வியாழக்கிழமை என்றாலே அது குரு பகவானுக்கும் குபேர பகவானுக்கும் உரிய நாள் என்று நம் அனைவருக்குமே தெரியும் அதுவும் அன்றைய தினத்தில் பூச நட்சத்திரம் என்பது வருகிறது. இந்த நாளை நாம் குரு புஷ்ய யோக நாள் என்று கூறுவோம். இந்த நாளில் லட்சுமி குபேர பூஜை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிப்பதோடு அந்த செல்வம் நிலையாக நிலைத்து இருக்கும். அந்த லட்சுமி குபேர பூஜை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
லட்சுமி குபேர பூஜை
ஒருவருக்கு செல்வம் பெருக வேண்டும் என்றால் அவர் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். செல்வம் பெருகினால் மட்டும் போதுமா? அந்த செல்வம் நிலையாக நிலைத்து இருக்க வேண்டும் அல்லவா? அதற்கு குபேர பகவானின் அருள் என்பது வேண்டும். அதனால் தான் பலரும் செல்வ செழிப்பு உயர வேண்டும் என்பதற்காக லஷ்மி குபேர பூஜையை செய்கிறார்கள். நாமும் குரு புஷ்ய யோக நாள் அன்று வீட்டிலேயே லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.
இந்த வழிபாட்டை மாலை 5:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக எட்டு மணிக்கு மேல் செய்வது அதீத பலனை தரும். ஏனென்றால் அந்த நேரம் குரு ஹோரையாக திகழ்கிறது. வீட்டு நிலை வாசலில் இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து அரை மணி நேரம் எரிய விடுங்கள். பிறகு இந்த அகல் விளக்குகளை எடுத்து பூஜையறையில் வைத்து பிறகு குபேர வழிபாட்டை செய்ய வேண்டும். குபேர வழிபாடு நிறைவடையும் வரை இந்த தீபம் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு பார்த்தவாறு குபேரரின் படத்தையோ அல்லது குபேரரின் எந்திரத்தையோ வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். 108 என்ற எண்ணிக்கையில் ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை 108 எண்ணிக்கை இல்லை என்பவர்கள் குறைவாக தான் நாணயம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் அதற்கு பதிலாக வில்வ இலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். குபேரரின் 108 போற்றிகளை கூறி ஒவ்வொரு நாணயமாக அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று காலையில் ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் சுக்கிர ஹோரை என்பது இருக்கும். அந்த நேரத்தில் மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். பிறகு வெள்ளை மொச்சை நெய்வேத்தியமாக வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இப்படி குபேரரை வியாழக்கிழமையும் லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமையும் வழிபாடு செய்வதன் மூலமே லஷ்மி குபேர பூஜை என்பது பூர்த்தியடையும்.
இதையும் படிக்கலாமே: குபேர சம்பத்து பெற குபேர சஷ்டி வழிபாடு
இந்த முறையில் ஒருவருடைய வீட்டில் லட்சுமி குபேர பூஜை என்பது நடைபெற்றால் அவர்களுக்கு செல்வ செழிப்பில் எந்த வித குறையும் இருக்காது நிறைவான செல்வத்தைப் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.