- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாக வழிபாடு

வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாக வழிபாடு

- Advertisement -

16 வகையான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் அனைவரும் முயற்சி செய்கிறோம். இந்த முயற்சி அனைவருக்கும் வெற்றி தருவது கிடையாது. பலரும் இன்றளவும் வறுமை நிலையில் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி வறுமை நிலையில் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் தங்கள் வீட்டில் ஒரு சிறிய மாற்றத்தை மட்டும் கொண்டு வந்து தினமும் எந்த முறையில் விளக்கேற்றினால் அவர்களின் வறுமை படிப்படியாக குறையும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வநிலை அதிகரிக்கவும் வறுமைக்குறையவும் நமக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தங்கள் இல்லத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பூஜை அறை மற்றும் சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அழுக்குத் துணிகளை சேர்த்து வைக்காமல் அன்றன்றைக்கு துவைத்து காய வைத்து எடுத்து வைத்து விட வேண்டும். இப்படி சில வாழ்வியல் நடைமுறைகளை நாம் பின்பற்றும் பொழுது வீட்டு பூஜை அறையிலும் சில மாற்றத்தை செய்தால் கண்டிப்பான முறையில் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இந்த பதிவில் மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்று பார்ப்போம். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு வெள்ளி விளக்கு தேவைப்படும். வெள்ளி என்பது சுக்கிர பகவானின் அம்சம் பொருந்திய உலோகம் என்பதால் வெள்ளியை முடிந்த அளவிற்கு நம்முடைய பூஜை அறையில் நாம் பயன்படுத்த வேண்டும். அதனால் மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் பூஜையறையில் சிறிய அளவில் இருக்கக் கூடிய இரண்டு வெள்ளி விளக்குகளை வாங்கி வைக்க வேண்டும்.

அடுத்ததாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய இலுப்பை எண்ணையை வாங்க வேண்டும். எவ்வளவு இலுப்பை எண்ணெயை வாங்குகிறோமோ அதே அளவிற்கு சுத்தமான பசு நெய்யையும் வாங்கி இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த எண்ணையை வெள்ளி விளக்கில் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அவ்வளவுதான் மகாலட்சுமி தாயார் பிடித்தமான தீபம் தயாராகிவிட்டது.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றிய பிறகு இந்த எண்ணைக்கும் மேல் சிறிது பச்சை கற்பூரம் அல்லது ஜவ்வாது இவற்றில் ஏதாவது ஒன்றை தூவி விட வேண்டும். இப்படி தூவுவதன் மூலம் தீபம் எரிய எரிய பூஜை அறை முழுவதும் ஒருவித நறுமணம் வீசும். இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வீட்டு பூஜை அறையில் நாம் ஊதுபத்தி ஏற்றுவோம் அல்லவா? இந்த ஊதுபத்தியை சந்தன ஊதுபத்தியாக ஏற்றினோம் என்றால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்.

இப்படி நாம் எப்பொழுதும் செய்யும் செயல்களில் சிறு மாற்றத்தை மட்டும் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரின் அருளை நம்மால் பெற முடியும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று விட்டோம் என்றால் நம் வீட்டில் வறுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் செல்வ செழிப்பு மேலோங்கும் நிம்மதியான வாழ்க்கை அமையும்.

இதையும் படிக்கலாமே: செல்வநிலை உயர ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையை நாம் நம் வீட்டில் பயன்படுத்தி அனைத்து விதமான நன்மைகளையும் பெறுவோம்.

சற்று முன்