- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளத்தை அதிகரிக்கும் அர்ச்சனை

செல்வ வளத்தை அதிகரிக்கும் அர்ச்சனை

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை தரக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழக்கூடியவள் தான் மகாலட்சுமி. மகாலட்சுமியை நாம் வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமியின் அருளால் செல்வநிலை உயரும் என்றே கூறப்படுகிறது. செல்வம் எந்த ஒரு இடத்திலும் நிலையாக இருப்பதில்லை என்பதால் நாம் அவ்வப்பொழுது மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய செய்ய நிலையற்ற செல்வமும் நிலையாக நம்மிடம் தங்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட செல்வ வளத்தை அதிகரிப்பதற்கு செய்ய வேண்டிய அர்ச்சனையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

செல்வ வளத்தை அதிகரிக்க வழிபாடு

ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய முன்னேற்றம் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய செல்வ வளம் தான். அப்படியே இருந்தால் அது கரைந்து விடும் அல்லவா? அவ்வப்பொழுது அந்த செல்வ வளம் அதிகரித்துக் கொண்டே இருந்தால்தான் நம்முடைய செலவிற்கு மிஞ்சிய செல்வ வளத்தை பெற முடியும். அப்படி செல்வ வளம் அதிகரிப்பதற்கு மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். மகாலட்சுமி தாயாரை பலவிதமான முறையில் வழிபாடு செய்தாலும் இந்த சூட்சமமான முறைப்படி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய மகாலட்சுமி கடாட்சத்தை பெற முடியும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி அமாவாசை போன்ற தினங்களில் செய்யலாம் அல்லது வாராவாரம் வரக்கூடிய வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்யலாம் அல்லது சுப முகூர்த்த நாளாக பார்த்து தேர்வு செய்து தொடர்ச்சியாக 48 நாட்கள் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு 108 எண்ணிக்கையில் ஒரு ரூபாய் நாணயங்கள் வேண்டும். இதோடு மாதுளம் பழ முத்துக்களும் வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 6:00 மணிக்கோ இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

நம்முடைய வீட்டில் கண்டிப்பாக முறையில் மகாலட்சுமியின் படம் என்பது இருக்கும். அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமிக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வாசனை மிகுந்த ஊதுபத்தி சாம்பிராணியை பொருத்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு ஒரு ரூபாய் நாணயத்தையும் ஒரு மாதுளம் பழ முத்தையும் எடுத்து “ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ” என்னும் மந்திரத்தை கூறி மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு நாணயத்தையும் எடுத்து அதனுடன் மாதுளம் பழ முத்துக்களையும் சேர்த்து இந்த மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனையை நிறைவு செய்த பிறகு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு மாதுளம் பழ முத்துக்களை மட்டும் தனியாக எடுத்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவருக்கும் பிரசாதமாக தர வேண்டும். இந்த ஒரு ரூபாய் நாணயங்களை மறுநாள் எடுத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த முறையில் மகாலட்சுமி தாயாரை அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய மகாலட்சுமியின் அருட் கடாட்சம் கிடைக்கும். அதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: தன வரவு அதிகரிக்க வழிபாடு

எளிமையான இந்த சூட்சுமமான வழிபாட்டு முறையை பின்பற்றி யார் ஒருவர் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்