- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வம் பெருக ஆடிப்பெருக்கில் ஏற்ற வேண்டிய தீபம்

செல்வம் பெருக ஆடிப்பெருக்கில் ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்புக்குரிய நாளாகவே கருதப்படுகிறது. அதில் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக திகழ்வது ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் பெருகிக்கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் சனிக்கிழமை என்பதால் மகாவிஷ்ணு மகாலட்சுமிக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அதனால் நாளைய தினம் மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு செல்வம் பெருகிக்கொண்டே செல்லும். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாருக்குரிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி மாதம் பெண் தெய்வத்திற்கு என்று சிறப்பு மிகுந்த மாதமாக கருதப்படுகிறது. மகாலட்சுமிக்குரிய கிழமையாக வெள்ளிக்கிழமை திகழ்ந்தாலும் மகாவிஷ்ணுவிற்குரிய கிழமையாக சனிக்கிழமை திகழ்கிறது. அதனால் சனிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது என்பது சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆடிப்பெருக்கும் சனிக்கிழமையும் சேர்ந்து வருவதால் அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய வழிபாட்டின் பலன் என்பது மிகவும் அதிகமாகவே நமக்கு கிடைக்கும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளால் செல்வவளத்தை பெருக்கக் கூடிய ஒரு வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாளைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாரின் படத்தையும் சுத்தம் செய்து அவளுக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு தட்டை எடுத்து அந்த தட்டிற்கு சந்தனம் குங்குமம் வைத்து அந்த தட்டில் சிறிது பச்சரிசியை போட்டு ஒரு சொட்டு நெய் மற்றும் மஞ்சள் போட்டு நன்றாக கலந்து அட்சதையாக தயார் செய்து கொள்ளுங்கள்.

இதற்கு மேலே ஒரு கைப்பிடி அளவு துளசி இலையையும் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். நடுவில் மட்டும் வைக்க வேண்டாம். இதற்கு அடுத்தார் போல் இதில் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் போன்ற நாணயங்களை வைக்க வேண்டும். வீட்டில் சிறிய அளவில் இருக்கக்கூடிய தங்கம், வெள்ளி போன்ற பொருட்களையும் வைக்கலாம். அந்த பொருட்களை நம் உபயோகப்படுத்தி இருந்தால் உப்பு தண்ணீரில் கழுவி பிறகு வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி வைத்த பிறகு நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படி தீபம் ஏற்றி வைத்த பிறகு மகாலட்சுமி தாயாருக்குரிய மந்திரங்களையோ அல்லது பாடல்களையோ மனதார படித்து “இன்றைய தினம் நான் செய்யக்கூடிய இந்த வழிபாட்டால் எங்கள் வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும்” என்ற வேண்டுதலையும் மகாலட்சுமி தாயாரிடம் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே ஆடிப்பெருக்கு வாராகி அம்மன் வழிபாடு

இந்த முறையில் தீபம் ஏற்றி மகாலட்சுமி தாயாரை நாளைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருளால் செல்வ வளம் பெருகும். எந்த வித குறையும் இல்லாத நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.

சற்று முன்