செல்வ வளத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் பெருமாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பெருமாளை வழிபாடு செய்வதற்கு பல சிறப்பு மிகுந்த நாட்கள் இருந்தாலும் பெருமாளுக்குரிய திதியான ஏகாதசி திதி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது பல அற்புதமான பலன்களைத் தரும். விரதங்களிலேயே மிகவும் முக்கியமான தலையாய விரதமாக ஏகாதசி விரதம் திகழ்கிறது. அப்படிப்பட்ட ஏகாதசி என்பது இந்த முறை மார்ச் மாதம் 25ஆம் தேதி காலை 1:26 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினத்தில் நாம் பெருமாளை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
அங்காரக ஏகாதசி மந்திரம்
ஏகாதசி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த விரதமாக கருதப்படுகிறது. சிறு குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய உடல் நிலையை பொறுத்து விரதத்தின் தன்மையை மாற்றிக் கொள்ளலாம். முடிந்தவரை அன்றைய தினத்தில் விரதம் இருந்து அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நல்ல ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
பங்குனி மாதத்தில் வரக்கூடிய இந்த தேய்பிறை ஏகாதசி திதி அன்று காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்து கொள்ளுங்கள். வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து துளசி இலைகளால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு பெருமாளுக்கு இளநீர் அல்லது துளசி தீர்த்தத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு அவருக்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் ஐந்து விளக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு நாமும் வடக்கு பார்த்தவாறு நின்று கொண்டு பெருமாளின் இந்த ஒரு மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். அவ்வாறு கூறும் பொழுது நம்முடைய கையில் நம்மிடம் இருக்கக்கூடிய தங்கம், வெள்ளி, பணம், நாணயம் என்று ஏதாவது ஒரு பொருளை கையில் வைத்துக்கொண்டு கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் நம் கையில் இருக்கக்கூடிய பொருள் பல மடங்கு சேரும் என்று கூறப்படுகிறது. அந்த பணத்தை செலவு செய்யலாம். தங்கத்தையோ வெள்ளியையோ எப்போதும் இருக்கும் இடத்தில் வைத்து விடலாம்.
மந்திரம்
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
இதையும் படிக்கலாமே:கோரிக்கை நிறைவேற அபிஜித் நட்சத்திர மந்திரம்
செல்வ வளத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களுடைய முயற்சியை கைவிடாமல் அதேசமயம் செல்வ வளத்திற்குரிய தெய்வமான பெருமாளை இந்த ஏகாதசி திதி அன்று மறவாமல் இந்த முறையில் வழிபாடு செய்ய அவர்கள் நினைத்ததை விட அதிக அளவு செல்வ வளம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.