- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் அதிகரிக்க பரிகாரம்

செல்வ வளம் அதிகரிக்க பரிகாரம்

- Advertisement -

நம் ஒவ்வொருவரும் படாத பாடு பட்டு கொண்டு இருப்பது பணத்தை சம்பாதிப்பதற்காக தான். பலரும் பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணத்தை நிலையாக வீட்டிலேயே வைத்துக் கொள்வதற்கு இயலாத ஒரு சூழ்நிலை உண்டாகும். அந்த சூழ்நிலையில் இருந்து வெளியில் வருவதற்கும், செல்வ வளம் ஏற்படுவதில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கவும், கண் திருஷ்டி போன்ற எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் இருந்து விலகவும் வெள்ளிக்கிழமை அன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ வளம் அதிகரிக்க பரிகாரம்

ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் தெய்வ நடமாட்டம் என்பது இருக்கும். தெய்வ நடமாட்டம் இருக்கும் வீட்டில் எந்தவித குறையும் இருக்காது. பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள், கல்வி, வீரம் என்று அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்து இருக்கும். அப்படி அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்து இருப்பதற்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகுவதற்கும் செய்யக்கூடிய ஒரு சூட்சுமான பரிகாரத்தை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:00 மணியிலிருந்து 6:30 மணிக்குள் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு சுத்தமான பசு நெய் ஒரு ஸ்பூன் வேண்டும், ஐந்து என்ற எண்ணிக்கையில் பச்சை கற்பூரம் வேண்டும், ஒரு நல்ல ஏலக்காய் வேண்டும். இந்த பரிகாரத்தை பூஜையறையில் செய்வதற்கு பதிலாக வீட்டின் மையப் பகுதியான வரவேற்பு அறையில் செய்ய வேண்டும்.

ஒரு பித்தளை தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே உங்களுடைய குலதெய்வத்தையும் விநாயகப் பெருமானையும் நினைத்துக் கொண்டு ஐந்து பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். இதற்கு மேலே நெய்யை ஊற்றுங்கள். பச்சை கற்பூரத்தை திருப்பி வைத்து பின்புறத்திலும் நெய் நனையும்படி கூற்ற வேண்டும். இப்பொழுது ஒரு தீப்பெட்டியை பயன்படுத்தி பச்சை கற்பூரத்தை எரிய விடுங்கள்.

- Advertisement -

இது எரிய ஆரம்பிக்கும் பொழுது இதற்கு மேல் ஒரு நல்ல ஏலக்காயாக பார்த்து ஒரு ஏலக்காயை போட்டு விடுங்கள். இது அனைத்தும் நன்றாக தெரிந்து முடியட்டும். பிறகு இதில் இருக்கக்கூடிய சாம்பலை எடுத்து ஒரு சின்ன டப்பாவில் போட்டு பூஜையில் வைத்து விடுங்கள். ஏதாவது முக்கியமான காரியங்களுக்கு செல்கிறீர்கள் என்னும் பட்சத்திலோ பணம் தொடர்பான காரியங்களில் ஈடுபட போகிறீர்கள் என்னும் பட்சத்திலோ இந்த சாம்பலை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு செல்ல வேண்டும்.

இப்படி செல்வதன் மூலம் எந்த காரியத்தை செய்ய செல்கிறோமோ அந்த காரியத்தில் தடைகள் எதுவும் இன்றி நிறைவாக நடைபெறும். மேலும் அதனால் செல்வ வளமும் அதிகரிக்கும். இந்த பச்சை கற்பூர தீபத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியாக ஏற்றுபவர்களுடைய வீட்டில் எந்தவித எதிர்மறை ஆற்றல்களும் வராது. இந்த தீபம் எரியும் பொழுது உங்களுடைய பணத் தேவைகளை மகாலட்சுமி தாயாரை நினைத்து அவர்களிடம் கூறுவது போல் இந்த கற்பூரம் எரிவதை பார்த்து கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:வேண்டுதலை நிறைவேற்றும் பெருமாள் வழிபாடு

மகாலட்சுமி தாயார் மற்றும் குலதெய்வத்தின் அருளோடு ஏற்றக்கூடிய இந்த தீபமானது நம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் நீக்கி பண தேவைகளை பூர்த்தி செய்து செல்வ வளத்தை அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்