குபேரர் அருள் பெற வழிபாடு

kuberar dheepam
- Advertisement -

பொதுவாக கடன் தீர வேண்டும் பண வரவு அதிகரிக்க வேண்டும் வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும் எனில் நாம் முதலில் வழிபடும் தெய்வமாக மகாலட்சுமி தாயார் தான். அதே போல் தாயாரின் முழு அனுகிரகத்தையும் செல்வத்தை காக்கும் பொறுப்பையும் பெற்ற குபேரரை வழிபடும் போது இது போன்ற பண பிரச்சனைகளிலிருந்து நாம் எளிதாக வெளி வர முடியும்.

அதுமட்டுமின்றி பெருமாளுக்கே கடன் கொடுத்தவர் என்ற பெருமையும் இந்த குபேரனுக்கு உண்டு. ஆகையால் நம்முடைய பணம் பிரச்சனைகள் தீர இவரை வழிபடுவது ஒன்றே சிறந்த வழி. ஆகையால் தான் இந்த குபேரர் எப்போதும் பணம் மூட்டைகளுடனும் நகைகளுடனும் காட்சியளிக்கிறார். இப்படியான குபேரரை நாம் எளிமையாக எப்படி வழிபாடு செய்வது என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வீட்டில் செல்வம் பெருக குபேரர் வழிபாடு

குபேரருக்கு மிகவும் உகந்த நாளி எனில் அது வியாழக்கிழமை தான். ஆகையால் வியாழக்கிழமையில் குபேரரை வழிபாடு செய்வதே சிறந்தது. வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள்ளாக இந்த குபேர வழிபாட்டை செய்து விட வேண்டும்.

வியாழக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வாசலில் பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும். அன்று நிலை வாசலில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து விட்டு, குபேரர் படத்திற்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். குபேரருக்கு தாமரைப்பூ சங்குப்பூ போன்றவை விசேஷமானதாக கருதப்படுகிறது ஆகையால் இவற்றை வைத்து வழிபாடு செய்வது சிறந்தது.

- Advertisement -

நெல்லி மரத்தில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்வதாக ஐதீகம். மகாலட்சுமி தாயார் அனுகிரகத்தை பெற்ற குபேரருக்கு ஒரே ஒரு நெல்லிக்கனியாவது வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இத்துடன் பால், சர்க்கரை, அவல் இவை எல்லாம் நெய்வேத்தியமாக வைத்து வழிபடலாம். வியாழக்கிழமையில் மாலை வேளையில் குபேரர் படத்திற்கு முன்பாக குபேர தீபம் ஏற்ற வேண்டும்.

குபேர விளக்கு இருந்தால் அதில் ஏற்றுதல் அல்லது அகல் விளக்கு இருந்தாலே போதும். ஒரு தட்டில் பச்சரிசியை பரப்பி அதன் மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து அந்த நாணயத்தின் மேல் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பச்சை நிறத்திலான திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த விளக்கில் ஐந்து கற்கண்டுகளை போட்டு விடுங்கள். குபேரருக்கு உகந்த திசை வடக்கு ஆகையால் வடக்கு பார்த்தவாறு தீபம் எறிய வேண்டும். மாலை வேளையில் நிலை வாசலிலும் இதே போல் குபேரருக்கு ஒரு அகல் விளக்கு நெய் ஊற்றி வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றுங்கள்.

நிலை வாசலில் குபேரரை வணங்கும் போது வீட்டுக்குள் செல்வ வளம் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாடு செய்யும்போது உங்களுக்கு தெரிந்த குபேரன் மந்திரம் ஏதேனும் சொல்லுங்கள் அல்லது ஓம் குபேராய நமஹ என்ற மந்திரத்தை மட்டும் சொன்னாலும் போதும்.

இதையும் படிக்கலாமே: குருவின் அருள் பெற வழிபாடு

வியாழக்கிழமை தோறும் குபேரரை இப்படி எளிமையாக வழிபடுவதன் மூலம் சகல செல்வமும் வீடு தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. இந்த முறையில் நீங்களும் குபேரரை வழிபட்டு சகல விதமான செல்வ வளங்களையும் பெருக்கிக் கொள்ளலாம்.

- Advertisement -