சித்திரை வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார் வழிபாடு

mahalakshmi archanai
- Advertisement -

சித்திரை மாதம் என்றாலே விசேஷமானது தான் அதிலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி சித்திரை மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை எல்லாம் பெண் தெய்வங்களுக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. எப்படி ஆடி மாதம், தை மாதம் எல்லாம் அம்மன் வழிபாட்டிற்கு உரியதோ அதே போல சித்திரை மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உரியது தான்.

ஒவ்வொரு உயிரையும் படைப்பது பிரம்மாவாக இருந்தாலும், அந்த உயிரை பிரசிவிக்கக் கூடிய தன்மையை கொண்டவள் பெண். ஆகையால் தான் பெண்களையும் பெண் தெய்வங்களையும் சிறப்பிக்கும் விதமாக நாம் பல வழிபாட்டு முறைகளையும் பூஜைகளையும் அனுஷ்டிக்கிறோம்.

- Advertisement -

அத்தகைய விசேஷமான தன்மைகளைக் கொண்ட பெண் தெய்வமான மகாலட்சுமி தாயாரை இந்த மாதத்தில் நம்முடைய செல்வ வளங்களை பெருக்கிக்கொள்ள எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செல்வ வளத்தை அதிகரிக்க சித்திரை வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டிய மகாலட்சுமி தாயார் வழிபாடு

வெள்ளிக்கிழமை என்றாலே அன்னையின் வழிபாட்டிற்கு உரிய நாள் தான் அதிலும் சித்திரை மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது இன்றைய தினத்தில் நாம் அன்னையை வழிபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டு செய்வதற்கு காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலே எழுந்து செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் ஆறிலிருந்து ஏழு மணியிலான சுக்கிர ஹோரை நேரத்திலாவது செய்து விடுங்கள். அன்னைக்கு நல்ல மனம் மிக்க மலர்களை சற்றுமுன் அதேபோல் நல்ல மனம் மிக்க ஊதுபத்தி போன்றவற்றையும் ஏற்றி வையுங்கள்.

இந்த வழிபாடு செய்யும் நேரத்தில் பூஜையறை எத்தனை மணமாக உள்ளதோ அன்னை அவ்வளவு மகிழ்ச்சி அடைவார். அன்னைக்கு நெய்வேதியமாக சர்க்கரை பொங்கல் பால் பாயாசம் போன்ற ஏதாவது ஒன்றை வைத்து விடுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு முன்பு இரண்டு நெய் தீபத்தை ஏற்றி வையுங்கள். இப்பொழுது உங்கள் வீட்டில் மகாலட்சுமி தாயார் சிலை அல்லது திருஉருவப்படம் எது இருந்தாலும் அதற்கு இந்த அர்ச்சனையை செய்யலாம்.

- Advertisement -

நாளைய தினம் மூன்று பொருட்களில் அர்ச்சனை செய்வது விசேஷமானதாக சொல்லப்படுகிறது. ஒன்று குங்கும அர்ச்சனை மற்றொன்று அட்சதை அர்ச்சனை. கொஞ்சம் பச்சரிசியில் மஞ்சள் கலந்து அர்ச்சதை தயார் செய்து கொள்ளுங்கள். அடுத்தது அன்னைக்கு மிகவும் உகந்த மல்லிகை அர்ச்சனை. இந்த மூன்று பொருட்களாலும் செய்தாலும் விசேஷம் அல்லது ஏதாவது ஒன்றிலாவது செய்யுங்கள்.

அன்னைக்கு அர்ச்சனை செய்யும் போது மகாலட்சுமி தாயார் அஷ்டோத்திரத்தை சொல்ல வேண்டும் அது தெரியாதவர்கள் ஓம் மகாலட்சுமி நமக என்ற இந்த ஒரு மந்திரத்தையாவது அர்ச்சனை செய்யும் போது சொல்லிக் கொண்டே இருங்கள். இந்த அர்ச்சனை செய்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

நாளைய தினம் வெள்ளிக்கிழமை அன்னைக்கு எப்படி உகந்த தினமோ அதே போல சுக்கிரனுக்கும் உகந்த தினம். நாளைய தினத்தில் அன்னையை இந்த முறையில் வழிபட்டு மகிழ்விக்கும் போது நமக்கு சுக்கிரனுடைய அருளும் கிடைக்கும். சுக்கிரனுடைய அருள் கிடைத்தால் போதும் நம்முடைய வாழ்க்கையில் பொன் பொருள் செல்வம் பதவி அந்தஸ்து என அனைத்தையும் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க பரிகாரம்

ஆகவே நாளைய அற்புதமான தினத்தை தவிர விடாமல் அன்னையை இப்படி வழிபட்டு நம்முடைய வாழ்க்கையின் தரத்தை பல மடங்கு உயர்த்திக் கொள்ள வழி தேடி கொள்ளலாம். இந்த வழிபாட்டு முறையில் உங்களுக்கு விருப்பம் இருப்பின் நீங்களும் இது போல செய்து பலன் அடையலாம் என்ற கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -