இந்த உலகமே மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இயக்கத்திற்கு முக்கியமான காரணமாக திகழ்வது பணத்தை சம்பாதிப்பது மட்டுமே. யாரும் பணத்தை சம்பாதிப்பதை தவிர்த்து விட்டு வேறு எதற்காகவும் எந்த வேலையையும் செய்வது கிடையாது. நல்ல நோக்கத்திற்காக இரந்தாலும் சரி தீய நோக்கத்திற்காக இருந்தாலும் சரி பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பலவிதமான வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். அப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நம்முடைய கையில் தங்கவில்லை என்னும் பட்சத்தில் பணம் தங்குவதற்காகவும் செல்வ வளம் அதிகரிப்பதற்காகவும் வளர்பிறை அஷ்டமி வழிபாட்டை செய்யலாம். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அஷ்டமி தீபம் வழிபாடு
சிவபெருமானின் ஒரு அம்சமாக திகழக்கூடியவர் தான் கால பைரவர். இவர் அனைத்து சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக திகழ்கிறார். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது அவர் நமக்கும் காவலாக இருந்து நம்முடைய எதிரிகள் மற்றும் துரோகிகளின் தாக்கத்திலிருந்து நம்மை காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது. இதற்கு மட்டும் தான் கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டுமா என்று கேட்டால், கிடையாது. நம்முடைய கஷ்டங்கள் தீரவும், செல்வ செழிப்பு உயரவும், தொழில் சிறப்பாக விளங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் என்று பலவிதமான வேண்டுதல்களுக்காகவும் காலபைரவரை நாம் வழிபாடு செய்யலாம். அந்த வகையில் பணவரவு அதிகரிக்கவும் சம்பாதித்த பணம் கையில் தங்கவும் அனைத்து விதமான செல்வங்களையும் பெறவும் வளர்பிறை அஷ்டமி நாளில் காலபைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி இரவு 11:30 மணி வரை வளர்பிறை அஷ்டமி திதி என்பது இருக்கிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. பொதுவாக பல ஆலயங்களில் அஷ்டமி தினத்தில் ராகு காலத்தில் கால பைரவருக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். இயன்றவர்கள் அந்த அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு காலபைரவரின் அருளை பெறலாம். இயலாதவர்கள் அன்றைய தினத்தில் ராகு கால நேரத்தில் வீட்டு பூஜை அறையில் காலபைரவரை நினைத்து வழிபாடு செய்யலாம்.
வீட்டில் யாரும் கால பைரவரின் படத்தை வைத்திருக்க மாட்டார்கள். ஒரு சில சொர்ண ஆகர்சன பைரவரின் படத்தை வைத்திருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றலாம். படம் இல்லை என்பவர்கள் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். ஒரு சிறிய தட்டை எடுத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு அதற்கு மேல் ஒரு விளக்கை வைக்க வேண்டும். இது அகல் விளக்காகவும் இருக்கலாம் நாம் பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய விளக்காகவும் இருக்கலாம். அந்த விளக்கிற்கும் சந்தனம் குங்குமம் வைத்து தட்டின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சுத்தமான நல்லெண்ணையை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
கையில் 8 மிளகை வைத்துக் கொள்ளுங்கள். ஓம் கால பைரவரே போற்றி ஓம் என்றோ ஓம் கால பைரவரே நமஹ என்றோ அல்லது உங்களுக்கு ஏதாவது காலபைரவரின் மந்திரம் தெரியும் பட்சத்தில் அந்த மந்திரத்தை கூற வேண்டும். ஒவ்வொரு முறை மந்திரத்தை கூறும் பொழுதும் ஒவ்வொரு மிளகாக விளக்கிற்குள் போட வேண்டும். இப்படி எட்டு முறை மந்திரத்தை கூறி எட்டு மிளகையும் விளக்கிற்குள் போட்டுவிட்டு சொர்ண ஆகர்சன பைரவ அஷ்டகத்தை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி யார் ஒருவர் வளர்பிறை அஷ்டமி தினத்தில் காலபைரவரை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு கால பைரவரின் அருளால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: பண வசியத்தை அதிகரிக்கும் மருதாணி தீபம்
ஒரே ஒரு தீபம் கால பைரவரை நினைத்து ஏற்றுவதன் மூலம் நம்முடைய செல்வ செழிப்பை அதிகரிக்கும். முழு மனதோடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.