உங்கள் வாழ்க்கையில் தெரியாமல் கூட செய்யக்கூடாத 6 முக்கிய பாவங்கள் என்ன தெரியுமா? இப்பாவத்தை செய்தால் மன்னிப்பே கிடையாதாம்.

eman-6-pavam
- Advertisement -

பாவங்கள் மொத்தம் 13 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளதாக புராணங்கள் கூறுகிறது. ஆனால் அதையும் தாண்டி எவ்வளவோ பாவங்கள் இருக்கத் தான் செய்கின்றன. நாம் செய்யும் சில பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடினால் மன்னிப்பு கிடைத்துவிடும். ஆனால் மன்னிப்பே கிடைக்காத சில பாவங்களும் உண்டு. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தெரியாமல் கூட இந்த பாவங்களை செய்து விடக்கூடாது. மனு தர்ம சாஸ்திரப்படி இந்த பாவங்களுக்கு உரிய தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை எனவே அத்தகைய முக்கிய 6 பாவங்களை பற்றிய குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

banana-for-cow
பாவம் 1:
மனு தர்ம சாஸ்திரப்படி எந்த உயிரினத்தையும் கொள்ளக் கூடாது. அதிலும் குறிப்பாக பசுவினை வதைப்பது, பசுவினை துன்புறுத்துவது பெரும் பாவத்தை சேர்க்கும். நாம் தாயின் பாலை குடித்து வளர்வதை விட, பசுவிடமிருந்து கிடைக்கும் பாலை தான் பெருமளவு வாழ்நாளில் பழகி வருகிறோம். எனவே தாய்க்கு இணையாக இருக்கும் இந்த பசுவினை பட்டினி போடுவது, அடிப்பது போன்ற செயல்களை செய்தால் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.

பாவம் 2:
பிறன்மனை நோக்குதல் என்னும் பாவத்தைச் செய்தாலும் தீரா பழி வந்து சேரும். எத்தகைய பாவத்தையும் மன்னிக்கும் இறைவன் இப்பாவத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார். அடுத்தவர் மனைவியுடன் உறவு கொள்வது மகா பெரும் பாவமாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெரிந்தும், தெரியாமலும் இப்பாவத்தை செய்பவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் நரகம் தான்.

- Advertisement -

settu-gold

பாவம் 3:
அடுத்தவர்களுடைய சொத்துக்களை அபகரிப்பது மிகப்பெரிய பாவமாக கருதப்படுகிறது. ஒருவர் தன் வியர்வை சிந்தி உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை அவருடைய சந்ததியினருக்கு முறையாக போய் சேராமல் இடையில் தடுக்கும் எந்த நபருக்கும் இந்த பாவத்தில் பங்கு உண்டு. உரியவரின் சந்ததியினரை அடையாத சொத்துக்களை அனுபவிக்கும் ஈனத்தனமான வேலையை செய்தால் மறுபிறவியில் அவர்களுக்கு ஊனம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

பாவம் 4:
உலகிற்கு கொண்டு வந்தது தாய், தந்தையர் தான். அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய கடமைகளை நீங்கள் செய்தாக வேண்டும் என்பது நியதி. பெற்றோர்களை அனாதையாய் அலைய விடுவது, கடைசி காலத்தில் சாப்பாடு போடாமல் இருப்பது, அவர்களை அடித்து துன்புறுத்துவது, தகாத வார்த்தைகளால் ஏசுவது மன்னிக்கவே முடியாத குற்றமாக கருதப்படுகிறது. இப்பாவத்தை செய்பவர்களுக்கு எத்தகைய பரிகாரங்களும் இல்லை.

- Advertisement -

scolding-mother

பாவம் 5:
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக படைக்கப்பட்டவர்கள் ஆவார். அவர்கள் வந்த காரியத்தை மறந்து மந்தமாகவும், சோம்பேரித் தனமாகவும், எதிலும் ஈடுபாடு இல்லாமல், வேலையும் செய்யாமல் சதா தூங்கிக் கொண்டிருப்பது அல்லது பித்து பிடித்தது போல் அலைந்து கொண்டிருப்பது என்று இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. சோம்பல் மிகப்பெரிய பாவச்செயலாகும் என்று எச்சரிக்கிறது சாஸ்திரம். எனவே சோம்பலை விடுத்து எடுத்த பிறவியை உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக மாற்றி காட்ட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் ஏதாவது ஒன்றை முயற்சியாவது செய்து கொண்டிருக்க வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.

munivar

பாவம் 6:
ரிஷிகள், முனிகள், குரு, புரோகிதர், ஜோதிடர்கள், குடும்ப வைத்தியர், கெட்ட மங்கையர் போன்றவர்களின் தவறான நடவடிக்கைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபடக்கூடாது. இவர்களைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மன்னிக்க முடியாத பாவிகளாக இருக்கின்றனர். அதே போல உடல் அங்கஹீனம் உள்ளவர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியறிவு இல்லாதவர்கள், முதியவர்கள், வறுமையில் உள்ளவர்கள் ஆகியோருடைய பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. இப்பாவத்தை செய்பவர்களுக்கும் மன்னிப்பு கிடையாது.

- Advertisement -