செல்வ செழிப்புடன் வாழ சுக்கிர வழிபாடு

sukran selvam
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் அனைத்து விதமான சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் திருமணம் நடைபெறவும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவும் சுக்கிர பகவானின் அருள் என்பது வேண்டும். அப்படிப்பட்ட சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கும் அவரின் பலத்தை அதிகரிக்கவும் செய்யக்கூடிய ஒரு தாந்திரீக வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சுக்கிர பகவான் செல்வ செழிப்பிற்கு மட்டும் அதிபதியாக இல்லாமல் சுகமான வாழ்க்கை அதாவது கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கும் உறுதுணை புரிகிறார். அதோடு மட்டுமல்லாமல் கலைத்துறை, அழகு, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற அனைத்திற்கும் சுக்கிர பகவானின் அருள் என்பது வேண்டும். இவ்வளவு சிறப்பு மிகுந்த சுக்கிர பகவான் நம்முடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பொழுது இவை அனைத்துமே நமக்கு சிறப்பாக அமையும்.

- Advertisement -

இதே அவர் சாதகமற்ற சூழ்நிலையில் இருந்தால் கோபம் மற்றும் மோகத்தால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதுவும் எதிர் பாலினத்தவரால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும். சரி இப்பொழுது சுக்கிர பகவானை எந்த முறையில் வழிபட்டால் நமக்கு நன்மைகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

வியாழக்கிழமை அன்று இரவு நேரத்தில் ஒரு வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பட்டுத்துணி அல்லது சுத்தமான சாதாரண துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நம்மால் இயன்ற அளவு கொள்ளை வைக்க வேண்டும். பிறகு இதை ஒரு மூட்டையாக கையில் பிடித்துக் கொண்டு நம்முடைய தலையை 27 முறை வலப்புறம் இருந்து இடப்புறமாக சுற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு இதை நம்முடைய பூஜை அறையில் வைத்து இதற்குள் இரண்டு ஏலக்காயும் வைத்து பச்சை கற்பூரத்தை ஏற்றி மனதார அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த துணியை மூட்டையாக கட்டி பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

மறுநாள் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறைக்கு வந்து தீபத்தை ஏற்றி வைத்து சிறிது பச்சரிசியில் மஞ்சளை கலந்து அட்சதியாக வைத்துக்கொண்டு முதலில் விநாயகப் பெருமானுக்கு இந்த அட்சதையை வைத்து நமக்கு தெரிந்த அவருடைய மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அடுத்ததாக குலதெய்வத்தை நினைத்து குலதெய்வத்தின் பெயரைக் கூறி குலதெய்வத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

மூன்றாவதாக நாம் சிவபெருமானை நினைத்து “ஓம் சிவ சிவ ஓம்” என்னும் மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த அர்ச்சனை என்பது நம்மால் இயன்ற எண்ணிக்கையின் அடிப்படையில் செய்ய வேண்டும் 16, 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் செய்ய வேண்டும். இப்படி செய்து முடித்த பிறகு மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் மனதார நினைத்து அவர்களின் நாமத்தை கூறி அவர்களுக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

இப்படி இவர்கள் அனைவருக்கும் அர்ச்சனை செய்த பிறகு செல்வ செழிப்புடன் நலமாக வாழ வேண்டும் என்ற வேண்டுதலை மனதார வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் வழிபாடு முடிந்தது. மாதத்திற்கு ஒருமுறை இந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும். அடுத்த மாதம் வீட்டில் வைத்திருக்கும் கொள்ளை குதிரைக்கு தானமாக தந்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீண்ட நாள் பிரச்சனைகள் தீர காளியம்மன் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் சுக்கிர பகவானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

- Advertisement -