நீண்ட நாள் பிரச்சனைகள் தீர காளியம்மன் வழிபாடு

amman deepa valipadu
- Advertisement -

பிரச்சனை இல்லாத வாழ்க்கை என்று யாருக்காவது இருக்கிறதா? கண்டிப்பான முறையில் இல்லை. பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிகளை நாம் கண்டுபிடித்து அந்த பிரச்சனையிலிருந்து வெளியில் வரவேண்டும். அப்படி வர முடியாமல் நீண்ட நாட்களாக ஒரு பிரச்சினையிலேயே மாட்டிக்கொண்டு எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் காளியம்மனை வழிபட வேண்டிய முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த வழிபாட்டை நாம் பிரச்சனைகள் தீர்வதற்காக மட்டுமல்லாமல் நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அருகில் இருக்கக்கூடிய உக்கிர தெய்வமாக வீற்றிருக்கும் அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். ஒரு கிண்ணத்தில் குங்குமத்தை பன்னீர் ஊற்றி கெட்டியாக குறைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஆறு வெற்றிலைகளை எடுத்து அதில் நம்முடைய மோதிர விரலால் குங்குமத்தை தொட்டு ஒரு மந்திரத்தை எழுத வேண்டும். “ஓம் ஐம் க்லீம் க்ளொம் சாமுண்டாய வீச்சே” இந்த ஆறு சொற்களையும் 6 வெற்றிலைகளில் தனித்தனியாக எழுதி வரிசையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதற்கு மேல் சிறிது பச்சரிசியை வைக்க வேண்டும். அந்த பச்சரிசிக்கு மேல் ஆறு அகல் விளக்குகளை வைத்து அந்த அகல் விளக்கில் நல்லெண்ணையை ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆறு வெற்றிலைகளுக்கு இரண்டு புறங்களிலும் ஒரு பூசணிக்காயை நறுக்கி நடு பகுதியை எடுத்துவிட்டு அதில் முழுக்க நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வைக்க வேண்டும்.

அடுத்ததாக இந்த ஆறு வெற்றிலை தீபங்களுக்கு முன்பாக இரண்டு நட்சத்திர கோலம் போட்டு அந்த நட்சத்திரத்திற்கு நடுவில் “ஸ்ரீம்” என்று எழுத வேண்டும். இந்த கோலத்தை பச்சரிசி மாவில் தான் போட வேண்டும். ஸ்ரீம் என்று எழுதிய மந்திரத்திற்கு மேலே வெற்றிலையை வைத்து அதில் பச்சரிசியை போட்டு அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து விளக்கெண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரி போடவேண்டும்.

- Advertisement -

இப்படி அனைத்து விளக்குகளையும் தயார் செய்து வைத்துவிட்டு அம்மனுக்கு சர்க்கரை பொங்கல், பருப்பு பொடி சாதம், பால் பாயாசம் இவற்றில் ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை வைத்துவிட்டு செவ்வரளி பூ மற்றும் மரிக்கொழுந்து இவை இரண்டையும் கலந்து மாலையாக தொடுத்து அம்மனுக்கு சூட்ட வேண்டும்.

பிறகு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றிய பிறகு தீபத்திற்கு முன்பாக அமர்ந்து “ஓம் மஹா தாரான்யாய ஸகல துஸ்தரான் தாராய தாராய தர தர ஸ்வாஹா” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரித்து மல்லிகைப்பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு நம்முடைய நீண்ட நாள் பிரச்சனைகள் என்னவோ அந்த பிரச்சினையை கூறி அது நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்லும் காரியம் வெற்றி பெற வழிபாடு

மிகவும் அதிசக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை நீண்ட நாட்களாக யார் பிரச்சினையில் இருக்கிறார்களோ அவர்கள் தான் செய்ய வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் செய்யக்கூடாது. மேலும் முழு நம்பிக்கையுடன் அம்மனை நினைத்து இந்த வழிபாட்டை செய்து முடித்த சில நாட்களிலேயே பிரச்சினைகள் தீர்வதை உணர முடியும்.

- Advertisement -