண்டைகளாக உருட்டும் போதும், சீடை வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சீடையில், லேசாக ஆங்காங்கே வெடிப்பு இருந்தாலும் பரவாயில்லை. சீடை வெடிக்காமல் வரும்.

seedai4

தயாராக இருக்கும் சிறிய சிறிய உருண்டைகளை இப்போது எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சீடை தயாராகிவிடும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, தயாராக இருக்கும் உருண்டைகளை எண்ணெயில் போட்டு சிவக்க வைத்து எடுத்து, இந்த வருட கிருஷ்ண ஜெயந்தியை உங்கள் கையால் செய்த சீடையுடன் கொண்டாடிப் பாருங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

பின்குறிப்பு; நீங்கள் பக்குவமாக சீடை செய்தும் அது வெடித்தால் என்ன செய்வது. ஒரு அகலமான பெரிய தட்டை உங்களுடைய கையில் வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் சட்டியில் சீடையை போட்டவுடன், அது வெடிக்கத் தொடங்கினால், அந்த கடாயின் மேலே லேசாக இந்த தட்டை மூடியபடி உங்கள் கையிலேயே பிடித்துக் கொள்ளுங்கள். சீடை வெடித்து உங்கள் மேலே சிதறி விழாது. எண்ணெய் சட்டியில் வேலை செய்யும் போது எப்போதுமே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

- Advertisement -