இந்த தைத் திருநாளை தவற விட்டாமல் இதையெல்லாம் செய்பவர்களின் இல்லத்தில் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக வாசம் செய்து, போதும் போதும் என்கிற அளவிற்கு சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவார்.

- Advertisement -

தை திருநாள் தமிழர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையே சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடுவது தான். இந்த தை பொங்கல் நாளை உத்திராயண காலம் என்றும் சொல்லுவார்கள், அதாவது சூரிய பகவான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் புண்ணிய காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி சூரிய பகவானுக்கே உரிய நாளான இந்த ஞாயிற்றுக் கிழமையில் அவரை வணங்கக் கூடிய இந்த பண்டிகை வந்திருப்பது மிக மிக விஷேசமானது. இந்த நாளில் நாம் செய்யும் எந்த காரியங்கள், நம்முடைய செல்வ வளத்தை பன்மடங்கு பெருக்கி தரும் என்பதையும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செல்வம் பெருக செய்ய வேண்டிய தானம்
இந்த நல்ல நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் பித்ருகளை வணங்குவது. சூரிய பகவானுக்கு இன்னொரு பெயர் பித்ரு காரகன் அவரை வணங்கும் இந்த வேளையில் பித்ருக்களையும், நாம் வணங்கும் போது ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஆசீர்வாதங்களும் நமக்கு கிடைத்து, நம் வாழ்க்கை மென்மேலும் சிறக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்துடன் சேர்த்து இந்த நாளில் நாம் செய்யும் இந்த தானங்கள் நம்மை வறுமை நிலையிலிருந்து மாற்றி செல்வ நிலைக்கு கொண்டு செல்லும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

- Advertisement -

இந்த நாளில் நாம் மிக மிக கட்டாயமாக செய்ய வேண்டியது தயிர் தானம். இன்றைய நாளில் இந்த தானத்தை நாம் பிறருக்கு கொடுத்தாலும் சரி, பிறரிடம் இருந்து நாம் வாங்கினாலும் சரி, இரண்டுமே நல்லது தான். இந்த தயிரானது மகாலட்சுமி வம்சம் செய்யும் ஒன்று, இந்த நாளில் இதை கொடுத்து வாங்கும் போது அவர்களின் பரிபூரண ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அடுத்தது வஸ்திர தானம் இல்லாத ஏழை எளியோருக்கு வஸ்திர தானம் செய்யும் போது நம் குடும்பத்துடன் சீரும் சிறப்புமாக வாழ்த்துடன் நம் சந்ததியும் வாழும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அது மட்டுமின்றி இன்றைய நாளில் இல்லாத ஏழை எளியோருக்கு உணவு வாங்கி கொடுக்க வேண்டும். இந்த உணவு தானமானது நமக்கும், நம் சந்ததியினருக்கும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கூட வறுமை இல்லா நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுவும் இந்த நாளில் செய்யும் இவைகள் அனைத்துமே மிக மிக விசேஷமானவை.

இதையும் படிக்கலாமே: சனி பகவானுக்கு அவரது மனைவி அன்று கொடுத்த சாபம் தான் நம்மையும் தொடர்கின்றதா? என்ன கதை இது? சனி பகவானை ஏன் நேராக பார்க்கக்கூடாது?

யாராவது ஒருவருக்கு தயிரோ, உணவோ வாங்கி தரக் கூடிய நிலையில் இல்லை என்றாலும் கொஞ்சம் சிரமப்பட்டு இந்த நாளில் இந்த தானங்களை செய்து, இனி வரும் நாட்களில் உங்கள் சந்ததியினர் வரை துன்பமில்லாமல் செல்வ செழிப்புடன் வாழ இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -