செல்வ வளம் பெருக மார்கழி மாதத்தில் பாட வேண்டிய திருப்பாவை பாடல் வரிகள்

andal
- Advertisement -

நாளை மார்கழி மாதம் பிறக்கவிருக்கிறது. நாளை பிறக்கவிருக்கும் இந்த மார்கழி மாதம் திருவோண நட்சத்திரத்தோடு, பஞ்சமி திதியில் பிறக்கின்றது. ஆகவே நமக்கு இரட்டிப்பு பலன் உண்டு. மார்கழி என்றாலே நம் நினைவுக்கு வருவது திருப்பாவை தான். பெருமாளை நினைத்து, ஆண்டாள் பாடிய பாசுர வரிகள்.

ஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரங்களில் இருந்து ஒரு சிறிய பாடல் வரிகளை மட்டும் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த மார்கழி மாதம் முழுவதும் இந்த பாடல் வரிகளை உச்சரிப்பவர்கள் வீட்டில் செல்வ வளத்திற்கு எந்த குறையும் இருக்காது. அந்த பெரும்பாலும் ஆண்டாளும் உங்களுடைய வீட்டிற்கு கோடி செல்வத்தை தேடி வந்து கொட்டிக் கொடுப்பார்கள் என்பது நம்பிக்கை. சரி அந்த பாசுரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

- Advertisement -

மார்கழி மாதம் படிக்க வேண்டிய திருப்பாவை பாசுரம்

சாதாரண நாட்களில் வரும் பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு சக்தி அதிகம் என்று சொல்லுவார்கள். அதிலும் இந்த மார்கழி மாதத்தில் வரவிருக்கும் பிரம்ம முகூர்த்தத்தின் சக்தியை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. அந்த பிரம்மாவே உலக நலனுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளக்கூடிய நேரம் தான் இந்த மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நேரம்.

மார்கழி மாதம் அதிகாலை 4:00 மணியில் இருந்து 5.30 மணி வரை இருக்கக்கூடிய அந்த பொன்னான நேரத்தை யாரும் தவற விடாதீங்க. கூடுமானவரை பின் சொல்லக் கூடிய பாடலையும் இந்த மார்கழி மாத பிரம்ம முகூர்த்த நேரம் சமயத்தில் பாடுவது ரொம்ப ரொம்ப சிறப்பு.

- Advertisement -

ஒரு நாளைக்கு இந்த பாடலை மூன்று முறை பாடலாம். பிரம்ம முகூர்த்தத்திலேயே மூன்று முறை பாடினாலும் சரி அல்லது மாலை ஒரு முறை படித்தாலும் சரி. தமிழில் கொடுக்கப்பட்டிருக்கும் பாடல் வரிகள் தான். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பல் தேய்த்து சுத்த பத்தமாக இருப்பவர்கள், முகம் மட்டும் கழுவிக்கொண்டு, கூட வீட்டில் ஒரு இடத்தில் அமர்ந்து இந்த பாடல் வரிகளை படிக்கலாம்.

உங்களுக்கு இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் கோவிலுக்கு போவதற்கு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பு. பெருமாள் கோவில் இந்த பாடல் வரிகளை வாசித்தால் பெருமாளின் அருள் ஆசியும், ஆண்டாளின் அருள் ஆசியும் முழுமையாக கிட்டும். சரி சரி அந்த பாடல் வரிகள் என்ன.

- Advertisement -

திருப்பாவையின் மூன்றாம் பாசுரத்தின் முதல் அடி பாடல்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக்

குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

இதுதாங்க அந்த பாடல் வரிகள். மனம் நிறைய பெருமாளையும் ஆண்டாளையும் நினைத்து நம்பிக்கையோடு மார்கழி மாதம் முழுவதும் இந்த பாடல் வரிகளை காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் படித்தால் உங்களுக்கு அளவில்லாத செல்வம் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் அந்த பெருமாளின் பாதங்களில் இடமும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: துர் சக்திகளை விரட்டும் தூபம்

ஆண்டாள் பாடிய இந்த திருப்பாவை பாடல்வரிகளை வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லோரும் படிக்கலாம். பெண்கள் மாதவிடாய் காலத்தில் கூட இந்த பாடல் வரிகளை படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் மார்கழி மாதம் வரக்கூடிய 29 நாட்களும் தவறவிடாமல் இந்த பாடல் வரிகளை படித்துவிட்டால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் இல்லை அவ்வளவுதான். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -