சிவனின் மூன்றாவது கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத 3 வகையான பாவங்கள் என்ன தெரியுமா? தவறியும் இந்த தவறை செய்யாதீர்கள்!

மனிதனாக பட்டவன் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கட்டாயம் பாவம் செய்பவனாக இருக்கிறான். இதற்கு முதலாவதாக படைக்கப்பட்ட ஆதாம் செய்த தவறும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். கடவுளின் பேச்சைக் கேட்காத எந்த மனிதனும் ஞானத்தை பெறுவதில்லை. ஞானத்தை பெறாத எந்த மனிதனும் தவறு செய்யாமல் இருப்பதுமில்லை. அப்படி செய்யும் பாவங்களினால் மற்றவர்கள் பாதிக்கப்படும் பொழுது அது கர்மாவாக மாறிவிடுகிறது. மனிதனுடைய கர்மாக்கள் ஏழேழு பிறவிக்கும் அவனை பின் தொடர்ந்து கொண்டிருக்கும். இதனால் தான் ஒவ்வொரு மனிதனும் நிம்மதி இல்லாமல் இன்று தவித்துக் கொண்டிருக்கிறான். எல்லாம் இருக்கும் மனிதன் கூட எதுவும் இல்லாதது போல் ஒரு வெறுமை உணர்கிறான்.

sivan

யோசித்துப் பார்த்தால் அவனுடைய துன்பத்திற்கு அவன் மட்டுமே காரணமாக இருப்பான். இப்படி மனிதன் செய்யும் பாவத்தில் பல வகைகள் இருந்தாலும், அவைகளுக்கு பரிகாரங்களும் உண்டு. அந்த பரிகாரங்களை செய்யும் பொழுது அந்த பாவங்களும் நீங்கி, அதனால் வரும் பாதிப்புகளும் குறைந்து விடுகிறது. ஆனால் யாருக்குமே தெரியாது என்று நினைத்து செய்து கொண்டிருக்கும் சில பாவங்கள் ஈசனுடைய மூன்றாவது கண்ணிற்கு நிச்சயமாக தெரியும். சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத 3 பாவங்கள் என்ன? அதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஒருவரின் சுயநலத்திற்காக, இன்னொருவரின் எளிய வாழ்க்கையை அழித்து, அவர்களின் கனவுகளை சுக்குநூறாக்கி, செய்யாத தவறுக்கு பழியை ஏற்க வைத்து கொடுங்கோல் புரியும் எவனாகிலும் ஈசனின் மூன்றாம் கண்ணிலிருந்து ஒரு பொழுதும் தப்பித்து பிழைக்க முடியாது. இவர்களுக்கு சொர்க்கமும் இல்லாத, நரகமும் இல்லாத அந்தரங்க வாழ்க்கை ஒரு வருடம் வரை அனுபவிக்க வேண்டுமாம்.

Sivan-God

ஒருவர் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை, சொத்துக்களை ஏமாற்றி அபகரிப்பது பாவத்திலும் மகா பாவமாக கருதப்படுகிறது. இப்படி தொடர்ந்து தீய வழியிலேயே சென்று கொண்டிருப்பவன், அறியாமல் கூட நல்லதே செய்யாதவன் பாவியாக மாறுகிறான். இத்தகைய பாவிகளுக்கு மோட்சம் என்பது கிடையாது. இவனும் கட்டாயம் ஈசனுடைய மூன்றாம் கண்களிலிருந்து தப்பிக்கவே முடியாது. ஈரேழு லோகங்களும் இவனை தூற்றுவதாக கூறப்படுகிறது.

உண்மைக்கு புறம்பாக பேசுவதும், வீண் பழி போடுவதும், வதந்திகளை பரப்பி விடுவதும் சில கீழ்நிலை மனிதர்கள் செய்யும் கேவலமான செயலாகும். பணத்திற்காக மற்றவர்களுடைய பெயரை கெடுக்கும் படி செய்வது, அவரைப் பற்றிய தவறான தகவல்களை மக்களுக்கு பரப்புவதும், அதனால் அவர்களுடைய வாழ்வு பாதிக்கப்படும் பொழுது அது அவனுக்கு கொடிய கர்மாவாக சேர்கிறது.

sivan-4

இக்கர்மாக்களை கொண்டுள்ளவர்கள் ஈசனின் மூன்றாம் கண்களில் சிக்கி தவிப்பது உறுதி. இதுபோன்று தங்களின் சுயநலத்திற்காக மற்றவர்களின் வாழ்க்கையை கெடுப்பதும் கொலை செய்வதற்கு சமம் தான். இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையில் தப்பித்து வந்து இருந்தாலும், ஈசனுடைய மூன்றாம் கண்ணில் அகப்படாமல் போக முடியாது. சிவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை எவர் ஒருவர் தொடர்ந்து உச்சரித்து வருகிறார்களோ! அவர்களுக்கு பாவம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் கூட வருவதில்லை. ‘ஓம் நம சிவாய’ எனும் மந்திரத்தை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உச்சரித்துப் பாருங்கள்! வாழ்க்கையில் தோல்வி என்பதே உங்களுக்கு ஏற்படாது.