ஷாப்பிங் போன தண்ணி மாதிரி பணம் செலவாகுதா? செலவு செய்யும் பணத்தோடு இந்த 1 பொருளை வைத்துப் பாருங்கள். பணம் உங்களை விட்டு போக மாட்டேன் என்று அடம் பிடிக்கும்.

cash8
- Advertisement -

தேவைக்கு அதிகமா தான் கையில் பணம் இருக்கட்டுமே எதற்காகவாவது உதவும், என்று கொஞ்சம் அதிகமாக பணத்தை பரிசில் வைத்தால் போதும். வெளியே சென்று வந்தவுடன் பர்ஸை பார்த்தால் மிச்சம் ஒரு ரூபாய் கூட இருக்காது. எப்படி தான் அந்த பணம் செலவாச்சு அப்படின்னு பார்த்தா தெரியவே தெரியாது. நோட்டு நோட்டா செலவு ஆகி கொண்டே இருக்கும். தண்ணீர் போல பணம் கரையும். இந்த செலவை குறைக்க ஆன்மீகம் நமக்கு ஒரு எளிமையான பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஒரு பொருளை பணத்தோடு, ஷாப்பிங் போகும்போது எடுத்துச் செல்லுங்கள். அனாவசியமா ஒரு ரூபாயை கூட செலவு செய்ய மாட்டீங்க. எடுத்துப் போன பணத்திலிருந்து மீதம் பணத்தை வீட்டிற்கு கொண்டு வருவீர்கள். பணத்தை மிச்சம் பிடிக்க நாம் பணத்தோடு வைக்க வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்க்கமாக உள்ளதா. பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

வீண் செலவை குறைக்கும் பூண்டு பரிகாரம்:
இன்னைக்கு ஷாப்பிங் செய்ய செலவு செய்யப் போற பட்ஜெட் 5000 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள். தேவைக்காக இன்னொரு 1000 ரூபாயை கூட சேர்த்து வைக்கிறீங்க. இந்த காச கையில் எடுத்துக் கொண்டு அப்படியே ஷாப்பிங் போனால் இந்த 6000 காலி. அதுவே இந்த பணத்தோடு ஒரே ஒரு பூண்டு பல் வைத்து பணத்தை ஷாப்பிங்கிற்கு எடுத்துக்கொண்டு சென்று பாருங்கள். 5000 பட்ஜெட்டில், 3000 தான் செலவாகும்.

பூண்டு பல்லை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, அநாவசியமாக இன்று செலவு செய்யக்கூடாது. எப்படியாவது பணத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்று இரண்டு நிமிடங்கள் மனதார நினைத்து, அந்த பூண்டை பரிசில் பணத்தோடு வச்சிடுங்க. பிறகு வழக்கம் போல பணதை செலவு செய்ய, ஸ்டார்ட் பண்ணுங்க. என்ன மாற்றம் நிகழ்கிறது என்று நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வீடு திரும்பியதும் அந்த ஒரு பூண்டு பல்லை என்ன செய்வது. கல்படாத இடத்தில் போட்டு விடலாம். மீண்டும் அந்த பூண்டு பல்லை நாம் பயன்படுத்தக் கூடாது. தினமும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஷாப்பிங் செய்யும்போது, வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது, இப்படி வீண் விரைய செலவுகள் அதிகரிக்க கூடிய தருணத்தில், இந்த பரிகாரம் எல்லோருக்கும் நிச்சயம் கை கொடுக்கும்.

சில பேர் எல்லாம் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் வாங்கி பையில் வைப்பார்கள். வீட்டிற்கு வந்து பார்த்தால் வாங்கிய பொருட்களை எல்லாம் பேக் பண்ணி அப்படியே கப்போர்ட்டில் அடுக்கி வைப்பார்கள். ஒரு வருடம் கழித்தும் அந்த பொருளுக்கான தேவை இருக்காது. பணத்தை இப்படி எல்லாம் கூட செலவு செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று பார்த்தாலே நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு காரியத்தை நீங்கள் சரியாக செய்யாது போனால் காசிக்கு போனால் கூட உங்கள் கருமம் தொலையாது. கங்கையில் நீராடினாலும் கிடைக்காத புண்ணியத்தை இதை செய்தால் நிச்சயம் கிடைக்கும்.

ஒரு பக்கம், ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் மக்கள். இப்படி இருக்கும்போது நம் கையில் இருக்கும் பணத்தை வீண் விரயம் செய்தால் அது தவறு தானே. கூடுமானவரை உங்களுக்கு எவ்வளவு வசதி இருந்தாலும், பணத்தை வீண்விரயம் செய்யாதீங்க. முடிந்தால் இல்லாதவர்களுக்கு கொடுத்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். அதில் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -